கிராமசபை கூட்டத்தில் பங்கேற்காத பெண்கள் தேசிய ஊரக வளர்ச்சி திட்ட பணி செய்ய மறுப்பு!

கிராமசபை கூட்டத்தில் பங்கேற்காத பெண்கள் தேசிய ஊரக வளர்ச்சி திட்ட பணி செய்ய மறுப்பு!

கிராம சபா கூட்டத்தில் பங்கேற்காத தேசிய ஊரக வேலைத்திட்ட தொழிலாளர்கள் இரண்டு வாருங்கள் வேலை மறுப்பால் கிராம சபா கூட்டத்தில் கொந்தளித்த பெண்களால் பரபரப்பு. கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோயில் அருகே ராஜாக்கமங்கலம் ஊராட்சி கிராம சபா கூட்டம் மேல தருமபுரம் பகுதியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு, ஊராட்சி தலைவி ஜெகதீஸ்வரி தலைமை வகித்தார். கூட்டத்தில் தேசிய ஊரக வேலை திட்ட பெண் தொழிலாளர்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற பெண்கள் பேசுகையில், … Read more

தஞ்சை பெரிய கோவில் சித்திரை திருவிழா தேரோட்டம்!! நான்கு ராஜ வீதிகளில் வீதி உலா!!

தஞ்சை பெரிய கோவில் சித்திரை திருவிழா தேரோட்டம்!! நான்கு ராஜ வீதிகளில் வீதி உலா!!

தஞ்சை பெரிய கோவில் சித்திரை திருவிழா தேரோட்டம் நான்கு ராஜ வீதிகளில் வீதியுலா வந்து நிலை நிறுத்தப்பட்டது. சிறிது நேரத்தில் மிதமான மழையினால் தரைக்கடை வியாபாரிகள் பாதிப்பு. உலக புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் சித்திரை பெருவிழா கோலாகலமாக நடைபெற்றது இதில் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் இந்நிலையில் தேர் நான்கு ராஜ வீதிகளில் வீதியுலா வந்து தேர் மண்டபத்தில் நிலை நிறுத்தப்பட்டது. சிறிது நேரத்தில் மிதமான மழை பெய்ததால் … Read more

மதம்சார்ந்த பெயர்கள் சின்னங்களை பயன்படுத்தும் அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு!! உச்சநீதிமன்றம் தள்ளுபடி!!

மதம்சார்ந்த பெயர்கள் சின்னங்களை பயன்படுத்தும் அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு!! உச்சநீதிமன்றம் தள்ளுபடி!!

மதம்சார்ந்த பெயர்கள், சின்னங்களை பயன்படுத்தும் அரசியல்கட்சிகளுக்கு எதிரான மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இது தொடர்பாக சையது வசீம் ரிஸ்வி தாக்கல் செய்த பொதுநல மனுவில், வாக்காளர்களை கவர மதம்சார்ந்த பெயர்கள், சின்னங்களை பயன்படுத்த மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் அரசியல்கட்சிகளுக்கு தடை விதித்துள்ளது. இருப்பினும் சில அரசியல் கட்சிகள் இவற்றை பயன்படுத்தி வருகின்றன. அவற்றுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் வகையில் உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார். இந்த பொதுநல மனு உச்சநீதிமன்ற நீதிபதி எம்.ஆர். ஷா … Read more

தமிழக ஆளுநர் மாளிகையில் முதல் முறையாக பிற மாநிலங்கள் உருவான தினம் கொண்டாட்டம்!

தமிழக ஆளுநர் மாளிகையில் முதல் முறையாக பிற மாநிலங்கள் உருவான தினம் கொண்டாட்டம்!

தமிழக ஆளுநர் மாளிகையில் முதல் முறையாக பிற மாநிலங்கள் உருவான தினம் கொண்டாடப்பட்டது. குஜராத் மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்கள் உருவான தினம் ஆளுநர் மாளிகையில் கொண்டாட்டம். பிற மாநில ஆளுநர் மாளிகைகளில் தமிழ்நாடு உருவான தினத்தை கொண்டாடினால் சிறப்பாக இருக்கும், விழாவில் பங்கேற்ற மராட்டிய மாநில தொழிலதிபர் கருத்து தெரிவித்தார். தமிழக ஆளுநர் மாளிகையில் முதல்முறையாக குஜராத் மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்கள் உருவான தினம் இன்று கொண்டாடப்பட்டது. வரும் காலங்களில் இந்த விழா இன்னும் சிறப்பாக கொண்டாடப்படும் … Read more

பணம் மற்றும் பரிசுகள் கொடுத்து மதமாற்றம் செய்வது அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது – மனுவை தள்ளுபடி செய்யக் கோரி தமிழக அரசு பதில்!

பணம் மற்றும் பரிசுகள் கொடுத்து மதமாற்றம் செய்வது அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது - மனுவை தள்ளுபடி செய்யக் கோரி தமிழக அரசு பதில்!

பணம், பரிசுப் பொருட்கள் உள்ளிட்டவற்றை அளித்து செய்யும் மதமாற்றம் அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது என்று அறிவிக்க கோரிய மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு பதில் மனு அளித்துள்ளது. தஞ்சை லாவண்யா தற்கொலைக்கான மூல காரணத்தை கண்டறிய என்ஐஏ, சிபிஐ அல்லது என் எச் ஆர் சி மற்றும் என் சி பி ஆர் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். பணம், பரிசுப் பொருட்கள் உள்ளிட்டவற்றை அளித்து செய்யும் மதமாற்றம் அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது என்று … Read more

என்எல்சி நிறுவனம் நிரந்திர வேலை மற்றும் ஏக்கருக்கு 40 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் – கிராம சபை கூட்டத்தில் தீர்மானம்!

