தமிழகத்தில் அசுர வளர்ச்சியில் பாஜக! அண்ணாந்து பார்க்கும் திராவிட கட்சிகள்! எச்சரிக்கும் முக்கிய நபர்!

0
283

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குறிய உதவியாளராக இருந்தவர் பூங்குன்றன் ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு அதிமுக கட்சியில் இருந்து ஒதுங்கி இருந்து வருகிறார்.

ஆனாலும் அவ்வப்போது அதிமுக தொடர்பான கருத்துக்களை தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு வருகிறார். அதோடு, அதிமுகவில் உள்ள பிரச்சினைகளையும் அதில் சுட்டிக்காட்டி வருகிறார்.

அந்த விதத்தில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உதவியாளரான பூங்குன்றம் வெளியிட்டுள்ள முகநூல் பதிவில் தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி வளர்ந்து கொண்டிருக்கிறது என்பதில் இன்று யாருக்கும் எந்த விதமான மாற்று கருத்தும் இருக்க முடியாது.

பாரதி ஜனதா கட்சி இல்லாமல் இனி யாரும் தமிழகத்தில் ஆட்சியை பிடிக்க முடியாது என்று சொல்லும் அளவிற்கு அந்த கட்சி வளர்ந்து வருகிறது. ஒரு கட்சி வளர்கிறது என்றால் ஏதோ ஒரு கட்சி தேய்கிறது என்று தானே அர்த்தம்?

ஒன்று திராவிட கட்சிகளில் இருக்கும் உறுப்பினர்கள் இன்று திசை மாறி பாரத ஜனதா கட்சிக்கு சென்று கொண்டிருக்கிறார்கள், இல்லை புதிய உறுப்பினராக இணையும் இளைஞர்கள் திராவிட கட்சிகளை விட்டுவிட்டு வளரும் கட்சியான பாரதிய ஜனதா கட்சியில் இணைந்து வருகிறார்கள் என்று தானே புரிந்து கொள்ள முடிகிறது.

பாரதிய ஜனதா கட்சி தமிழகத்தில் விஸ்வரூபம் எடுக்கும் போது ஏதோ ஒரு பெரிய கட்சி சிறிய கட்சியாக மாறப்போகிறது. அது எந்த கட்சியாக இருக்கும் என்பதை தெரிந்து கொள்ளத்தான் இன்று மக்கள் ஆர்வமாக இருக்கிறார்கள்.

அதிமுகவில் இருந்து தெரிந்தவர்கள் இணைந்தால்தான் அதிமுக வலுமையான கட்சியாக மாறும் என்று தொண்டர்கள் நினைக்கிறார்கள்.

அப்படி அவர்கள் நினைக்க காரணம் அவர்களுக்கு பதவி பணத்தில் ஆசை இல்லை முக்கியமாக அவர்களிடம் சுயநலம் இல்லை கட்சியின் நல மட்டுமே அவர்களுக்கு முக்கியம் அப்படிப்பட்ட தொண்டர்கள் இனிமேலும் வேடிக்கை பார்ப்பது என்பது தமிழகத்தின் வளர்ச்சிக்கு குந்ததகத்தை விளைவித்து விடும்.

தங்களுடைய மனசாட்சியை தொட்டு சொல்லுங்கள்? அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தற்போது வளர்ந்து கொண்டிருக்கிறதா? தற்போது நிலவும் சூழ்நிலைகள் அதிமுகவிற்கு வளர்ச்சியை தருமா? என்று நடப்பவற்றை சீர் தூக்கி பார்த்து நீங்களே முடிவெடுங்கள் என்று தெரிவித்துள்ளார்.

நிர்வாகிகளுக்கு ஒன்றை மட்டும் இந்த நேரத்தில் நான் சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். முதலில் தங்களுடைய சுயநலத்தை விட்டு விடுங்கள் தங்களை வளர்த்தெடுத்த கட்சிக்கு ஏதாவது நல்லது செய்ய வேண்டும் என்று புலம்பி கொண்டு இருக்கிறீர்களே தவிர தலைவர்களிடம் எடுத்துச் சொல்ல ஏன் தயங்குகிறீர்கள்.

தமிழகத்தை பொறுத்தவரையில் இன்று யாரை எதிர்க்கட்சியாக மக்கள் பார்க்கிறார்கள் என்பது தங்களுக்கு நன்றாக தெரியும், தயவு செய்து கட்சியின் வளர்ச்சியை மட்டுமே கருத்தில் வைத்து தலைவர்களுடன் பேசுங்கள். உண்மை நிலை தொடர்பாக எடுத்துச் சொல்லுங்கள். கட்சி இருக்கும் வரை தான் தங்களுக்கு மதிப்பு இருக்கும் என்பதை எப்போதும் மறந்து விடாதீர்கள்.

தொண்டர்களுக்கும் நிர்வாகிகளுக்கும் நான் சொல்லிக் கொள்வதெல்லாம் ஒன்றுதான் எல்லோருடனும் நான் பயணித்திருக்கிறேன்.

ஆகவே எனக்கு கழகம் தான் முக்கியம் அம்மாவிடம் இருந்த சமயத்தில் பார்க்கும் பார்வையில் நான் இன்றும் உங்களை பார்க்கிறேன். இவர் வேண்டியவர், அவர் வேண்டியவர் என்று நான் ஒருபோதும் பார்ப்பதில்லை.

இவர் அணி என்று ஒரு பிரிவினரும், அவர் அணி என்று ஒரு உறவினரும் பிரிந்து கிடக்கின்ற இந்த சூழ்நிலையில், சுயநலம் இல்லாமல் கட்சியை ஒருங்கிணைக்கும் அணி என்ற ஒன்று உருவாக வேண்டியது காலத்தின் கட்டாயம்.

ஒருங்கிணைக்கும் அணிக்கு என்னை தர நான் தயாராக இருக்கின்றேன். அதற்கு தங்களை தர நீங்களும் தயாராக வேண்டும் என்பதே என்னுடைய வேண்டுதல். அதுவே இதய தெய்வங்களுக்கு நாம் செலுத்தும் நன்றிகான காணிக்கை என பூங்குன்றன் தெரிவித்துள்ளார்.

Previous articleரூ 1000 வழங்கும் பணி தொடக்கம்! தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு!
Next articleதேர்தல் ஆணையர் தேர்வில் கொலீஜியம் குழு தலையீடா? மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் பரிந்துரை!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here