வெள்ளை பேப்பரில் கையெழுத்திடுகிறேன்! திமுக அமைச்சர் மா.சுப்ரமணியனின் ஆவேசமான பேச்சு!

0
63
Sign the white paper! DMK Minister Ma Subramaniam's impassioned speech!
Sign the white paper! DMK Minister Ma Subramaniam's impassioned speech!

வெள்ளை பேப்பரில் கையெழுத்திடுகிறேன்! திமுக அமைச்சர் மா.சுப்ரமணியனின் ஆவேசமான பேச்சு!

கொரோனா தொற்றின் இரண்டாம் அலையானது மக்களை பெருமளவு பாதித்தது.கொரோனா இரண்டாம் அலையின் ஆரம்பக்கட்ட காலத்தில் மக்கள்  கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளவும் முன் வரவில்லை.மக்கள் தடுப்பூசி போட முன் வராததால் அரசாங்கம் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தியது.அதுமட்டுமின்றி அச்சமையம் கொரோனாவின் இரண்டாவது அலையானது அதிகளவு தீவீரமடைந்து வந்துது.பல உயிர்களையும் இழக்க நேரிட்டது.அதனையடுத்து மக்கள் தங்களின் உயிர்களை காப்பற்றிக்கொள்ள தடுப்பூசி போட முன் வந்தனர்.தற்போது அதிகப்படியான மக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்வதால் தடுப்பூசி பற்றாக்குறை ஏற்பட ஆரம்பித்துவிட்டது.

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சென்னை கிண்டியிலுள்ள கிங்ஸ் மருத்துவமனையின் கொரோனா புணர்வாழ்வு கையேட்டை வெளியிட்டார்.தற்போது தொற்று அதிகளவு தீவீரமடைந்து வருவதால் பல நிறுவனங்கள் உதவி கரம் நீட்டியுள்ளது.அந்தவகையில்.டோக்கியோ தமிழ் சங்கம் மற்றும் தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் 20 ஆக்சிஜன் செறிவூட்டிகளை வழங்கினர்.அத்தோடு 6 லட்சம் மதிப்புள்ள மருத்துவ உபகரணங்களை  அந்நிறுவனம் சைதாப்பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு வழங்கியது.அதனை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பெற்றுக்கொண்டார்.

அவ்வாறு பெற்றுக்கொண்டு செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,தமிழகத்திற்கு தற்போது வரையில் 1,57,76,550 கொரோனா தடுப்பூசிகள் வந்துள்ளது.தற்போது வரை 1,58,78,500 பேருக்கு கொரோனா தடுப்பூசியை செலுத்தியுள்ளோம்.தற்போது வரை 63,460 தடுப்பூசிகள் மீதமுள்ளது.இந்த ஆட்சியில் தடுப்பூசியானது மிகவும் கவனமாக செலுத்தப்பட்டு வருகிறது.அவ்வாறு கவனம் செலுத்தி போடப்பட்டதால் கூடுதலாக 1.25 லட்சம் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.இதே சென்ற ஆட்சியில் 4 லட்சம் தடுப்பூசிகள் வீணானதாக குற்றம்சாட்டி அமைச்சர் மா. சுப்பிரமணியன் பேசினார்.மேலும் அவர் கூறியதாவது,தடுப்பூசிகள் வரும் விவரம்,போடப்படும் விவரம் மற்றும் கையிருப்பு விவரம் ஆகியவற்றை தினந்தோறும் கூறி வருகிறேன்.இதில் எந்தவித மறைமுகமும் இல்லை எனக் கூறி விட்டு சற்று ஆவேசமாக,வேண்டுமென்றால் வெள்ளை காகிதத்தில் கையெழுத்திட்டுக் கூட தருகிறேன் என்றார்.நாளை மறுநாள் டெல்லி சென்று ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சரை சந்திக்கபோவதாக கூறினார்.மேலும் அவரிடம் எய்ம்ஸ் மருத்துவமனை குறித்தும் மற்றும் கூடுதலாக தேவைப்படும் கொரோனா தடுப்பூசி குறித்தும் பேசப்போவதாக தெரிவித்தார்.