என்எல்சி நிறுவனம் நிரந்திர வேலை மற்றும் ஏக்கருக்கு 40 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் - கிராம சபை கூட்டத்தில் தீர்மானம்!

என்எல்சி நிறுவனம் நிரந்திர வேலை மற்றும் ஏக்கருக்கு 40 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என கத்தாழை கிராமத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர். மே 1 உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு கடலூர் மாவட்டம் முழுவதும் உள்ள 683 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் நடைபெற்று வருகிறது. கடலூர் மாவட்டத்தில் தற்போது முக்கிய பிரச்சினையாக என்எல்சி சுரங்க விரிவாக்க பணிகளுக்காக நிலம் கையகப்படுத்தும் பிரச்சனை உள்ளது. உரிய இழப்பீடு மற்றும் நிரந்திர வேலை … Read more

பொறியியல் சேர்க்கைக்கான ஆன்லைன் பதிவு இந்த வாரம் முதல் தொடக்கம்!!

பொறியியல் சேர்க்கைக்கான ஆன்லைன் பதிவு இந்த வாரம் முதல் தொடக்கம்!!

வரும் கல்வி ஆண்டில் பொறியியல் சேர்க்கைக்கான ஆன்லைன் பதிவு , இந்த வாரத்தில் இருந்து துவங்குகின்றன . இது குறித்த அறிவிப்பு இரு தினங்களில் வெளியாகும் என உயர்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார். வரும் 8 ம் தேதி பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளன. இதை அடுத்து உயர்கல்வி சேர்க்கைக்கான பணிகள் பல்வேறு துறைகளிலும் வேகம் எடுத்து இருக்கின்றன. குறிப்பாக, பொறியியல் படிப்பில் அதிக அளவில் மாணவர்கள் சேர்வதால் இது குறித்த எதிர்பார்ப்பு … Read more

வெயிலால்..100 நாள் வேலை நேரத்தை குறைக்க கிராம சபை கூட்டத்தில் மக்கள் கோரிக்கை!

வெயிலால்..100 நாள் வேலை நேரத்தை குறைக்க கிராம சபை கூட்டத்தில் மக்கள் கோரிக்கை!

வெயிலால் 100 நாள் வேலை நேரத்தை குறைக்க கிராம சபை கூட்டத்தில் மக்கள் கோரிக்கை. மே 1 உழைப்பாளர் தினத்தையொட்டி காட்பாடி அடுத்த கரிகிரி ஊராட்சியில் இன்று மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் தலைமையில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதில் பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகளை மாவட்ட ஆட்சியரிடம் முன்வைத்தனர். கோடை தொடங்கியதில் இருந்து வேலூரில் அதிகப்படியான வெயில் கொளுத்தி வருவதால் மதியம் வரை 100 நாள் வேலை செய்வதில் சிரமம் உள்ளது. ஆகவே கோடை … Read more

தொழிலாளர் நலத் திருத்தச் சட்டத்தில் உள்ள நலனைப் பாதிக்கும் பிரிவுகளை நீக்க முதல்வர் பிரதமரை நேரில் சந்தித்து வலியுறுத்த வேண்டும் – விசிக திருமாவளவன் கோரிக்கை!

தொழிலாளர் நலத் திருத்தச் சட்டத்தில் உள்ள நலனைப் பாதிக்கும் பிரிவுகளை நீக்க முதல்வர் பிரதமரை நேரில் சந்தித்து வலியுறுத்த வேண்டும் - விசிக திருமாவளவன் கோரிக்கை!

ஒன்றிய அரசு கொண்டுவந்துள்ள தொழிலாளர் திருத்த சட்டத்தில் உள்ள தொழிலாளர் நலன் பாதிக்கும் பகுதிகளை நீக்க முதலமைச்சர் பிரதமரை நேரில் சந்தித்து அழுத்தம் தர வேண்டும் – விசிக தலைவர் திருமாவளவன் வேண்டுகோள் விடுத்துள்ளார். மே 1 உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கட்சியின் தலைவரும் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான முனைவர் தொல் திருமாவளவன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர் விடுதலை முன்னணியினர் சென்னை அண்ணா சாலையில் உள்ள பெரியார் சிலையிலிருந்து ஊர்வலமாக … Read more

இரண்டு ஆண்டுகளாக கட்சிக்கு வராதவர் இப்போது பேசினால் அது நல்ல நோக்கத்துடன் இருக்காது – திருப்பூர் துரைசாமி அறிக்கைக்கு வைகோ பதில்!

இரண்டு ஆண்டுகளாக கட்சிக்கு வராதவர் இப்போது பேசினால் அது நல்ல நோக்கத்துடன் இருக்காது - திருப்பூர் துரைசாமி அறிக்கைக்கு வைகோ பதில்!

இரண்டு வருடமாக கட்சிக்கு வராதவர் தற்போது பேசினால் அது நல்ல நோக்கத்தோடு இருக்காது. கட்சியில் 99.9% வைகோ உடன் உள்ளனர். இந்த இயக்கம் பல கஷ்டங்களைக் கடந்து வந்திருக்கிறது இதையும் கடந்து செல்வோம் என திருப்பூர் துரைசாமி கடிதத்திற்கு வைகோ பதில் அளித்துள்ளார். சென்னை எழும்பூரில் உள்ள மதிமுக தலைமை அலுவலகமான தாயாகத்தில் மே 1 தொழிலாளர்கள் தினத்தை முன்னிட்டு மறுமலர்ச்சி தொழிலாளர்கள் சார்பில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கொடி ஏற்றி தொழிலாளர்களுக்கு இனிப்புகளை வழங்கினார். பின்னர் … Read more