ஜெனீவாவில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் உலக சுகாதார அமைப்பின் செய்தி தொடரபாளர் மார்கரெட் ஹாரிஸ் தடுப்பூசிகளின் செயல்திறன் மற்றும் பாதுகாப்பு குறித்த கடுமையான சோதனைகளின் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தி உள்ளார். மேலும் அவர் கூறும் போது அடுத்த ஆண்டு பாதி வரை கொரோனாவுக்கு எதிராக பரவலான தடுப்பூசிகளை உலக சுகாதார நிறுவனம் எதிர்பார்க்கவில்லை. மேம்பட்ட மருத்துவ பரிசோதனைகளில் தடுப்பூசிகள் எதுவும் இதுவரை உலக சுகாதார அமைப்பால் கோரப்பட்ட குறைந்தது 50 சதவீத அளவு செயல்திறனின் “தெளிவான சமிக்ஞையை” நிரூபிக்கவில்லை என்று கூறினார்.