கடுமையான வயிறு வலியால் துடிக்கிறீர்களா? அப்போ இது தான் தீர்வு!

0
236
#image_title

கடுமையான வயிறு வலியால் துடிக்கிறீர்களா? அப்போ இது தான் தீர்வு!

ஒருசிலருக்கு காரணம் இன்றி அடிக்கடி வயிற்று வலி ஏற்படும். முறையாக மலம் கழிக்காமை, உண்ட உணவு ஜீரணம் ஆகாமை, உடலுக்கு ஒத்துக்கொள்ளாத உணவை சாப்பிடுதல், வயிற்றில் புழுக்கள் இருத்தல் ஆகியவற்றால் வயிற்று வலி ஏற்படுகிறது. இந்த வயிற்று வலி முழுமையாக குணமாக கீழே கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்திய முறைகள் கைகொடுக்கும்.

*சாதம் வடித்த கஞ்சி தண்ணீர்
*தூள் உப்பு
*பெருங்காயம்

ஒரு கிண்ணத்தில் சாதம் வடித்த கஞ்சி தண்ணீர் எடுத்துக் கொள்ளவும். அதில் 1/4 ஸ்பூன் அளவு பெருங்காயம் மற்றும் தேவைக்கேற்ப தூள் உப்பு சேர்த்து கலக்கி பருகவும். இவ்வாறு செய்தால் சில நிமிடங்களில் வயிற்று வலி குணமாகும்.

*மிளகு
*வெந்தயம்
*சீரகம்
*சோம்பு
*பெருங்காயம்

அடுப்பில் ஒரு வாணலி வைத்து அதில் 5 மிளகு, 1/4 தேக்கரண்டி வெந்தயம், 1/4 தேக்கரண்டி சீரகம், 1/4 தேக்கரண்டி சோம்பு சேர்த்து மிதமான தீயில் வறுக்கவும். பின்னர் அதில் 1 கிளாஸ் அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்கவும்.

அடுத்து சிட்டிகை அளவு பெருங்காயத் தூள் சேர்த்து கொதிக்க வைத்து ஒரு கிளாஸுக்கு வடிகட்டி இளஞ்சூட்டில் பருகவும். இவ்வாறு செய்தால் தீராத வயிற்று வலி குணமாகும்.

*ஓமம்
*சீரகம்

அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் 1 கிளாஸ் தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும். பின்னர் அதில் 1/4 தேக்கரண்டி சீரகம் மற்றும் 1/4 தேக்கரண்டி ஓமம் சேர்த்து கொதிக்க வைத்து ஒரு கிளாஸுக்கு வடிகட்டி அருந்தவும். இவ்வாறு செய்தால் வயிறு வலிக்கு தீர்வு கிடைக்கும்.