வயிற்றுப்புண்? அப்போ துவரம் பருப்புடன் இந்த 4 பொருட்களை சேர்த்து பருகினால் முழுத் தீர்வு கிடைக்கும்!!

0
94
#image_title

வயிற்றுப்புண்? அப்போ துவரம் பருப்புடன் இந்த 4 பொருட்களை சேர்த்து பருகினால் முழுத் தீர்வு கிடைக்கும்!!

நம்மில் பலர் உரிய நேரத்தில் உணவு எடுத்துக் கொள்வதில்லை. இதனால் வயிற்றில் அல்சர் (வயிற்றுப்புண்) ஏற்படத் தொடங்கி விடுகிறது. இதனை ஆரம்ப நிலையில் சரி செய்வது என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும்.

வயிற்றுப்புண் ஏற்ப்படக் காரணங்கள்:-

*புகைபிடித்தல்

*மது அருந்துதல்

*அதிகப்படியான கார உணவை உண்ணுதல்

*தவறான உணவு பழக்கம்

*முறையற்ற உணவு பழக்கம்

*மன அழுத்தம்

*அதிகளவு ஐஸ்கிரீம், சாக்லேட் சாப்பிடுதல்

*சூடான உணவு உண்ணுதல்

*புளிப்பு தன்மை கொண்ட உணவுகளை உண்ணுதல்

வயிற்றுப்புண் அறிகுறி:-

*காரணமின்றி பற்களை கடித்தல்

*வயிற்றை துளைப்பது போன்ற வலி ஏற்படுதல்

*வயிற்றில் எரிச்சலோடு கூடிய வலி உண்டாகுதல்

வயிற்றுப் புண் பிரச்சனையை சரி செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்:-

*துவரம் பருப்பு – 1 கைப்பிடி அளவு

*பூண்டு – 2 பல்

*சீரகம் – 1/4 தேக்கரண்டி

*மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி

*உப்பு – தேவையான அளவு

செய்முறை:-

அடுப்பில் ஒரு குக்கர் வைத்து அதில் 1 கைப்படி அளவு துவரம் பருப்பு, 1/4 தேக்கரண்டி சீரகம், 1/4 தேக்கரண்டி மஞ்சள் தூள், 2 பல் பூண்டு, தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும்.

பின்னர் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி விடவும். 3 அல்லது 4 விசில் வந்த பின்னர் அடுப்பை அணைத்து விடவும். பின்னர் விசில் சத்தம் நின்றதும் அதில் உள்ள பருப்பு கலவையை ஒரு பவுலுக்கு மாற்றி சாப்பிடவும். இவ்வாறு செய்தால் வயிற்று புண் விரைவில் குணமாகும்.

அதேபோல் அகத்தி கீரையில் ஜூஸ் செய்து பருகினால் வயிற்றுப்புண் பிரச்சனை சரியாகும்.
அருகம்புல்லில் ஜூஸ் செய்து பருகினாலும் வயிற்றுப்புண் பிரச்சனை சரியாகும்.