கண்ணிமைக்கும் நேரத்தில் ஏற்பட்ட வாகன விபத்து:! வெளியான சிசிடிவி காட்சிகள்!

கண்ணிமைக்கும் நேரத்தில் ஏற்பட்ட வாகன விபத்து:! வெளியான சிசிடிவி காட்சிகள்!

கண்ணிமைக்கும் நேரத்தில் ஏற்பட்ட வாகன விபத்து:! வெளியான சிசிடிவி காட்சிகள்! சென்னை ஓஎம்ஆர் துரைப்பாக்கம் சர்வீஸ் ரோட்டில் அதிவேகமாக வந்த கார் ஒன்று,எதிரே வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில்,பெண் உட்பட இரண்டு நபர்கள் தூக்கி வீசப்படும் காட்சி வெளியாகியுள்ளது. கடந்த ஒன்பதாம் தேதி அன்று,இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.கண்ணிமைக்கும் நேரத்தில் ஏற்பட்ட இந்த விபத்து தூக்கி வீசப்பட்டவர்கள் காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இருந்தபோதிலும் அந்த காரை ஓட்டி வந்த துரைப்பாக்கத்தில் சேர்ந்த 62 வயது நபரிடம்,காவல்துறையினர் … Read more

சேலம் தாரமங்கலம் அருகே லாரி மோதி இருவர் பலி !

சேலம் தாரமங்கலம் அருகே லாரி மோதி இருவர் பலி !

சேலம் தாரமங்கலம் அருகே லாரி மோதி இருவர் பலி !   சேலம் மாவட்டம் தாரமங்கலம் பகுதியை சேர்ந்தவர் பழனிச்சாமி என்பவர்,இவர் மனைவி மல்லிகா.இவர்கள் தாரமங்கலத்தில் மளிகை கடை நடத்தி வருகின்றனர். பழனிச்சாமி தனது மனைவிக்கு வண்டி ஓட்ட தெரியாது என்பதனால், செப்டம்பர் 10-ஆம் தேதி இரவு தனது மனைவிக்கு,அங்குள்ள பைபாஸ் ரோட்டில் ஸ்கூட்டர் ஓட்ட கற்றுக்கொடுத்திருந்தார். அப்பொழுது, இரவு 11 மணி அளவில் அந்த வழியாக சென்ற அடையாளம் தெரியாத லாரி ஒன்று,பழனிசாமியின் ஸ்கூட்டியில் மோதிவிட்டு,நிற்காமல் … Read more

பாகிஸ்தானில் எதிர்பாராத நடந்த சோகம்

பாகிஸ்தானில் எதிர்பாராத நடந்த சோகம்

கைபர் பக்துங்வா என்ற மாகாணம் பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில்  மொஹமண்ட் மாவட்டத்தில் உள்ளது. இங்கு பளிங்கு கல் குவாரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த குவாரியில் நேற்று வழக்கம் போல் ஏராளமான தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு சற்றும் எதிர்பாராத வகையில் திடீரென பெரிய பாறை ஒன்று சரிந்து தொழிலாளர்கள் மீது விழுந்தது. இதில் 30-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டனர். இதையடுத்து அங்கு உடனடியாக மீட்பு குழுவினர் குவிக்கப்பட்டு மீட்பு பணிகள் முடுக்கி விடப்பட்டன. … Read more

ராணுவ டாங்கி மீது மோதிய கார் 4 பேர் பலி

ராணுவ டாங்கி மீது மோதிய கார் 4 பேர் பலி

வடகொரியா மற்றும் தென்கொரியா இடையே நீண்ட காலமாக மோதல் நீடித்து வருகிறது. இந்த மோதலை எதிர்கொள்ள தென் கொரியாவுக்கு அமெரிக்கா பக்கபலமாக இருந்து வருகிறது. அதன்படி வடகொரியாவின் தாக்குதலை சமாளிப்பதற்காக அமெரிக்க வீரர்கள் சுமார் 28 ஆயிரம் பேர் தென்கொரியாவில் நிறுத்தப்பட்டுள்ளனர். இதனிடையே வடகொரியாவின் எதிர்ப்பையும் மீறி அமெரிக்கா மற்றும் தென் கொரியாவின் ராணுவ படைகள் கொரிய எல்லையில் கூட்டு பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. இந்தநிலையில் தென்கொரியாவின் வடமேற்கு பகுதியிலுள்ள கியோங்கி மாகாணம் போச்சியான் நகரில் அமெரிக்க படைகள் … Read more

சீனாவில் அதிகரிக்கும் இறப்பு விகிதம்

சீனாவில் அதிகரிக்கும் இறப்பு விகிதம்

ஷாங்ஷி என்ற மாகாணம் சீனாவின் வடக்குப் பகுதியில் உள்ளது. அங்குள்ள ஜியான்பெங் நகரில் சென்ஹுவாங் என்ற கிராமத்தில் 2 மாடிகள் கொண்ட பழமையான ஓட்டல் ஒன்று செயல்பட்டு வந்தது.  நேற்று முன்தினம் அந்த கிராமத்தைச் சேர்ந்த 80 வயது முதியவர் ஒருவரின் பிறந்தநாள் இந்த ஓட்டலில் கொண்டாடப்பட்டது. இதையொட்டி அந்த முதியவரின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் ஏராளமானோர் அங்கு வந்திருந்தனர். அப்போது உள்ளூர் நேரப்படி காலை 9.40 மணி அளவில் திடீரென ஓட்டல் இடிந்து விழுந்தது. இதில் … Read more

