மது விருந்தின் போது தகராறு காரணமாக வெட்டப்பட்ட ரவுடி! போலீசாரின் அதிரடி!

Photo of author

By Hasini

மது விருந்தின் போது தகராறு காரணமாக வெட்டப்பட்ட ரவுடி! போலீசாரின் அதிரடி!

Hasini

Rowdy cut due to dispute during wine party! Police Action!

மது விருந்தின் போது தகராறு காரணமாக வெட்டப்பட்ட ரவுடி! போலீசாரின் அதிரடி!

திருவள்ளூர் மாவட்டத்தில், உள்ள கும்மிடிப்பூண்டி அடுத்த புது கும்மிடிப்பூண்டி, அருகே உள்ள பாலீஸ்வரன் கண்டிகை பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி ரிஸ்க் பாஸ்கர் ஆவார். 35 வயதான இவர் மீது பல்வேறு கொலை மற்றும் கொள்ளை வழக்குகள் சென்னை புறநகர் பகுதிகளில் உள்ள போலீஸ் நிலையங்களில் நிலுவையில் வைக்கப்பட்டுள்ளன.

இவர் குண்டர் சட்டத்தில் ஏற்கனவே கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் கும்மிடிப்பூண்டி சிப்காட் காவல் நிலையத்தில் வழிப்பறி வழக்கில் கைது செய்யப்பட்டு, சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார். அதன்பின் பாஸ்கர் அங்கிருந்து திருச்சி மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார். இந்த நிலையில் கடந்த வாரம் தான் திருச்சி மத்திய சிறையில், இருந்து அவர் வெளியே வந்துள்ளார்.

இதனை தொடர்ந்து பாலீஸ்வரன் கோவில் தெரு எதிரே உள்ள காலி மைதானத்தில் தனது நண்பர்களான 28 வயதான ஜெகன் மற்றும் 28 வயதான கார்த்திக் மற்றும் பிரேம்குமார் ஆகியோர்களுக்கு, ரிஸ்க் பாஸ்கர் மது விருந்து வைக்க ஏற்பாடு செய்துள்ளார். அப்போது போதை உச்சம் அடைந்த நிலையில், யார் பெரிய ரவுடி என்பதில் அனைவருக்கும் ஒரு போட்டி ஏற்பட்டுள்ளது. அப்போது ஒருவருக்கொருவர் பேச்சுவார்த்தையை தொடங்க, அது கைகலப்பாக மாறியுள்ளது.

அப்போது மற்றொரு ரவுடியான ஜெகன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் பாஸ்கரை வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் கழுத்து அறுபட்டும், தலையில் பலத்த காயத்துடனுன் கவலைக்கிடமான நிலையில் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாஸ்கரின் நண்பர்களான ஜெகன் மற்றும் கார்த்திக் ஆகிய 2 பேரையும் முதற்கட்டமாக கைதுசெய்துள்ளனர்.