ஸ்டாலினிடமிருந்து ராமதாஸ்க்கு போன முக்கிய மெசேஜ்!! ஒப்புக்கொள்ளுமா பாமக!!

There is a situation that Ramdas will not attend the opening ceremony of the 21 martyrs of the reservation protest.

PMK:இட ஒதுக்கீடு போராட்ட 21 தியாகிகள் நினைவு மண்டப திறப்பு விழாவிற்கு ராமதாஸ் வருகை புரிய மாட்டார் என்கிற சூழல் நிலவி வருகிறது. கடந்த 2019 ஆம் ஆண்டு விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பிரச்சாரத்திற்கு  நேரடியாக வருகை புரிந்து முதல்வர் ஸ்டாலின் களம் இறங்கினார். அப்போது  விழுப்புரத்தில் உள்ள வன்னியர்  இட ஒதுக்கீடு போராட்ட தியாகிகள் நினைவு சின்னத்திற்கு மாலை அணிவிக்க எதிர்ப்பு தெரிவித்து இருந்தார்கள் பாமகவினர். கடந்த சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதற்கு முன்பாக பாமகவினர் (MBC) மிகவும் … Read more

செங்கல்பட்டில் பயங்கரம் சம்பவ இடத்தில் பலியான 5 பெண்கள்!! குடிப்போதையில் இளைஞர் செய்த செயல்!!

5 women died at the scene of horror in Chengalpattu!! The action of the youth while drunk!!

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அருகே பண்டிதமேடு கிராம பகுதியில் ஆடு, மாடு மேய்த்துக் கொண்டிருந்த பெண்கள் மீது கார் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. அங்கு ஆடு,மாடு மேய்த்து கொண்டிருந்த சுமார் 10-க்கும் அதிகமான பெண்கள் இருந்தனர். அதில் 5 பெண்கள் மட்டும் சாலையின் ஓரமாக அமர்ந்து ஆடுகளை மேய்த்து கொண்டு இருந்தனர். சற்றும் யாரும் எதிர் பாக்காத நிலையில் சென்னையில் இருந்து மாமல்லபுரம் நோக்கி வந்த அதி வேகமாக வந்த ஒரு கார் அங்கு அமர்ந்தது … Read more

17 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்!! திருவிழாவாக மாறும் மதுரை மாநகர்!!

Meenakshi Amman temple Kumbabhishekam to be held after 17 years!! Madurai will become a festival!!

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் வரலாற்றுப் புகழ்மிக்க கும்பாபிஷேகம், 17 ஆண்டுகளுக்குப் பிறகு, 2026 ஜனவரி 26-ஆம் தேதி நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அனைத்து திருப்பணிகளையும் திட்டமிட்டு, உரிய நேரத்திற்குள் முடிக்குமாறு கோயில் நிர்வாகத்துக்கு அறநிலையத்துறை கடினமாக உத்தரவிட்டுள்ளது. 2009 கும்பாபிஷேகத்திற்குப் பிறகு எதிர்பார்க்கப்பட்ட 2021 நிகழ்வுக்கு ஏன் தாமதம்? ஆகம விதிகளின்படி, ஒவ்வொரு 12 ஆண்டுகளுக்கும் ஒரு முறை கும்பாபிஷேகம் நடத்தப்பட வேண்டும். இந்த விதிமுறையின்படி, மீனாட்சி அம்மன் கோயிலின் அடுத்த கும்பாபிஷேகம் 2021-ஆம் … Read more

தமிழகத்தில் அறநிலையத்துறையில் தொடரும் குளறுபடிகள்!! கோவில்களின் பராமரிப்பில் மீண்டும் கேள்விக்குறி!!

