தீராத மலச்சிக்கல் பாதிப்பு சரியாக இதை ஒரு கிளாஸ் பருங்குங்கள்!! அடுத்த 1/2 மணி நேரத்தில் முழு தீர்வு கிடைக்கும்!!

0
83
#image_title

தீராத மலச்சிக்கல் பாதிப்பு சரியாக இதை ஒரு கிளாஸ் பருங்குங்கள்!! அடுத்த 1/2 மணி நேரத்தில் முழு தீர்வு கிடைக்கும்!!

காலையில் எழுந்ததும் முதல் வேலையாக மலத்தை முறையாக வெளியற்றி விட வேண்டும். இல்லையென்றால் அவை நாளடைவில் மலச்சிக்கலாக மாற அதிக வாய்ப்பு இருக்கிறது.

மலச்சிக்கல் ஏற்பட காரணம்:-

*உடலுக்கு தேவையான அளவு தண்ணீர் அருந்தாமை

*மலத்தை முறையாக கழிக்காமல் அடக்கி வைப்பது

*எளிதில் செரிக்காத உணவை உண்ணுதல்

*குறைந்த நார்ச்சத்து உள்ள உணவு பொருட்களை எடுத்து கொள்வது

*முறையற்ற தூக்கம்

தீராத மலச்சிக்கலை சரி செய்ய எளிய வழி:-

நம் பாரம்பரிய சிறு தானிய வகைகளில் ஒன்றான ராகியில் கால்சியம், பாஸ்பரஸ், நார்ச்சத்து உள்ளிட்ட ஊட்டச்சத்துக்கள் அதிகளவில் அடங்கி இருக்கிறது. இந்த ராகியில் செய்யப்பட்ட உணவை தொடர்ந்து சாப்பிட்டு வந்தோம் என்றால் உடலுக்கு தேவையான நோய் எதிப்பு சக்தி கிடைத்து விடும். ராகியில் தயாரிக்கப்படும் பால் மலச்சிக்கல் பாதிப்புக்கு சிறந்த தீர்வாக இருக்கும்.

ராகி மில்க் செய்யும் முறை:-

தேவையான பொருட்கள்:-

*ராகி – 100 கிராம்

*நாட்டு சர்க்கரை – தேவையான அளவு

செய்முறை விளக்கம்:-

முந்தின நாள் காலையில் 100 கிராம் ராகி எடுத்து அவற்றை 3 முதல் 4 முறை கழுவி 8 மணி நேரம் தண்ணீரில் ஊறவைக்க வேண்டும். பிறகு அன்றிரவு இரவு ஒரு காட்டன் துணி கொண்டு அவற்றை முளை கட்ட வேண்டும்.

பின்னர் அடுத்த நாள் காலையில் முளைகட்டிய ராகியை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்கு அரைத்து கொள்ள வேண்டும்.

அதற்கு முன்னதாக அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் 2 டம்ளர் தண்ணீர் ஊற்றி தேவையான அளவு வெல்லம் அல்லது நாட்டு சர்க்கரை சேர்த்து கொதிக்க விட்டு அடுப்பை அணைத்து விட வேண்டும்.

பிறகு அரைத்து வைத்துள்ள ராகி பாலை ஒரு பாத்திரத்திற்கு வடிகட்டி அவற்றில் கொதிக்க வைத்துள்ள நாட்டு சர்க்கரை தண்ணீரை சேர்த்து நன்கு கலக்கி அருந்த வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் நாள்பட்ட மலச்சிக்கல் பாதிப்பு முழுமையாக நீங்கிவிடும்.

Previous articleகேரளா ஸ்டைல் “ரெட் தேங்காய் சட்னி” – செய்வது எப்படி?
Next articleKerala Style Recipe: மணத்தை கூட்டும் தேங்காய் சாதம்.. இப்படி ஒருமுறை செய்து பாருங்கள்!!