அமலாக்கத்துறை பிடியில் சிக்கிய செந்தில் பாலாஜியின் உதவியாளர்!! கலக்கத்தில் கட்சி தலைமை!!

Photo of author

By Divya

அமலாக்கத்துறை பிடியில் சிக்கிய செந்தில் பாலாஜியின் உதவியாளர்!! கலக்கத்தில் கட்சி தலைமை!!

சமீப காலமாக தமிழகத்தில் வருமானவரி துறை மற்றும் அமலாக்கத்துறை சோதனை என்பது அதிகரித்து இருக்கிறது.இதனால் யார் சிக்குவார்கள் என்ற ஒரு வித பயத்தில் அரசியல் புள்ளிகள் தவித்து வருகிறது.முன்னதாக வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்தது மற்றும் பண மோசடியில் ஈடுபட்டதற்காக ஜூன் மாதம் தமிழக மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்களை சட்ட விரோத பணபரிவர்தனை சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை கைது செய்து புழல் சிறையில் அடைத்தது.அமலாக்கத்துறையின் இந்த அதிரடி சோதனை அரசியல் வட்டாரத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது.செந்தில் பாலாஜி கைதுக்கு பிறகு அவரது சகோதரர் அசோக்குமார் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்கள் என்று பல்வேறு இடங்களில் வருமான வரித்துறை மற்றும் அமலாக்கத்துறை மாறி மாறி சோதனை மேற்கொண்டு பல முக்கிய ஆவணங்கள்,பொருட்களை கைப்பற்றி சென்றது.

மேலும் இந்த அதிரடி சோதனையால் செந்தில் பாலாஜி நண்பர்கள்,உறவினர்கள் என்று அனைவரும் ஒரு வித கலக்கத்தில் இருந்து வந்த நிலையில் தற்பொழுது வருமான வரித்துறை மீண்டும் தங்கள் அதிரடியை காட்ட தொடங்கி விட்டனர்.தலைநகர் சென்னையில் உள்ள பள்ளிக்கரணை,துரைப்பாக்கம், நீலாங்கரை,நாவலூர் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் இன்று காலை முதல் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில் வருமான வரித்துறையின் பிடியில் சிக்கிய முதல் ஆடு செந்தில் பாலாஜியின் முன்னாள் உதவியாளர் காசி.மின்வாரியத்தில் அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்ற இவர் பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு சிறை வாசம் அனுபவித்து வரும் அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் உதவியாளராக பணியாற்றி இருக்கிறார்.இந்நிலையில் சென்னை,தேனாம்பேட்டையில் வசித்து வரும் காசியின் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் காலை முதலே சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

முப்பதிற்கும் மேற்பட்ட இடங்களில் நடத்தப்பட்டு வரும் சோதனையில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்து,உண்மையான வருமானத்தை மறைத்து வரி ஏய்ப்பு செய்துள்ளனரா? என்பது குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.இதன் மூலம் பல்வேறு முக்கிய ஆவணங்கள் மற்றும் பல முக்கிய புள்ளிகள் சிக்குவார்கள் என்ற எதிர்பார்ப்பு அனைவரின் மத்தியிலும் எழுந்துள்ளது.இது ஒருபுறம் இருக்க வருமான வரித்துறை அதிகாரிகளின் அதிரடியால் ஒரு சில புள்ளிகள் தலைமறைவாகி இருக்கின்றனர்.வருமானவரி மற்றும் அமலாக்கத்துறையினரின் தொடர் சோதனையால் திமுக ஆட்டம் கண்டு இருக்கிறது என்று அரசியல் வட்டாரங்கள் கருத்து தெரிவித்து வருகிறது.