சிறு நீரக கற்களை ஒரே நாளில் கரைத்து வெளியேற்ற உதவும் “சிறுகண் பீளை பால்”!!

0
45
#image_title

சிறு நீரக கற்களை ஒரே நாளில் கரைத்து வெளியேற்ற உதவும் “சிறுகண் பீளை பால்”!!

நம் உடலின் முக்கிய உள்ளுறுப்பான சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டியது மிகவும் முக்கியம் அவசியம். இந்த உறுப்பு நம் உடலில் இருக்கும் கழிவுகளை சிறுநீர் வழியாக அகற்ற உதவுகிறது. இந்த சிறுநீரகத்தில் கற்கள் உருவாகி விட்டால் அவை நம்மை உயிருக்கு ஆபத்தான நிலைக்கு கொண்டு சேர்த்து விடும். இந்த பாதிப்பை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து குணப்படுவதுவது மிகவும் முக்கியம் ஆகும்.

சிறுநீரக கற்களை கரைத்து வெளியேற்ற உதவும் சிறுகண் பீளை:-

சிறுகண் பீளை, கற்பேதி, காப்புக்கப்ட்டு பூச்செடி, பூளைப்பூ செடி என்று பல பெயர்களில் அழைக்கப்படுகிறது. சிறுநீரக கற்களை கரைத்து சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள பெரிதும் உதவுகிறது.

தேவையான பொருட்கள்:-

*சிறுகண் பீளை செடி – சிறிதளவு

*நாட்டு சர்க்கரை – தேவையான அளவு

*பால் – 1/2 டம்ளர்

செய்முறை:-

ஒரு பவுலில் சிறுகண் பீளை செடியின் பூ, இலைகளை போட்டுக் கொள்ளவும். அடுத்து அதன் வேரை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி போட்டுக் கொள்ளவும்.

பின்னர் இதை சுத்தமான தண்ணீர் கொண்டு அலசிக் கொள்ளவும். அடுத்து ஒரு உரலில் இந்த சிறுகண் பீளை பூ, வேர், இலையை போட்டு அரைக்கவும்.

அடுத்து 1/2 டம்ளர் காய்ச்சிய பால் சேர்த்து கலந்து மீண்டும் அரைக்கவும். சிறுகண்பீளை + பால் நன்கு அரைத்தும் ஒரு பவுலில் ஊற்றிக் கொள்ளவும்.

பின்னர் தேவையான அளவு நாட்டு சர்க்கரை சேர்த்து நன்கு கலக்கி பருகவும். இவ்வாறு தொடர்ந்து செய்வதன் மூலம் சிறுநீரக கல் விரைவில் கரைந்து வெளியேறிவிடும்.