உங்கள் வயிற்றுக் கீழ் தொங்கி கிடக்கும் கொழு கொழு தொப்பை 7 நாட்களில் கரைய “மாதுளை இலை டீ” பருகுங்கள்!!

Photo of author

By Divya

உங்கள் வயிற்றுக் கீழ் தொங்கி கிடக்கும் கொழு கொழு தொப்பை 7 நாட்களில் கரைய “மாதுளை இலை டீ” பருகுங்கள்!!

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் உடலில் வயிற்று பகுதி மற்றும் தொடை பகுதிகளில் அதிகப்படியான கொழுப்பு தேங்கி உடல் ஆரோக்கியத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றது.

இதற்கு அதிகப்படியான கொழுப்பு நிறைந்த உணவுகள்,துரித உணவுகள், கார்போஹைட்ரேட் உள்ள பொருட்கள் உள்ளிட்டவை காரணங்களாக சொல்லப்படுகிறது. இதை தவிர்த்து பகல் நேரங்களில் உறக்கம், அதிகப்படியான உணவுகளை எடுத்து கொள்வதாலும் உடல் பருமன் ஏற்படுகின்றது.

இதற்கு அதிக மருத்துவ குணம் நிறைந்த மாதுளை இலையை வைத்து டீ செய்து பருகினால் விரைவில் நல்ல பலன் கிடைக்கும்.

மாதுளை இலையில் அடங்கியுள்ள சத்துக்கள்:-

*இரும்புச் சத்து

*பொட்டாசியம்

*மெக்னீசியம்

*புரதசத்து

*வைட்டமின் சி, கே

மாதுளை இலை டீ செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்:-

*மாதுளை இலை

*தண்ணீர்

செய்முறை…

அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் 1 1/4 கிளாஸ் தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும். பின்னர் அதில் 10 முதல் 15 மாதுளை இலைகளை சேர்த்து மிதமான தீயில் கொதிக்க விட்டு அடுப்பை அணைக்கவும்.

பிறகு இதை ஒரு டம்ளருக்கு வடிகட்டி காலையில் பருகி வந்தோம் என்றால் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகள் மற்றும் தொப்பை குறையும்.

அதுமட்டும் இன்றி உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை வழங்கி உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது. சளி, இருமல் பாதிப்பு இருப்பவர்கள் மாதுளை இலையில் டீ செய்து பருகினால் விரைவில் நல்ல பலன் கிடைக்கும்.