அல்சர் பாதிப்பால் அவதிப்படுகிறீர்களா? அப்போ தேங்காய் பாலில் இந்த பொருட்களை சேர்த்து குடிங்கள்!
சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் அல்சரால் அவதியடைந்து வருகின்றனர். காலையில் எவ்வளவு வேலை இருந்தாலும் 8:30 மணிக்குள் உணவு எடுத்துக் கொள்வதை வழக்கமாக்கி கொள்ள வேண்டும்.
சிலர் காலை உணவை தவிர்த்தால் உடல் எடை குறையும் என்று தவறாக நினைத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் காலை உணவை தவிர்ப்பதால் அல்சர், வாய்ப்புண், மலம் கழிக்கும் பொழுது ஆசனவாயில் எரிச்சல், வலி போன்றவை ஏற்படும்.
காலையில் எழுந்ததும் முதலில் தண்ணீர் குடிக்க வேண்டும். அதை விடுத்து டீ, காபி போன்ற சூடான பானங்களை அருந்தினால் வயிற்றுப் பகுதியில் புண் ஏற்படும்.
எனவே அல்சரை குணமாக்க கீழ் கொடுக்கப்பட்டுள்ள நாட்டு வைத்தியத்தை முயற்சிக்கவும்.
*தேங்காய்
*கசகசா
*வெந்தயம்
ஒரு கப் தேங்காய் துருவலை மிக்ஸி ஜாரில் போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அரைத்து பால் எடுத்துக் கொள்ளவும்.
அடுத்து அடுப்பில் ஒரு வாணலி வைத்து 1/2 தேக்கரண்டி கசகசா, வெந்தயம் சேர்த்து வறுக்கவும். இதை மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து பொடியாக்கி கொள்ளவும். இந்த பொடியை தேங்காய் பாலில் கலந்து குடிப்பதை வழக்கமாக்கி கொண்டால் விரைவில் அல்சர் குணமாகும்.