ஏழு வயது சிறுவன் மர்மமான முறையில் படுகொலை!! போலீசார் தீவிர விசாரணை!!
அசாம் மாநிலத்தில் ஜாகிர் உசேன் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மனைவி கைரூன் நிஷா, மகன் கைரல் இஸ்லாம் ஆவார். இந்த நிலையில், ஜாகிர் உசேன் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பாக வேலை தேடி தனது குடும்பத்துடன் கோயம்புத்தூர் மாவட்டத்திற்கு வந்தார்.
இங்கு சின்ன கலங்களில் முத்து என்பவரின் நூற்பாலையில் இவருக்கு வேலை கிடைத்தது. அந்த மில்லின் வளாகத்தில் இருக்கக்கூடிய குடியிருப்பு பகுதியில் இவர் குடும்பத்துடன் தங்கி வேலை செய்து வந்தார்.
இவருடன் இவரது மனைவியும் தினமும் வேலைக்கு செல்வார். இந்த நிலையில், நேற்று காலை இவர்கள் இருவரும் வேலைக்கு சென்ற பிறகு இவர்களுடைய ஏழு வயதான மகன் கைரல் இஸ்லாம் மட்டும் வீட்டில் தனியாக இருந்தார்.
மாலை வேலையை முடித்துவிட்ட வந்த பெற்றோருக்கு ஒரு அதிர்ச்சி சம்பவம் காத்திருந்தது. வீட்டில் மகன் கைரல் முகம் மற்றும் கழுத்தில் காயம் ஏற்பட்டவாறு மயங்கி இருந்தான்.
இதைப்பார்த்த பெற்றோர் இருவரும் அதிர்ச்சியடைந்து மகனை உடனடியாக சூலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர் எங்களால் காப்பாற்ற முடியவில்லை ஏற்கனவே சிறுவன் உயிரிழந்து விட்டதாக கூறி உள்ளார்.
இந்த அதிர்ச்சி சம்பவம் குறித்து காவல் துறையினருக்கு புகார் அளிக்கப்பட்டது. இதைப்பற்றி தீவிரமாக விசாரித்த காவல் துறையினருக்கு ஒரு செய்தி கிடைத்தது.
அதாவது, சிறுவனின் கழுத்தை யாரோ பனியனால் நெரித்து கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. ஆனால் கொலை செய்த குற்றவாளி யார் என்று அறியப்படவில்லை.
ஏழு வயது சிறுவனை கொலை செய்ததற்கான காரணமும் தெரியவில்லை. எனவே, இது குறித்து கண்காணிப்பு கேமராக்கள் மூலம் காவல் துறையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.