மகாராஷ்டிராவில் ஆட்சி தப்பிக்குமா? இன்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை

மகாராஷ்டிராவில் ஆட்சி தப்பிக்குமா? இன்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனா கட்சியின் தலைமையிலான ஆட்சி அமையும் என நேற்று முன் தினம் இரவு வரை எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென நேற்று அதிகாலை பாஜக ஆட்சி அமைந்ததை அங்குள்ள அரசியல் வல்லுனர்களாலே இன்னும் ஜீரணிக்க முடியவில்லை. இரவோடு இரவாக அமித்ஷா செய்த மேஜிக் காரணமாக, தேசியவாத காங்கிரஸ் கட்சி உடைக்கப்பட்டு தற்போது அங்கு கூட்டணி ஆட்சி ஏற்பட்டுள்ளது இந்த நிலையில் பாஜகவை ஆட்சி அமைக்க மகாராஷ்டிர … Read more

’அதிசயம் நிகழும்’ ஆனால்… கே.எஸ்.அழகிரியின் கிண்டலான பதில்

’அதிசயம் நிகழும்’ ஆனால்… கே.எஸ்.அழகிரியின் கிண்டலான பதில் வரும் 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் தமிழக அரசியலில் இதுவரை இல்லாத வகையில் ஒரு புதுவிதமான தேர்தலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை அதிமுக, திமுக என இரண்டு திராவிட கட்சிகளின் தலைமையில்தான் கூட்டணி அமைந்து ஒரு திராவிட கட்சி ஆளும் கட்சியாகவும் இன்னொரு கட்சி எதிர்க்கட்சியாகவும் இருந்து வருகிறது. இந்த நிலையில் ரஜினிகாந்த்-கமல்ஹாசன் இணைந்து இரண்டு திராவிட கட்சிகளின் கூட்டணியை ஒரே நேரத்தில் சந்திக்கும் கூட்டணி … Read more

முட்டையும் முட்டையும் சேர்ந்தால் முட்டை தான் வரும்: ரஜினி, கமல் இணைப்பை குறித்து அமைச்சர்

முட்டையும் முட்டையும் சேர்ந்தால் முட்டை தான் வரும்: ரஜினி, கமல் இணைப்பை குறித்து அமைச்சர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தனியாக அரசியலில் களம் புகுந்தாலே திராவிட கட்சிகளின் கூட்டணி ஆட்டம் காணும் என்று அரசியல் விமர்சகர்கள் கூறிவரும் நிலையில், தற்போது கமல்ஹாசனுடன் அவர் கூட்டணியாக இணைந்து தேர்தலை சந்திக்க இருப்பதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது இந்த நிலையில் அதிமுக அமைச்சர்கள் கமல், ரஜினி கூட்டணி மகுறித்து பல்வேறு விதமாக விமர்சனம் செய்து வருகின்றனர். குறிப்பாக அமைச்சர் … Read more

பாஜக,அதிமுக முத்திரையை தந்திரமாக உடைத்த ரஜினி:

பாஜக,அதிமுக முத்திரையை தந்திரமாக உடைத்த ரஜினி: ரஜினி தான் என்று அரசியலுக்கு வருவதாக கூறினாரோ அன்றில் இருந்து அவரை பாஜகவின் ஆதரவாளர் என்றும், அதிமுகவுக்கு அவர் ஆதரவு கொடுப்பார் என்றும் பேசப்பட்டு வந்தன. தனக்கு பின்னால் பாஜகவும் இல்லை வேறு எந்த கட்சியும் இல்லை என்றும், தான் தனித்து 234 தொகுதிகளிலும் போட்டியிடுவேன் என்று ரஜினி கூறியும் யாரும் அதனை நம்ப வில்லை. மீண்டும் மீண்டும் அவர் பாஜகவுக்கு ஆதரவாக பேசுவதாக அரசியல்வாதிகள் தெரிவித்து வந்தனர். இந்த … Read more

அரசியல் ரீதியில் கமல்-ரஜினி இணைப்பு சாத்தியமா?

