சிம்பிள் ரெசிபி: கேரளா ஸ்டைல் ​​”கேப்பை புட்டு” – செய்வது எப்படி?

0
130
#image_title

சிம்பிள் ரெசிபி: கேரளா ஸ்டைல் ​​”கேப்பை புட்டு” – செய்வது எப்படி?

புட்டு உணவுக்கு பெயர் போனவை கேரளா. இதில் பல வகை புட்டு வகைகள் இருக்கிறது. அரிசி மாவு + கேப்பை மாவு + தேங்காய் துருவல் + இனிப்பு சேர்த்து தயாரிக்கப்படும் புட்டு மிகவும் சுவையாக இருக்கும்.

தேவையான பொருட்கள்:-

*கேப்பை(ராகி) மாவு – 1 கப்

*அரிசி மாவு – 1 கப்

*தேங்காய் – 1 கப்(துருவியது)

*உப்பு – 1 தேக்கரண்டி

செய்முறை:-

முதலில் ஒரு பாத்திரம் எடுத்து அதில் 1 கப் அரிசி மாவு மற்றும் 1 கப் கேப்பை மாவு சேர்த்து கலந்து விடவும்.

அடுத்து 1 தேக்கரண்டி அளவு உப்பு சேர்த்து கொள்ளவும்.

அடுத்து 1 மூடி தேங்காய் எடுத்து துருவல் கொண்டு துருவிக் கொள்ளவும். இதை அரசி மாவு + கேப்பை மாவு கலவையில் சேர்த்து கலந்து விடவும்.

ஆகியவற்றை ஒரு பரந்த கலவை பாத்திரத்தில் வைக்கவும், 1/2 கப் தேங்காய் மற்றும் உப்பு சேர்க்கவும்.

அடுத்து சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து புட்டு மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும். மாவு கெட்டி தன்மையை அடையாக் கூடாது. இலகுவான கையில் எடுத்தால் உதிரியாக வர வேண்டும்.

பின்னர் புட்டு மேக்கர் எடுத்து அதில் தயார் செய்து வைத்துள்ள கேப்பை கலவையை + துருவிய தேங்காயை சேர்த்து கொள்ளவும். அடுத்து ஒரு குக்கரில் சிறிதளவு தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும்.

இதை அடுப்பில் வைத்து கொள்ளவும். பிறகு புட்டு மேக்கரை வெய்ட் போடும் இடத்தில் வைக்கவும். அடுத்த 5 நிமிடத்தில் கேப்பை புட்டு தயார் ஆகிவிடும்.

பிறகு புட்டு மேக்கர் மூடியில் இருந்து ஆவி வந்ததும் அடுப்பை அணைக்கவும். பின்னர் வேக வாய்த்த கேப்பை புட்டை வெளியில் எடுக்கவும். இது தான் கேரளா ஸ்டைல் கேப்பை(ராகி) புட்டு ஆகும்.

Previous articleபாட்டி வைத்தியம்.. “மூட்டு வலி”? நிமிடத்தில் நீங்க கற்பூரம் + தேங்காய் எண்ணெய் போதும்!!
Next articleஊரையே கூட்டும் மணத்துடன் கேரளா ஸ்டைல் சிக்கன் ஸ்டவ் கறி – சுவையாக செய்வது எப்படி?