வெறும் 30 நிமிடத்தில் அழகும் ஆரோக்கியமும் !

0
227

இன்றைய நவீன உலகில் மக்கள் அனைவரும் அவர்களது அன்றாட வாழ்வில் நேரம் போதவில்லை என்று குற்றம் சாட்டுகின்றனர். இந்த கால மக்கள் அனைவருக்கும் அலுவலகம் சென்று வேலை பார்த்த வீடு திரும்புவதற்கு நேரம் சரியாக இருக்கிறது. இவர்கள் பார்க்கும் வேலையும் உடலுக்கு எங்த உழைப்பையும் தருவதாக இல்லை. இதனால் இவர்கள் உடல் ரீதியாக பல சிக்கல்களுக்கு ஆளாகின்றனர்.

தினமும் 30-45 நிமிடம் வரை உடற்பயிற்சி செய்வதன் மூலம் நம் அழகும் ஆரோக்கியமும் மேன்மை அடையும். நாம் இவ்வாறாக உடற்பயிற்சி செய்வதன் மூலம் நம் உடம்பிலிருந்து கெட்ட கொழுப்புகள் வியர்வை வழியாக வெளியேறும். இது உடல் பருமன்,உடல் சோர்வு,உடல் பாகங்களின் வலிகள், மன அழுத்தம் போன்றவற்றை தடுக்கிறது.

சரியான சத்து விகிதத்தில் எடுத்துக்கொள்ளும் உணவின் மீது இருக்கும் கவனத்தை சம அளவு நாம் உடற்பயிற்சி மீதும் செலுத்த வேண்டும். உடற்பயிற்சி செய்வதன் மூலம் உடலின் மெட்டபாலிசம் தூண்டப்படுகிறது. உடற்பயிற்சி உடல் ரீதியாக மட்டுமல்லாமல் மன ரீதியாகவும் மனிதனுக்கு உதவுகிறது. யோகாசனம் செய்யும் பொழுது நமக்கு மன அமைதி கிடைக்கிறது.


பதற்றத்தை கட்டுப்படுத்துவதற்கு நாம் உடற்பயிற்சி மேற்கொள்ளலாம். இது பதற்றத்தினைத் தடுத்து தன்னம்பிக்கையை உருவாக்கும்.மேலே சொன்னது போல் உடல் பருமனை குறைத்து அழகுக்கு உடற்பயிற்சி வழிவகுக்கிறது. அதோடு மட்டுமல்லாமல் வியர்வையின் மூலம் கெட்ட ரத்தம் வெளியேறுவதனால் நம் தோல்களுக்கு நல்ல பளபளப்பைக் உருவாக்கும். இதனால் நமக்கும் உள்ளிருந்து ஆரோக்கியமான வழியில் அழகு கிடைக்கும்.

காலை நேரத்தில் நாம் உடற்பயிற்சி செய்யும் பொழுது தூய்மையான காற்றை சுவாசிக்க இயலும். இதனால் நமது மனம் புத்துணர்ச்சி அடையும். அந்த நாள் சிறப்பாக அமைவதற்கு உடற்பயிற்சியும் ஒரு காரணமாக இருக்கும். உடற்பயிற்சி செய்வதனை ஒரு வழக்கமாகக் கொண்டிருந்தால் அவ்வளவு எளிதில் நமக்கு எந்த நோயும் வராது. தினமும் உடற்பயிற்சி செய்து உடலை சீராக வைத்துக் கொள்வோம்.

Previous articleசெம்பருத்தி இலையில் இவ்வளவு நன்மைகளா !
Next articleகாதலியை கரம் பிடிக்க மறுத்ததால் கம்பி எண்ணும் காதலன்!