பெண்கள் மற்றும் கல்லூரி மாணவிகளுக்கு வழங்கப்படும் ரூ.1000.. மக்களிடம் இருந்து திமுக அரசு கொள்ளையடித்த பணம் – சீமான் கருத்து!!
கடலூர் மாவட்டம் திருப்பாதிரிப்புலியூரில் நாம் தமிழர் கட்சியின் நாடாளுமன்ற தேர்தல் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் பங்கேற்ற அக்கட்சியின் தலைவர் சீமான் அவர்கள் கட்சியின் வளர்ச்சி பணிகள்,நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரம் குறித்து கட்சி நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசித்தார்.பின்னர் செய்தியர்களை சந்தித்த அவர் திமுக அரசால் மகளிர் உரிமைத்தொகை மற்றும் கல்லூரி மாணவிகளுக்கு மாதம் 1000 கொடுக்கப்பட்டு வரும் திட்டம் குறித்து கருத்து கூறினார்.அதாவது தமிழ்நாட்டின் பெண்களோ,கல்லூரி மாணவிகளோ இந்த 1000 ரூபாய் பணத்தை கொடுங்கள் என்று கேட்கவில்லை.அதற்காக போராட்டம் எதுவும் நடத்தவில்லை.திமுக அரசே தான் 1000 ரூபாய் தருகிறோம் என்று சொன்னது என சீமான் கூறினார்.
மேலும் இந்த திட்டத்தை யாரும் எதிர்க்க வில்லை.யாரும் குறை கூற வில்லை என்று திமுக தலைவரும்,தமிழக முதல்வருமான திரு.ஸ்டலின் கூறி இருக்கிறார்.ஆமாம் பெண்கள் எல்லோரும் இந்த திட்டத்தை வரவேற்கிறார்கள் தான்.காரணம் இந்த பணம் மக்களிடம் இருந்து பெறப்பட்ட பணம்.மக்களிடம் இருந்து திமுக அரசு கொள்ளையடித்த பணம்.அதனால் எங்கள் பணத்தை திரும்ப எங்களுக்கே வழங்குவதால் யாரும் இந்த திட்டத்தை எதிர்க்கவில்லை.இந்த அரசு மக்களுக்கு எதையும் உருப்படியாக செய்யவில்லை.மக்களிடம் இருந்து சுரண்டப்பட்ட பணத்தில் இந்த 1000 ரூபாய் பணமாவது பெண்களுக்கு கிடைக்கட்டும் என்று அனைவரும் கூறுகிறார்கள் என்று சீமான் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர் ஆளும் திமுக அரசு சாமானிய மக்கள் ஒரு நாளைக்கு 30 ரூபாய் கூட சம்பாதிக்க வக்கு இல்லாதவர்கள் என்று நினைத்து விட்டது.அதனால் தான் ஒரு நாளைக்கு 30 ரூபாய் என்ற அடிப்படையில் மாதம் ஆயிரத்தை “கலைஞர் உரிமைத்தொகை” என்ற பெயரில் பெண்களுக்கு வழங்குகிறது என்று விமர்சித்தார்.தொடர்ந்து என் வீட்டில் வேலை பார்க்கும் பெண்களுக்கு ஒரு நாளைக்கு 500 ரூபாய் சம்பளம் கொடுக்கிறேன்.ஆண்களுக்கு ஒரு நாள் கூலியாக 500 ரூபாய் பணத்துடன் ஒரு குவாட்டரும் சேர்ந்து கொடுக்கிறேன்.இதற்காக வீட்டில் பெட்டி பெட்டியாக குவாட்டர் பாட்டிலை வாங்கி குவித்து வைத்து இருக்கிறேன்.இப்படி பணத்துடன் குவாட்டர் பாட்டில் கொடுத்தால் என் வீட்டிற்கு ஆண்கள் வேலைக்கு வருகிறீர்கள் என்று சீமான் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறினார்.இந்நிலையில் தற்பொழுது சீமானின் இந்த வெளிப்படையான பேச்சு அனைவரின் மத்தியிலும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.