படியில் ஆபத்தான பயணம் மேற்கொண்ட மாணவர்கள்! ஓட்டுனர் செய்த திடீர் பரபரப்பு!

0
139
Students who made the perilous journey up the stairs! Sudden excitement caused by driving!
Students who made the perilous journey up the stairs! Sudden excitement caused by driving!

படியில் ஆபத்தான பயணம் மேற்கொண்ட மாணவர்கள்! ஓட்டுனர் செய்த திடீர் பரபரப்பு!

நமது வாழ்வில் பேருந்து பயணம் என்பது மிகவும் இன்றியமையாததாக உள்ளது. ஏனெனில் அனைவரும் தனியாக வண்டி வாங்கி, சொந்தமாக செலவு செய்ய முடியுமா? அப்போதும் பலர் வண்டியை வைத்திருக்கிறோம். பேருந்து இல்லாமல் நாமே நீண்ட தூரம் சொந்தமாக பயணம் செய்ய முடியுமா? என்று கேட்டால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

நம் நாட்டில் மக்கள் தொகை அளவு மிக அதிகம். எனவே பேருந்து மூலம் பயணம் செய்யும் முறையே சால சிறந்தது. வீண் செலவுகளை எல்லாம் குறைக்கலாம். நகரங்களின் அனைத்து பகுதிகளிலும் பேருந்துகள் சென்றாலும், இன்னமும் சில குறிப்பிட்ட இடங்களில் மிகவும் கட்டுப்பாடான இடங்களில் மிகவும் குறைவாகவே பேருந்துகள் உள்ளன. அதிலும் குறிப்பாக கிராமங்களுக்குச் செல்லும் பேருந்துகள் மிகவும் குறைவான அளவிலேயே இயக்கப்படுகின்றன.

மாநிலம், மாவட்டம், கிராமம் உள் கிராமம் என பல்வேறு ஊர்களில் இருந்தாலும் சில உட்புற கிராமங்களுக்கு செல்ல என சில மணி நேரத்திற்கு ஒரு பேருந்துகள் தான் என்ற நிலையிலேயே அரசு பேருந்துகளை அரசு இயக்கி வருகின்றது. கிராமங்களிலிருந்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் ஆயிரக்கணக்கானோர் தினமும் மயிலாடுதுறை நகருக்கு பேருந்து மூலம் பயணம் மேற்கொள்கின்றனர்.

அதில் சில கிராமங்களில் பேருந்துகளின் வருகை என்பது மிகவும் கணிசமே. இதில் அந்தந்த நேரத்திற்கு நாம் அந்த பேருந்தை பிடித்தால் தவிர நாம் செல்வதற்கு அங்கு போக்குவரத்துக்கு  வேறு வழி இல்லை என்ற நிலைதான் பெரும்பாலான கிராமங்களில் உள்ளது. கூட்ட நெரிசலையும் பொருட்படுத்தாமல் போய் தான் ஆக வேண்டும். இந்நிலையில் கூட்ட நெரிசலையும் பொருட்படுத்தாமல் மாணவர்கள் பேருந்து கிடைத்தால் போதும் என்ற நோக்கத்தில் படிகளிலேயே பயணம் மேற்கொள்கின்றனர்.

இது ஆபத்து என்று அவர்கள் அறிந்தாலும் அந்த பேருந்தை விட்டால் வேறு பேருந்து இல்லை என்ற எண்ணமும் ஒருபுறம் அவர்களை அப்படி செய்ய வைக்கிறது. இந்நிலையில் நேற்று மாலை நேரத்தில் மயிலாடுதுறையில் இருந்து மணல்மேடு வழியாக ஒரு அரசு பேருந்து சென்றது. மாணவர்கள் அந்த பேருந்தில் தொங்கியபடியே பயணத்தை மேற்கொண்டுள்ளனர். மேலும் அந்த பேருந்தில் மக்கள் கூட்டமும் அதிக அளவில் இருந்துள்ளது.

அந்த மாணவர்களை பேருந்து ஓட்டுனர் உள்ளே வரச்சொல்லி பலமுறை கூறியுள்ளார். ஆனால் மாணவர்கள் அவரை பொருட்படுத்தவே இல்லை. மேலும் தொங்கியபடியே அவர்களது பயணத்தை மேற்கொண்டுள்ளனர்.  ஆனால் ஓட்டுநரும் பலமுறை சத்தமிட்டு கத்தியுள்ளார். மாணவர்களோ அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவே இல்லை. எனவே அந்த ஓட்டுநர் மிகுந்த சிரமத்திற்கு உள்ளானார்.

எனவே பேருந்து ஓட்டுனர் என்ன செய்வதென்று தெரியாமல் மாணவர்கள் மீது ஆத்திரம் அடைந்து அந்த அரசு பேருந்தை நடு வழியிலேயே நிறுத்திவிட்டு, அங்கிருந்து எங்கோ சென்றுவிட்டார். அதன் காரணமாக அங்கு அரை மணி நேரத்திற்கும் மேலாக பரபரப்பு ஏற்பட்டது. மேலும் அரசு பேருந்து அவ்வளவு நேரம் சாலையில் நின்று கொண்டிருந்ததன் காரணமாக அங்கு போக்குவரத்து மிகவும் பாதிக்கப்பட்டது. பலரும் செல்ல முடியாமல் சிக்கிக் கொண்டனர். ஆம்புலன்ஸ் கூட செல்ல முடியாமல் நின்றதும் குறிப்பிடத்தக்கது.

Previous articleஆசை வார்த்தையால் மோசம் போன 14 வயது  சிறுமி! சேலம் அருகே பரபரப்பு!
Next articleஇந்த மாணவர்களுக்கு அரசின் ரூ.75 ஆயிரம் நிதியுதவி! எப்படி விண்ணப்பிப்பது!