நாள்பட்ட தேமல் மறைய எளிய வீட்டு வைத்தியம்!! 100%பலன் கிடைக்கும்!!

0
79
#image_title

நாள்பட்ட தேமல் மறைய எளிய வீட்டு வைத்தியம்!! 100%பலன் கிடைக்கும்!!

தேமல் நம் தோல்களில் உருவாகும் ஒரு நோயாகும். இந்த பாதிப்பு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் எளிதில் வருபவையாக இருக்கின்றது. இந்த தேமல் மலேசேசியா பர்பர் எனும் கிருமியால் உருவாகிறது.

இவை உடலில் மார்பு, கழுத்து, முதுகு, கை, கால் போன்ற இடங்களில் அதிகளவில் காணப்படுகிறது.

யாருக்கு தேமல் உருவாகும்?

*வியர்வை அதிகம் சுரக்கும் நபர்கள்

*சர்க்கரை நோயாளிகள்

*நீண்ட நாட்களாக ஸ்ட்ராய்டு மாத்திரம் உண்பவர்கள்

*நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருபவர்கள்

தேமலால் ஏற்படும் பிரச்சனை:-

*எரிச்சல்

*அரிப்பு

*தோலில் பிளவு ஏற்படுதல்

தீர்வு 1:

தேவையான பொருட்கள்:-

*ஆடாதோடை இலை – 2

*தேங்காய் எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை:-

இரண்டு ஆடாதோடை இலையை தேங்காய் எண்ணெயில் போட்டு ஊற விடவும். பின்னர் இதை வெயிலில் காய விடவும். இந்த ஆடாதோடை இலை நன்கு காய்ந்ததும் எடுத்து இடித்து கொள்ளவும். பின்னர் சிறு துளி தேங்காய் எண்ணெய் சேர்த்து குழப்பி தேமல் இருக்கும் இடங்களில் பூசவும். இவ்வாறு தொடர்ந்து செய்து வருவதன் மூலம் நாள்பட்ட தேமல் பாதிப்பு நீங்கும்.

தீர்வு 2:

தேவையான பொருட்கள்:-

*வசம்புத் தூள் – 1 தேக்கரண்டி

*கஸ்தூரி மஞ்சள் – 1 தேக்கரண்டி

செய்முறை:-

ஒரு பவுலில் 1 தேக்கரண்டி வசம்புத் தூள் மற்றும் 1 தேக்கரண்டி கஸ்தூரி மஞ்சள் சேர்த்து கொள்ளவும். பின்னர் அதில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி குழைத்துக் கொள்ளவும்.

இந்த பேஸ்டை முகம் மற்றும் உடம்பில் தேமல் இருக்கும் பகுதியில் தடவி 20 முதல் 30 நிமிடங்கள் விட்டு பின்னர் முகத்தை கழுவவும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தோம் என்றால் நாள்பட்ட தேமல் பாதிப்பு முழுமையாக நீங்கிவிடும்.

தீர்வு 3:

தேவையான பொருட்கள்:-

*வசம்பு – 1 துண்டு

*பூவாரம் பட்டை – 1 துண்டு

செய்முறை:-

ஒரு உரலில் 1 துண்டு வசம்பு மற்றும் பூவாரம்பட்டை சேர்த்து கொள்ளவும். பின்னர் சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்து விழுதாக்கி கொள்ளவும்.

இதை உடம்பில் தேமல் இருக்கும் பகுதியில் இரவு தூங்குவதற்கு முன் பூசி கொள்ளவும். மறுநாள் காலையில் குளிக்கவும். இவ்வாறு வாரத்திற்கு 3 முதல் 4 நாட்களுக்கு செய்து வருவதன் மூலம் நாள்பட்ட தேமல் பாதிப்பு சரியாகும்.

Previous articleஇளநரை? 2 தேக்கரண்டி டீத்தூள் இருந்தால் ஒரே நாளில் அனைத்து வெள்ளை முடிகளையும் கருமையாக்கி விடலாம்!!
Next articleகேரளா ஸ்டைல் ரெசிபி: “பூசணி கூட்டான்” இப்படி செய்தால் ருசியும் மணமும் கூடும்!!