ஜுரம் நெஞ்சு சளி பாதிப்பு குணமாக மூன்று பொருள் கொண்ட கசாயம் செய்து குடிங்கள்!!

0
115
#image_title

ஜுரம் நெஞ்சு சளி பாதிப்பு குணமாக மூன்று பொருள் கொண்ட கசாயம் செய்து குடிங்கள்!!

முதலில் சாதாரண சளி பாதிப்பு உருவாகி பிறகு அவை தீராத நெஞ்சு சளியாக மாறி படுத்தி எடுத்து விடும்.நெஞ்சு சளியோடு காய்ச்சல் ஏற்பட்டால் அவை குணமாக நீண்ட நாட்கள் எடுத்துக் கொள்ளும்.இந்த பாதிப்பை குணமாக்க மருந்து மாத்திரை உட்கொள்வதை தவிர்த்து வீட்டில் உள்ள இந்த பொருட்கள் கொண்டு கசாயம் செய்து குடிங்கள்.

தேவையான பொருட்கள்:-

1)வெற்றிலை
2)சீரகம்
3)மிளகு

செய்முறை:-

முதலில் ஒரு வெற்றிலையை தண்ணீர் போட்டு சுத்தம் செய்து கொள்ளவும்.இதை உரலில் போட்டு இடித்து எடுத்துக் கொள்ளவும்.

அதன் பின்னர் ஒரு தேக்கரண்டி சீரகம் மற்றும் அரை தேக்கரண்டி மிளகை உரலில் போட்டு இடித்து வைத்துக் கொள்ளவும்.

அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி சூடாக்கவும்.அதன் பிறகு இடித்த வெற்றிலை,சீரகம்,மிளகு சேர்த்து மிதமான தீயில் 1/2 கப் அளவு வரும் வரை கொதிக்க விட்டு அடுப்பை அணைக்கவும்.

இதை ஒரு கிண்ணத்திற்கு வடிகட்டி குடித்தால் ஜுரம்,நெஞ்சு சளி பாதிப்பு முழுமையாக குணமாகும்.