ரூ 1000 வழங்கும் பணி தொடக்கம்! தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு!

Photo of author

By Parthipan K

ரூ 1000 வழங்கும் பணி தொடக்கம்! தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு!

Parthipan K

ரூ 1000 வழங்கும் பணி தொடக்கம்! தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு!

கடந்த சில வாரங்களாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகின்றது.அதன் காரணமாக மக்களின் இயல்பு வாழ்கை பெரிதும் பாதிப்படைந்தது.கனமழையின் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டனர்.

அதனைதொடர்ந்து மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பகுதியில் 122 ஆண்டுகள் இல்லாத அளவிற்கு 6 மணி நேரத்தில் 44 செ.மீ மழை பதிவானது.அதனால் மக்கள் வசிக்கும் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்து.

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்திருந்த நிலையில் அங்கு மழைநீர் தேங்கியுள்ள பகுதிகள் சீரமைக்கப்பட்டது.அதன் பிறகு பள்ளிகள் வழக்கம் போல் செயல்படத்தொடங்கியுள்ளது.

அதனை முதல்வர் நேரில் ஆய்வு செய்த பிறகு மழையினால் பெரிதும் பாதிப்படைந்த மக்களின் குடும்ப அட்டைதாரர்கள் ஒவ்வொருவருக்கும் ரூ 1000 வழங்க வேண்டும் என உத்தரவிட்டார்.அதனைதொடர்ந்து சீர்காழி மற்றும் தரங்கம்பாடி தாலுக்கா குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ 1000 நிவாரண உதவி தொகை இன்று முதல் அந்த பகுதியில் உள்ள அவரவர்களின் நியாய விலை கடைகளில் வழங்கப்படும் என மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.