அசுர வேகத்தில் தலை முடி வளர இதை ஒரு ஸ்பூன் தலையில் ஊற்றி தேயுங்கள்!! 100% ரிசல்ட் கிடைக்கும்!

Pour a spoonful of this on your head and rub it on your head for faster hair growth!! Get 100% Results!

அசுர வேகத்தில் தலை முடி வளர இதை ஒரு ஸ்பூன் தலையில் ஊற்றி தேயுங்கள்!! 100% ரிசல்ட் கிடைக்கும்! அழகை கூட்டுவதில் தலை முடி முக்கிய பங்கு வகிக்கிறது.இந்த முடியை முறையாக பராமரிக்க பல முயற்சிகளை மேற்கொண்டும் பயனில்லை என்று வருந்தும் நபர்கள் வீட்டு முறையில் தேங்காய் எண்ணெய் தயாரித்து சில பொருட்களை போட்டு ஊறவைத்து தலைக்கு தேய்த்து வந்தால் அசுர வேகத்தில் முடி வளர்ச்சி இருக்கும். தேவையான பொருட்கள்:- 1)தேங்காய் பால் 2)வெந்தயம் 3)கறிவேப்பிலை 4)வெட்டி … Read more

முடி உதிர்வு முற்றிலும் நின்று அடர்த்தியாக வளர இதை ட்ரை பண்ணுங்க!

முடி உதிர்வு முற்றிலும் நின்று அடர்த்தியாக வளர இதை ட்ரை பண்ணுங்க! இன்றைய காலத்தில் அனைவரும் சந்தித்து வரும் பிரச்சனைகளில் ஒன்று முடி உதிர்தல். இவற்றிக்கு ஜீன் குறைபாடு,மன அழுத்தம்,காற்று மாசு,உணவு முறையில் மாற்றம்,தூக்கமின்மை,ஹார்மோன் மாற்றம்,பொடுகு பிரச்சனை,ஊட்டச்சத்து குறைபாடு,ரசாயனம் அதிகம் நிறைந்த ஷாம்பு போன்றவைகள் பொதுவான காரணங்களாக சொல்ல படுகின்றது.முடி உதிர்வை கட்டுப்படுத்த முடியாமல் பலரும் திணறி வரும் நிலையில் இப்பிரச்சனைக்கு உரிய எளிய தீர்வுகள் பல இருக்கின்றன. முடி உதிர்வு பாதிப்பை உணவு முறை மூலம் … Read more

ஷாம்பூ உடன் இந்த ஒரு பொருளை சேர்த்து பயன்படுத்தி பாருங்கள்!! முடி வளர்வது நிற்கவே நிற்காது!!

ஷாம்பூ உடன் இந்த ஒரு பொருளை சேர்த்து பயன்படுத்தி பாருங்கள்!! முடி வளர்வது நிற்கவே நிற்காது!!

நூற்றில் 99 சதவீதம் பெண்களுக்கு இருக்கக்கூடிய ஒரு மிகப்பெரிய பிரச்சனை தலைமுடி உதிர்வு. அதாவது பல பேருக்கு தலை முடி வளர்ச்சி இல்லாமல் அடர்த்தி இல்லாமல் ஒல்லியாக இருப்பதை பார்த்திருப்போம். இந்த பிரச்சனை ஏற்படுவதற்கு காரணம் சேர்க்கையாக நம் தலை முடிக்கு பயன்படுத்தக்கூடிய ஷாம்பு தான். எனவே தலைமுடி உதிர்வு நின்று தலைமுடி அடர்த்தியாக நீளமாக வளர வளர்வதற்கு ஒரு சிறந்த டிப்ஸை இங்கு தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்:
சின்ன வெங்காயம்
ஷாம்பூ

பொருட்களின் பயன்கள்:
தலைமுடியின் வளர்ச்சிக்கு தேவையான சல்ஃபர் இந்த சின்ன வெங்காயத்தில் அதிகமாக இருப்பதால் இது முடி உதிர்வை தடுக்கிறது. கூந்தலை பற்றி அக்கறை எடுத்து கவனிக்க நேரமில்லை என்று கூறுபவர்கள் இந்த முறையை தொடர்ந்து பின்பற்றி வர நிச்சயமாக முடி உதிர்வு நின்று நல்ல தீர்வை கொடுக்கும்.

மேலும் இந்த சின்ன வெங்காயத்தில் உள்ள ஆன்டிஆக்சிடென்ட் தலைமுடியில் உள்ள பொடுகு தொல்லை எரிச்சல் ஆகியவற்றை குணமாக்க கூடிய சக்தி பெற்றது. எனவே செயற்கையாக நிறைய பொருட்களை பயன்படுத்தாமல் இயற்கையான முறையில் இவ்வாறு தொடர்ந்து செய்து வர தலைமுடி உதிர்வு பொடுகு பிரச்சனை என தலைமுடி சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்சனைகளுக்கும் ஒரு நிரந்தர தீர்வாக இந்த ரெமிடி அமைகிறது.

செய்முறை:
நான்கு அல்லது ஐந்து சின்ன வெங்காயங்களை தோல் நீக்கி நன்றாக கழுவி மிக்ஸியில் அரைத்து எடுத்துக் கொள்ளவும். இவ்வாறு அரைத்த இதிலிருந்து வெறும் சாறை மட்டும் வடிகட்டி எடுத்துக் கொள்ளவும். இப்போது இந்த சாறுடன் நீங்கள் பயன்படுத்தக்கூடிய ஷாம்புவை கலந்து கொள்ளவும்.

இப்போது தலையை நன்றாக கழுவி விட்டு நம் கலந்து வைத்திருக்கக்கூடிய வெங்காயச்சாறு மற்றும் ஷாம்புவை முடியின் வேர்களில் படுமாறு நன்றாக தேய்த்து இரண்டு நிமிடங்களுக்கு நன்கு மசாஜ் செய்ய வேண்டும். இவ்வாறு செய்யும் போது தலைமுடியின் அனைத்து பகுதிகளுக்கும் இந்த வெங்காயச்சாறு செல்லும்.

இந்த ஷாம்புவில் வெங்காயச்சாறு சேர்க்கப்படுவதால் ஷாம்புவில் உள்ள ரசாயன வீரியங்கள் குறைக்கப்படுகிறது. இவ்வாறு இதை தலைக்கு குளிக்கும் போதெல்லாம் செய்து வர தலைமுடி உதிர்வு நின்று தலைமுடி மெலிதாக காணப்படுவது மறைந்து புதிய முடி அடர்த்தியாக பளபளப்பாக கருமையாக காணப்படும். மேலும் முடி வளராமல் சொட்டையாக இருக்கும் இடங்களில் புதிய முடிகள் வளர ஆரம்பிக்கும். மேலும் இந்த வெங்காய சாரானது பொடுகு தொல்லை வராமல் தலைமுடியை பாதுகாக்கிறது.