நுரையீரலில் படிந்து கிடக்கும் நாள்பட்ட சளி அனைத்தும் 5 நிமிடத்தில் கரைந்து வெளியேற வேண்டுமா? இது தான் அதற்கு தீர்வு!

Photo of author

By Divya

நுரையீரலில் படிந்து கிடக்கும் நாள்பட்ட சளி அனைத்தும் 5 நிமிடத்தில் கரைந்து வெளியேற வேண்டுமா? இது தான் அதற்கு தீர்வு!

சுவாச உறுப்பான நுரையீரலில் சளி கோர்த்து கொண்டால் அவை சுவாசிப்பதில் பிரச்சனை ஏற்படுத்தும்.

சளி பாதிப்பு மழைக்காலம், குளிர்காலம், காலநிலை மாற்றம், சைன்ஸ் உள்ளிட்ட பல காரணங்களால் ஏற்படுகின்றது.

நுரையீரலில் சளி கட்டிக் கொண்டால் மூச்சு விடுதலில் சிரமம், நெஞ்சு அனத்தம், தலைவலி, மூக்கடைப்பு உள்ளிட்ட தொந்தரவுகள் ஏற்படும்.

இதை குணப்படுத்த குப்பைமேனி கசாயம் குடிப்பது நல்லது.

தேவையான பொருட்கள்…

*குப்பைமேனி இலை
*மிளகு
*பூண்டு
*சீரகம்
*மஞ்சள்

குப்பைமேனி கசாயம் செய்முறை…

உடலில் உள்ள பல வியாதிகளை குணமாக்கும் ஒரு அதிசய மூலிகை இந்த குப்பைமேனி. தெரு ஓரங்களில் எவ்வித பராமரிப்பும் இல்லாமல் வளர்க் கூடிய இந்த செடி சளி பாதிப்புக்கு நிவாரணமாக இருக்கின்றது.

குப்பைமேனி இலையுடன் மேலும் சில பொருட்களை சேர்த்து கசாயம் காய்ச்சி குடித்தால் மார்பு கூட்டில் தேங்கி கிடந்த சளி கரைந்து மலம் மூலமாக வெளியேறி விடும்.

குப்பைமேனி கசாயம் செய்வது குறித்த விளக்கம்…

முதலில் ஒரு கைப்படி அளவு குப்பைமேனி இலையை தண்ணீரில் அலசி வைத்துக் கொள்ளவும். இதை மிக்ஸியில் போட்டு அரைத்து சாறு பிழிந்து வைக்கவும்.

அதற்கு அடுத்து உரலில் 2 பல் பூண்டு, 6 மிளகு, 1/2 தேக்கரண்டி சீரகம் சேர்த்து கொரகொரப்பான பதத்திற்கு இடித்துக் கொள்ளவும்.

அதன் பிறகு அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து 1 டம்ளர் தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும். அடுத்து இதில் குப்பைமேனி சாறு, அரைத்த விழுது சேர்த்து மிதமான தீயில் கசாயம் போல் காய்ச்சவும்.

இந்த கசாயத்தில் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்கவிட்டு எடுக்கவும்.

பிறகு கசாயம் இளஞ்சூட்டிற்கு வந்த பின்னர் வடிகட்டி குடிக்கவும். இதை குடித்த சில நிமிடத்தில் சளி கரைந்து வெளியேறி விடும்.