தமிழகத்தில் உள்ள ஆயிரக்கணக்கான கோவில்கள் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வருகின்றன. இந்த கோவில்களின் பராமரிப்பு, அடிப்படை வசதிகள், மற்றும் தேவையான சீரமைப்பு பணிகள் பூர்த்தியாகச் செய்யப்படவில்லை என்ற குற்றச்சாட்டுகள் தொடர்ந்து எழுந்துக்கொண்டே உள்ளன. இந்த சூழலையே அடிப்படையாகக் கொண்டு, இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் அறநிலையத்துறையின் செயல்பாடுகளை கடுமையாக விமர்சித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்டம் பாபுராஜன்பேட்டை விஜயவரதராஜர் கோவிலின் சீரமைப்பு தொடர்பாக 2020ல் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. எனினும், அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாமல் … Read more

மழையில் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை விரைவாக பார்வையிட்டு தகுந்த நிவாரணம் வழங்கவேண்டும் EPS வலியுறுத்தல்!!

EPS insists that the rain-affected paddy crops should be visited quickly and appropriate relief provided!!

சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது. தற்போது வடகிழக்கு பருவ மழை குறிப்பிட கடலோர மாவட்டங்களில் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் கனமழை பொய்த்து வருகிறது. இது தொடர்ந்து வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 5 மணி நேரத்தில் சூறாவளி புயலாக வலுவடைய வாய்ப்பு உள்ளது. அதன்பிறகு, தொடர்ந்து 2 நாட்களுக்கு வடக்கு-வடமேற்கு திசையில் தமிழக கடற்கரை பகுதிகளை நோக்கி நகர்ந்து பின்னர் இலங்கை கடற்கரையை நோக்கி நகரும். என இந்திய … Read more

இனி வீடு கட்ட அனுமதி பெறுவது சுலபம்.. வந்தது புதிய நடைமுறை!! முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!! 

It is now easy to get permission to build a house.. a new procedure has arrived!! Chief Minister Stalin's announcement!!

மக்கள் இனி வீடு கட்ட அனுமதி பெற தாமதமோ, லஞ்சமோ, இடைத்தரகரோ தேவையில்லை. “குடியிருப்புக்கான கட்டிட அனுமதி பெற “ஒற்றை சாளர முறை”யை பயன்படுத்துங்கள். இப்போது, 2,500 சதுர அடியிலிருந்து 3,500 சதுர அடி வரை வீடு கட்ட விரும்பும் நபர்கள், தங்களின் அடிப்படை ஆவணங்களை சுய சான்றிதழுடன் சமர்ப்பித்து அனுமதி பெறலாம். அதிகாரிகளை அணுகாமல் கட்டிட அனுமதி பெறுவது பலருக்கும் சிக்கலாக இருந்தது. வார்டு கவுன்சிலர்கள் முதல் அதிகாரிகள், இடைத்தரகர்கள் உள்ளிட்டோருக்கு, லஞ்சம் கொடுக்க வேண்டிய … Read more

மாணவனின் சாதியை சொல்லி திட்டிய  ஆசிரியர்!! அரசு பள்ளியில்  தீண்டாமை!!

The teacher who wrote the student's caste name in the book was dismissed by the District Chief Education Officer

Tirupattur:மாணவனின் சாதி பெயரை புத்தகத்தில் எழுதிய ஆசிரியர், பணியிடை நீக்கம் செய்த  மாவட்ட முதன் கல்வி அலுவலர். நாம் 20 ஆம் நூற்றாண்டில் நாம் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்.அறிவியல் தொழில்நுட்பத்தில் நாம் வளர்ச்சி பெற்று இருந்தாலும் கூட, இந்த சாதிய  தீண்டாமை இன்றும் உலகில் இருப்பதை தினந்தோறும் வரும் செய்திகள் மூலம் நம்மால் அறிய முடிகிறது. பிறப்பால் சாதி பாகுபாடுகள் பார்க்க கூடாது, தீண்டாமை என்பது பெரும் குற்றம் என பாடம் எடுக்க வேண்டிய ஆசிரியரே  மாணவர்களின் … Read more

நடிகர் தனுஷ் உரிமையியல் வழக்கு நயன்தாராவின் மீது தாக்கல் செய்தார்!!

Actor Dhanush files copyright case against Nayanthara!!

