டி20 கிரிக்கெட் தொடர் ஒத்திவைப்பு! இதுதான் காரணமா?!

Photo of author

By Jayachithra

டி20 கிரிக்கெட் தொடர் ஒத்திவைப்பு! இதுதான் காரணமா?!

Jayachithra

Updated on:

இந்திய அணி உலக கோப்பை டெஸ்ட் போட்டிக்கு விராட் கோலி தலைமையில் சென்ற நிலையில், டி20 போட்டிகள் இலங்கைக்கு ஷிகர் தவான் தலைமையில் சென்று உள்ளது.

மேலும், முதலாவது ஒருநாள் போட்டி 13ஆம் தேதி தொடங்கவிருந்த நிலையில், இலங்கை கிரிக்கெட் அணியின் பேட்டிங் பயிற்சியாளர் கிரான்ட் ஃபிளவர் மற்றும் உதவி ஊழியர் ஜி.டி நிரோஷன் போன்றோருக்கு கொரோனா வைரஸ் தோற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன் காரணமாக இருவரும் மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர். மேலும், இந்தியா-இலங்கை அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடர் நான்கு நாட்களுக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அத்துடன் மாற்றப்பட்ட அட்டவணைப்படி, முதலாவது ஒருநாள் போட்டி 17ஆம் தேதி நடக்கவிருக்கிறது.

இரண்டாவது ஒருநாள் போட்டியானது 19ம் தேதியும், மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி 21ம் தேதியும் நடைபெறுகிறது. 3 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் தொடர்கள் முறையே 24, 25, 27 போன்ற தேதிகளில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.