வயிறு எரிச்சல் குணமாக.. உங்களுக்கான வீட்டு மருத்துவ குறிப்பு!
காலத்திற்கு ஏற்ப உணவுமுறை அனைத்தும் மாறிவிட்டதால் உடலுக்கு தேவையான சத்துக்கள் கிடைக்கமால் பல வித நோய் பாதிப்புகளுக்கு பெரியவர்கள், சிறியவர்கள் என்று அனைவரும் அனுபவித்து வருகின்றோம்.
இதில் ஒன்றான வயிறு எரிச்சல் பாதிப்பு மிகவும் அவதியடைய வைக்க கூடிய ஒன்றாக இருக்கின்றது. சாப்பிட்டாலும், சாப்பிடாமல் இருந்தாலும் இந்த வயிறு எரிச்சல் மட்டும் ஒருசிலருக்கு அடிக்கடி ஏற்படக் கூடிய ஒன்றாக இருக்கிறது. இதற்கு வயிற்று பகுதியில் புண், அல்சர் பாதிப்பு முக்கிய காரணங்களாக சொல்லப்படுகிறது.
இதை சரி செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள மருத்துவ குறிப்புகளை பின்பற்றினால் நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும்.
குறிப்பு 01:-
*காலை வெறும் வயிற்றில் 1 கப் தயிர் சாப்பிட்டு வந்தால் வயிற்றில் ஏற்படும் எரிச்சல் உணர்வு நீங்கும்.
குறிப்பு 02:-
*ஆப்பிள் சீடர் வினிகரை 1 கிளாஸ் நீரில் கலந்து குடித்து வந்தால் வயிறு எரிச்சல் உணர்வு நீங்கும்.
குறிப்பு 03:-
*வெந்தயத்தை ஊறவைத்து சாப்பிட்டு வந்தால் வயிறு புண் ஆறும்.
குறிப்பு 04:-
*காலை நேரத்தில் 1 கிளாஸ் காய்ச்சி ஆறவைத்த பாலை பருகுவது நல்லது.
குறிப்பு 05:-
*டீ, காபி குடிப்பதை தவிர்த்துவிட்டு எலுமிச்சம் பழச்சாற்றை வெதுவெதுப்பான நீரில் கலந்து குடித்து வருவது நல்லது.
குறிப்பு 06:-
*சீரகம் மற்றும் வெந்தயத்தை பொடியாக்கி மோரில் கலந்து அருந்தினால் வயிறு எரிச்சல், நெஞ்சு எரிச்சல் குணமாகும்.
குறிப்பு 07:-
*இளநீரில் சியா சீட்ஸ் ஊறவைத்து சாப்பிட்டு வந்தால் வயிறு குளிர்ச்சி அடையும்.
குறிப்பு 08:-
*உணவு உட்கொண்ட பின்னர் சிறிது புதினா இலைகளை வாயில் போட்டு மென்று சாப்பிட வயிறு எரிச்சல், வலி ஏற்படாது.