மங்கு, தேமல், அரிப்பு, அலர்ஜி, படர்தாமரைக்கு தீர்வு தரும் குப்பைமேனி சோப்..!

0
207
#image_title

மங்கு, தேமல், அரிப்பு, அலர்ஜி, படர்தாமரைக்கு தீர்வு தரும் குப்பைமேனி சோப்..!

சருமத்தில் ஏற்படக் கூடிய அனைத்து வித பாதிப்புகளையும் குணமாக்க குப்பைமேனி சோப் பயன்படுத்துங்கள்.

தேவைப்படும் பொருட்கள்:-

1)குப்பைமேனி இலை
2)காஸ்ட்டிக் சோடா
3)தேங்காய் எண்ணெய்
4)வாசனை திரவியம்(விருப்பப்பட்டால்)

சோப் தயாரிக்கும் முறை….

*ஒரு கப் குப்பைமேனி இலையை சுத்தம் செய்து எடுத்து வைத்துக்கொள்ளவும்.

*இந்த குப்பைமேனி இலையை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மைய்ய அரைத்துக் கொள்ளவும்.

*இதை ஒரு கிண்ணத்திற்கு வடிகட்டி கொள்ளவும்.

*பிறகு ஒரு பிளாஸ்டிக் அல்லது கண்ணாடி கிண்ணத்தில் 1 கப் காஸ்ட்டிக் சோடா சேர்த்து 1 கப் தண்ணீர் ஊற்றி ஒரு கரண்டி கொண்டு கலந்து விடவும்.

*பிறகு அரைத்து வைத்துள்ள குப்பைமேனி சாறு 1 1/2 கப் அளவு சேர்த்து கலந்து விடவும்.

*அடுத்து 6 1/2 கப் அளவு சுத்தமான தேங்காய் எண்ணெய் ஊற்றி நன்கு கலக்கி விடவும்.

*பிறகு விருப்பப்பட்டால் வாசனை திரவியம் சிறிது சேர்த்து கலந்து கொள்ளலாம்.

*இதை அனைத்தையும் நன்கு கலந்த பிறகு ஒரு சோப் மோல்டில் ஊற்றி 8 மணி நேரத்திற்கு நிழலில் காய விடவும்.

*8 முதல் 10 மணி நேரத்திற்கு பிறகு குப்பைமேனி சோப் தயாராகி விடும். இதை சருமத்திற்கு பயன்படுத்தி வந்தால் தோல் தொடர்பான பாதிப்பு அனைத்தும் நீங்கி விடும்.