அரசியல் ரீதியில் கமல்-ரஜினி இணைப்பு சாத்தியமா? சமீபத்தில் நடைபெற்ற ’கமல்ஹாசன் 60’ நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விஜய்யின் தந்தை எஸ்ஏ சந்திரசேகர் அவர்கள், ரஜினி-கமல் ஆகிய இருவரும் இணைந்து அரசியலில் கூட்டணி அமைத்து போட்டியிட வேண்டும் என்றும், இருவரும் இணைந்து ஆட்சி அமைத்தால் தமிழர்களுக்கும் தமிழ்நாட்டிற்கும் நல்லது என்றும் தெரிவித்தார். இதனை அடுத்து கமல் மற்றும் ரஜினி தரப்பிலிருந்து பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக செய்திகள் வெளியாகி வருகிறது இந்த நிலையில் ரஜினி-கமல் அரசியலில் இணைவது என்பது சாத்தியமா? … Read more

கமல் விழாவில் அஜித் வராதது ஏன்? புதிய தகவல்

கமல் விழாவில் அஜித் வராதது ஏன்? புதிய தகவல் ‘கமல்ஹாசன் 60’ என்று ஞாயிறு அன்று நடைபெற்ற பாராட்டு விழாவில் அஜித்துக்கு என பிரத்யேக அழைப்பு விடுக்கப்பட்டிருந்ததால் அவர் கண்டிப்பாக இந்த விழாவில் பங்கேற்பார் என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் வழக்கம்போல் இந்த விழாவையும் புறக்கணித்துவிட்டார். இந்த விழாவில் அஜித் சென்னையில் இருந்து கொண்டே கலந்து கொள்ளாதது ஏன் என்பது குறித்த தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளது. ரஜினி, கமல் உள்பட பல பிரபலங்கள் கலந்து கொள்ளும் இந்த … Read more

ரஜினி, கமல், விஜய்க்கு எதிராக அஜித்தை களமிறக்குவோம்: தமிழக அமைச்சர்

ரஜினி, கமல், விஜய்க்கு எதிராக அஜித்தை களமிறக்குவோம்: தமிழக அமைச்சர் திமுக, அதிமுக ஆகிய இரண்டு மிகப்பெரிய திராவிட கட்சிகளை தேர்தல் அரசியலில் ஒரு புதிய கட்சியை சமாளிக்க வேண்டும் என்பது மிகப்பெரிய சவாலாகும். அந்த சவாலை விஜயகாந்தின் கட்சி உட்பட எந்த கட்சியும் இதுவரை சமாளிக்க முடியவில்லை என்பதுதான் நடைமுறை உண்மை சமீபத்தில் கட்சி ஆரம்பித்த கமல்ஹாசன் அவர்கள் இரு திராவிட கட்சிகளுக்கு மாற்றாக இருப்பார் என்று எண்ணிய நிலையில், மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட அனைத்து … Read more

ஐஐடி மாணவி பாத்திமா மரணத்திலும் அரசியல் ஆதாயம் தேடுகிறாரா ஸ்டாலின்??!

ஐஐடி மாணவி பாத்திமா மரணத்திலும் அரசியல் ஆதாயம் தேடுகிறாரா ஸ்டாலின்??! சமீபத்தில் தற்கொலை செய்து கொண்ட ஐஐடி மாணவி பாத்திமா மரணத்திலும் திமுக தலைவர் ஸ்டாலின் அரசியல் ஆதாயம் தேடுகிறார் என விமர்சனம் எழுந்துள்ளது. முன்னதாக மாணவி பாத்திமா மரணம் குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் தன்னுடைய முகநூல் பக்கத்தில் கருத்து தெரிவித்திருந்தார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது. சென்னை ஐஐடி மாணவி பாத்திமா மரணம் தற்கொலை அல்ல; அதில் பல மர்மங்கள் அடங்கி … Read more

தோனி நம்பர் 2, மோடி நம்பர் 1 ! தோனியை முந்தினார் மோடி!

லண்டனில் இருந்து வெளியான தகவலின் படி தோனி இரண்டாம் இடம் மோடி முதல் இடம் பிடித்துள்ளார். இந்த நிறுவனம் வருடத்தில் ஒரு முறை இந்த தகவலை தெரிவிக்கும் அதன் படி இந்த வருடம் மோடி முதல் இடமும் தோனி இரண்டாம் இடமும் பிடித்துள்ளனர். இதில் இந்தி நடிகர்கள் அமிதாப் பச்சன், சாருகான், சல்மான் கான், மற்றும் குத்து சண்டை வீராங்கனை மேரி கோம் இடம் பிடித்துள்ளனர். அதாவது அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி இந்தியாவில் அதிகம் … Read more