பேன், ஈறு, பொடுகை போக்கும் சிம்பிள் ஹோம் ரெமிடி..!
பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரையும் எளிதில் பாதிப்பது பேன், ஈறு பிரச்சனை தான். இவை ஒருவருக்கு வந்துவிட்டால் மற்றவர்களுக்கு எளிதில் பரவி விடும் ஒரு பாதிப்பு.
பள்ளி பருவத்தில் இந்த பேன், ஈறு பாதிப்பை பலர் சந்தித்து இருப்பீர்கள். தலையில் டேரா போட்டுக் கொண்டு நம் இரத்தத்தை உறுஞ்சி வாழும் பேன், ஈறுகளை ஒழிக்க கெமிக்கல் ஷாம்பு, எண்ணெய் பயன்படுத்தாமல் இயற்கை பொருட்கள் மூலம் தீர்வு காணுங்கள்.
தேவையான பொருட்கள்:-
1)வேப்பிலை
2)வெள்ளை பூண்டு
3)மிளகு
4)எலுமிச்சை சாறு
5)தண்ணீர்
செய்முறை…
முதலில் 1 கைப்பிடி அளவு வேப்பிலையை சுத்தம் செய்து ஒரு மிக்ஸி ஜாரில் போட்டுக் கொள்ளவும்.
பிறகு அதனுடன் ஒரு ஸ்பூன் மிளகு, 5 பல் பூண்டு, 1/4 டம்ளர் எலுமிச்சை சாறு மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மைய்ய அரைத்துக் கொள்ளவும்.
இதை ஒரு கிண்ணத்திற்கு வடிகட்டி தலை முடிகளுக்கு அப்ளை செய்து 1 மணி நேரத்திற்கு ஊறவிட்டு பின்னர் தலைக்கு குளிக்கவும். இவ்வாறு வாரத்திற்கு 2 முறை செய்து வருவதன் மூலம் பொடுகு, பேன், ஈறு, பொடுகு தொல்லை நீங்கி முடி ஆரோக்கியமாக வளரும்.