இரசாயன ஹேர் டைக்கு குட் பாய் சொல்லுங்கள்! இனி இயற்கை ஹேர் டை வீட்டிலேயே தயாரித்து பயன்படுத்துங்கள்!!

0
129
#image_title

இரசாயன ஹேர் டைக்கு குட் பாய் சொல்லுங்கள்! இனி இயற்கை ஹேர் டை வீட்டிலேயே தயாரித்து பயன்படுத்துங்கள்!!

வெள்ளை முடியை கருமையாக்க கெமிக்கல் ஹேர் பயன்படுத்தினால் அவை முடிகளுக்கு பல தீங்குகளை ஏற்படுத்தும்.எனவே கெமிக்கல் டைக்கு மாற்றாக வீட்டில் ஆர்கானிக் ஹேர் டை தயாரித்து தலை முடிகளுக்கு பயன்படுத்துங்கள்.

இந்த ஹேர் டை தலை முடிகளுக்கு எந்த தீங்கும் ஏற்படுத்தாது.வெள்ளை முடி பிரச்சனைக்கும் நிரந்தர தீர்வு கிடைக்கும்.

தேவையான பொருட்கள்:-

1)டீ தூள் – 1 1/2 ஸ்பூன்
2)நீலகிரி தைலம் – 5 துளி
3)ஹென்னா பொடி – 2 ஸ்பூன்
4)ஆம்லா பொடி – 1 ஸ்பூன்

செய்முறை:-

முதலில் அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி சூடாக்கவும்.பிறகு அதில் 1 1/2 ஸ்பூன் டீ தூள் போட்டு நன்கு கொதிக்க விடவும்.

டீ தூள் நிறம் தண்ணீரில் நன்கு இறங்கும் வரை கொதிக்க விட்டு ஒரு கிண்ணத்திற்கு வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.

அதன் பின்னர் 2 அல்லது 3 தேக்கரண்டி ஹென்னா(மருதாணி) பொடி சேர்த்து நன்கு கலக்கவும்.பிறகு அதில் ஆம்லா(பெரு நெல்லிக்காய்) பொடி 1 தேக்கரண்டி சேர்த்து பேஸ்ட் போல் நன்கு கலக்கி கொள்ளவும்.

பிறகு அதில் 4 அல்லது 5 துளி நீலகிரி தைலம் சேர்த்து டை பதத்திற்கு கலக்கி ஒரு இரவு ஊற விடவும்.மறுநாள் இந்த ஹேர் டையை தலை முழுவதும் அப்ளை செய்து ஒரு மணி நேரத்திற்கு ஊறவிட்டு பின்னர் எப்பொழுதும் போல் ஷாம்பு பயன்படுத்தி தலையை அலசிக் கொள்ளவும்.இவ்வாறு வாரம் ஒருமுறை செய்து வந்தால் தலை முடி அடர் கருமையாக மாறும்.