7 நாட்களில் வெண்புள்ளி மறைய எளிய வீட்டு வைத்தியம்..!!

0
139
#image_title

7 நாட்களில் வெண்புள்ளி மறைய எளிய வீட்டு வைத்தியம்..!!

இன்றைய காலத்தில் பெரும்பாலானோருக்கு வெண்புள்ளி பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. உடலில் உள்ள எதிர்ப்பு சக்தியின் ஒரு பகுதி உடலுக்கு எதிராக செயல்படுவதால் இந்த நோய் பாதிப்பு ஏற்படுகிறது. இந்த வெண்புள்ளி தோன்ற முக்கிய காரணம் தோலுக்கு நிறம் தரும் மெலனின் எனும் வேதிப்பொருளை சுரக்கும் அணுக்கள் இல்லாமல் போவது தான்.

வெண்புள்ளி ஏற்படுவதற்கான காரணம்:-

*நரம்புகளின் செயலிழப்பு

*பரம்பரை தன்மை

*சர்க்கரை நோய்

*வைட்டமின் பி12 குறைபாடு

*தைராய்டு

தேவையான பொருட்கள்:-

*சமையல் சோடா

*உப்பு

*தயிர்
(அல்லது)எலுமிச்சை சாறு

செய்முறை…

அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் 1 கிளாஸ் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து அடுப்பை அணைத்துக் கொள்ளவும்.

பின்னர் இதை ஒரு கிண்ணத்தில் ஊற்றிக் கொள்ளவும். அடுத்து இதில் 1 1/2 தேக்கரண்டி சோடா உப்பு சேர்த்து கொள்ளவும்.

அடுத்து 1 தேக்கரண்டி உப்பு சேர்த்து நன்கு கலந்து விடவும். பின்னர் அதில் 1/2 எலுமிச்சம் பழ சாற்றை பிழிந்து நன்கு கலந்து விடவும்.

இதை உடம்பில் வெண்புள்ளி இருக்கும் இடத்தில் அப்ளை செய்து 2 மணி நேரத்திற்கு பிறகு குளிக்கவும். இவ்வாறு வாரத்தில் 2 முறை செய்தால் உடலில் உள்ள வெண்புள்ளி அனைத்தும் மறைந்து விடும்.

மற்றொரு தீர்வு:-

தேவையான பொருட்கள்:-

*வேப்பிலை

*மஞ்சள் தூள்

*கடுகு எண்ணெய்

செய்முறை…

ஒரு கைப்பிடி அளவு வேப்பிலை எடுத்து சுத்தம் செய்து கொள்ளவும். இதை அம்மி அல்லது மிக்ஸி ஜாரில் போட்டு மைய்ய அரைத்துக் கொள்ளவும்.

பின்னர் இதை ஒரு கிண்ணத்திற்கு மாற்றிக் கொள்ளவும். அடுத்து அதில் 1 தேக்கரண்டி அளவு மஞ்சள் தூள் சேர்த்து கலந்து விடவும்.

அடுத்ததாக 1 தேக்கரண்டி கடுகு எண்ணெய் சேர்த்து நன்கு கலந்து விடவும். இதை உடம்பில் வெண்புள்ளி இருக்கும் இடத்தில் அப்ளை செய்து 2 மணி நேரத்திற்கு பிறகு குளிக்கவும். இவ்வாறு வாரத்தில் 2 முறை செய்தால் உடலில் உள்ள வெண்புள்ளி அனைத்தும் மறைந்து விடும்.