உடலில் உள்ள கெட்ட கொழுப்புகள் கரைந்து உடல் ஆரோக்கியமாக இருக்க எளிய வழிகள்..!!
நம்மில் பலருக்கு உடல் பிட்டாக இருக்க வேண்டுமென்ற ஆசை இருக்கும். ஆனால் ஆரோக்கியமற்ற உணவுமுறை பழக்கத்தால் உடலில் அதிகளவில் கெட்ட கொழுப்புகள் சேர்ந்து உடல் ஆரோக்கியம் கெட்டு விடுகிறது. இதனை சரி செய்ய தினமும் காலையில் சில வழிமுறைகளை பின்பற்றி வருவதன் மூலம் உரியத் தீர்வு கிடைக்கும்.
தீர்வு 01:
தேவையான பொருட்கள்:-
*கிராம்பு எண்ணெய்
*தண்ணீர்
செய்முறை…
அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து 1 கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடு படுத்திக் கொள்ளவும். பின்னர் அதை ஒரு டம்ளருக்கு ஊற்றி சில துளி கிராம்பு எண்ணெய் சேர்த்து பருகவும். இதை காலையில் வெறும் வயிற்றில் பருக வேண்டும். இவ்வாறு தொடர்ந்து பருகி வந்தோம் என்றால் உடல் எடை குறையும்.
தீர்வு 02:
தேவையான பொருட்கள்:-
*கொய்யா இலை
*தேன்
*தண்ணீர்
செய்முறை…
அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் 1 கிளாஸ் தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும். பின்னர் அதில் 2 கொய்யா இலைகளை சேர்த்து மிதமான தீயில் கொதிக்க விட்டு அடுப்பை அணைக்கவும்.
இதை ஒரு கிளாஸுக்கு வடிகட்டி சில துளி தேன் கலந்து பருகி வருவதன் மூலம் உடல் எடை குறையும்.
தீர்வு 03:
தேவையான பொருட்கள்:-
*இஞ்சி
*எலுமிச்சை
செய்முறை…
அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் 1 கிளாஸ் தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும். பின்னர் அதில் 1 தூண்டு இடித்த இஞ்சி சேர்த்து கொதிக்க விட்டு அடுப்பை அணைக்கவும். பின்னர் இதை ஒரு கிளாஸுக்கு வடிகட்டி 1 தேக்கரண்டி எலுமிச்சை சாறு மற்றும் சில துளி தேன் சேர்த்து பருகவும். இவ்வாறு தொடர்ந்து பருகி வருவதன் மூலம் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகள் கரைந்து உடல் ஆரோக்கியமாக இருக்கும்.