சென்னை: நடிகை நயன்தாராவுக்கு எதிராக நடிகர் தனுஷ் சென்னை உயர்நீதிமன்றத்தில் உரிமையியல் வழக்கு தாக்கல் செய்தார். நயன்தாராவின் திருமண ஆவண  திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியானது இதில் அவரின் ஆரம்ப நிலை முதல் விக்னேஷ் சிவன் காதல் திருமணம் வரை இடம்பெற்றிருந்தது. இந்த ஆவண திரைப்படம் வெளியிடுவதற்கு முன் தனுஷ் மற்றும் நயன்தாரா இடையே மோதல் ஏற்பட்டது. தனுஷ் தயாரிப்பில் வெளியான நானும் ரவுடிதான் திரைப்படத்தின் காட்சிகளை பயன்படுத்த நயன்தாரா கேட்டுள்ளார். அதற்கு தனுஷ் 3 வினாடி … Read more

பொதுமக்களுக்கு உஷார்!! பிற்பகல் ஒரு மணி வரை இந்த மாவட்டங்களில் கனமழை!!

Public alert!! Heavy rain in these districts till 1 o'clock in the afternoon!

வங்கக்கடலில் நிலவி வரும் ஆழ்ந்தகாற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் அது சூறாவளி புயலாக உருமாறி தமிழகத்தின் கடலோர பகுதிகளை நெருங்க உள்ளது. இதனால் பிற்பகல் ஒரு மணி வரை குறிப்பிட்ட சில மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலவி வருகிறது. இந்த தாழ்வு மண்டலம் அடுத்த 12 மணி நேரத்தில் சூறாவளி புயலாக உருமாறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ள சூழ்நிலையில் அதற்கு பெங்கல் என சவுதி அரேபியா பெயரிட்டுள்ளது. தென் கிழக்கு வங்கக்கடலில் உருவாக்கியுள்ள இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மணிக்கு 13 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது. இன்று இரவு இது பெங்கல் புயலாக மாறியதும் நாளை நள்ளிரவு அல்லது நாளை மறுநாள் தமிழக கடலோரப் பகுதிகளை நெருங்க உள்ளது.

மேலும் இந்த புயலால் சென்னைக்கு அதிக பாதிப்பு உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏனெனில் இந்த புயல் சென்னை புதுச்சேரி இடையே கரையை கடக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளது. புயலானது கரையை நெருங்கும் சமயத்தில் பலத்த தரைக்காற்று வீசும் என கணிக்கப்பட்டுள்ளது. ஆனால் வங்க கடலில் உருவான இந்த பெங்கல் புயல் கரையை கடக்கும் முன்னரே வலுவிழந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் மாற வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புயலின் காரணமாக கடலூர் மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் போன்ற பகுதிகளில் அதிக கனமழையும் சில இடங்களில் கனமழை முதல் மிக அதிக கனமழைக்கு வாய்ப்புகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அந்த இரண்டு மாவட்டங்களிலும் அதிக கன மழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதுபோல தமிழகத்தின் சுமார் 15 மாவட்டங்களில் பிற்பகல் ஒரு மணி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி சென்னை விழுப்புரம் செங்கல்பட்டு கடலூர் மயிலாடுதுறை நாகை திருவாரூர் புதுக்கோட்டை சிவகங்கை தூத்துக்குடி ராமநாதபுரம் தென்காசி நெல்லை கன்னியாகுமரி தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் பிற்பகல் ஒரு மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.

Read more

9ம் வகுப்பு மாணவிக்கு பிறந்த பெண் குழந்தை!! தந்தையான 15 வயது சிறுவன் அதிர்ச்சி சம்பவம்!!

The birth of a girl child to a class 9 student has created a sensation in Thanjavur

Thanjavur: வயிற்று வலி சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு சென்ற 9ஆம் வகுப்பு மாணவிக்கு பெண் குழந்தை பிறந்த சம்பவம்  தஞ்சையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழகத்தில் பள்ளி மாணவர்கள் மீது பாலியல் குற்றங்கள் அதிக அளவில்  அதிகரித்து வருகிறது. இது தொடர்பான செய்திகள் நாள்தோறும் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் நடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தஞ்சாவூர் மாவட்டம் வல்லம் பகுதியில் உள்ள அரசு பள்ளியில்  மாணவி  9 … Read more