சென்னை மெரினாவில் பரபரப்பு!! வாலிபர் ஒருவர் செய்த விபரீத செயலால் அதிர்ச்சியடைந்த மக்கள்!!
சென்னையில் உள்ள மெரினா கடற்கரையில் வாலிபர் ஒருவர் செய்த செயலால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னையில் உள்ள மெரினா கடற்கரை புகழ்பெற்றது. அங்குள்ள லுப் சாலையில் உள்ள நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் நாலாவது மாடியில் நேற்று முன்தினம் வாலிபர் ஒருவர் ஏரியுள்ளார். அங்கிருந்து அவர் திடீரென தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
கையில் பெட்ரோல் பேனை வைத்துக் கொண்டு “நான் தீக்குளிக்க போகிறேன்!! என்னை காப்பாற்ற வேண்டாம்!! கீழே குதித்து விடுவேன்!!” என்று மிரட்டல் விடுத்தபடி இருந்ததால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த மயிலாப்பூர் போலீசார் விரைந்து வந்தனர். தற்கொலை மிரட்டல் விடுத்த வாலிபரிடம் நைசாக பேச்சு வார்த்தை நடத்தி வந்தனர். அந்த சூழ்நிலையை பயன்படுத்திக் கொண்ட அந்த பகுதியில் சேர்ந்த சில இளைஞர்கள் மாடிக்குச் சென்று அவரை காப்பாற்றும் முயற்சி ஈடுபட்டனர்.
திடீரென ஒரு கட்டத்தில் அந்த வாலிபர் மாடியில் இருந்து கீழே குதிக்க முயன்ற போது இளைஞர்கள் அவரை பத்திரமாக பிடித்துக் கொண்டனர். பின்னர் அவரை போலீசாரிடம் பத்திரமாக ஒப்படைத்தனர்.
போலீசாரின் விசாரணையில் அந்த வாலிபரின் பெயர் சுனில் வயது 24 என்பதும் அவர் சென்னை கேகே நகர் பகுதியில் வசித்து வருவதும் டீக்கடை ஒன்றில் வேலை பார்த்து வருவதும் தெரிய வந்தது. ஒரு பெண்ணை காதலித்து வந்ததாகவும் பின்னர் ஏற்பட்ட காதல் தோல்வியில் மன உளைச்சல் காரணமாக தற்கொலை செய்ய முடிவை எடுத்ததாக அந்த வாலிபர் தெரிவித்தார்.
பின்னர் அந்த வாலிபருக்கு அறிவுரை கூறிய போலீசார் அவரது உறவினர்களுடன் அனுப்பி வைத்தனர். தற்கொலைக்காக முயன்ற வாலிபால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.