சீனாவில் தொடரும் சோகம் 17 பேர் பலி

சீனாவில் தொடரும் சோகம் 17 பேர் பலி

சீனாவின் ஷன்ஜி மாகாணம் லின்ஃபென் நகரில் உணவக விடுதி ஒன்று செயல்பட்டு வந்தது. 2 மாடிகளை கொண்ட அந்த உணவகம் இன்று திடீரென இடிந்து விழுந்து தரைமட்டமானது.  50-க்கும் மேற்பட்டோர் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கிகொண்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்பு குழுவினர் இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கிய 28 பேர் படுகாயங்களுடன் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். அதில் 7 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் அவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு தீவிர … Read more

சீனாவில் சரக்கு கப்பலுடன் விபத்தா?

சீனாவில் சரக்கு கப்பலுடன் விபத்தா?

3 ஆயிரம் டன் எடை கொண்ட பெட்ரோலை சீனாவில் உள்ள ஷாங்காய் நகருக்கு கிழக்கே மஞ்சள் கடலில் எண்ணெய் கப்பல் சென்று கொண்டிருந்தது.  யாங்ட்சி நதி முகத்துவாரம் அருகில் மணல் மற்றும் ஜல்லி ஏற்றி வந்த சரக்கு கப்பலுடன் எண்ணெய் கப்பல்  மிகுந்த வேகத்துடன் மோதியது. இந்த சம்பவத்தில் கப்பல் தீப்பிடித்து எரிந்தது. விபத்தான இடத்திற்கு விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் மீட்பு பணியில் 15 கப்பல்கள் மற்றும் 2 விமானங்களை ஈடுபடுத்தப்பட்டனர். இந்த மீட்பு பணியில் 3 … Read more

தொடரும் செல்போன் டவர் விபத்து!! திருப்பூரில் சோகம்..

தொடரும் செல்போன் டவர் விபத்து!! திருப்பூரில் சோகம்..

திருப்பூரில் நீண்டகாலமாக பராமரிப்பு இல்லாத 80 அடி உயரமுள்ள செல் டவர் சரிந்ததால் இருசக்கர வாகனத்தில் சென்றவர் பரிதாபமாக உயிரிழந்தார். திருப்பூர் மாவட்டத்தில் பல்லடம் சாலையில் தமிழ்நாடு திரையரங்கம் அருகே நீண்டகாலமாக பராமரிப்பு இல்லாத காரணத்தால் மிகவும் பழுதடைந்த நிலையில் செல்போன் டவர் ஒன்று இருந்தது. அந்த சாலையில் தினமும் நிமிடத்திற்கு ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று கொண்டிருக்கும் நிலையில் இன்று யாரும் எதிர்பார்க்காத போது திடீரென அந்த செல்போன் டவர் சாலையில் சரிந்து விழுந்தது விபத்திற்க்குள்ளானது. இதனால் … Read more

பள்ளத்தில் வேன் கவிழ்ந்து ஓட்டுனர் பலி!

பள்ளத்தில் வேன் கவிழ்ந்து ஓட்டுனர் பலி!

ஸ்ரீவில்லிபுத்தூரில் தனியார் மில்லுக்கு சொந்தமான வேன் ஒன்று கவிழ்ந்து சம்பவ இடத்திலேயே ஓட்டுனர் பலியானார். விருதுநகர்: சங்கரன்கோவில் தாலுகா பெரும்பத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜதுரை (வயது 38). ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து ராஜபாளையம் செல்லும் வழியில் வன்னியம்பட்டி காவல் நிலையம் அருகே தனியார் மில் ஒன்று உள்ளது. இந்த மில்லுக்கு சொந்தமான வாகனம் ஒன்றில் ராஜதுரை ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார். வழக்கம் போல் இன்றும் பணியாளர்களை ஏற்றுவதற்காக ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள சுரைக்காய்பட்டி கிராமத்திற்கு வேனை ஓட்டி சென்றுள்ளார். கரிசல்குளம் … Read more

ஆம்புலன்ஸ் பணியாளர்களின் நேர்மைக்காக குவியும் பாராட்டுகள்!

ஆம்புலன்ஸ் பணியாளர்களின் நேர்மைக்காக குவியும் பாராட்டுகள்!

ஒரத்தநாடு அருகே விபத்தில் சிக்கி கிடந்தவரிடம் இருந்த ரூ4.20 லட்சம் ரொக்கத்தை அவரது தந்தையிடம் ஆம்புலன்ஸ் பணியாளர்கள் ஒப்படைத்தனர். இதனால் அவர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை காளியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் அலெக்சாண்டர் (வயது37). இவர் பல பணிகளுக்கு காண்ட்ராக்ட் அடிப்படையில் வேலையாட்கள் அனுப்பும் பணி செய்து வருகின்றார். இவ்வாறு அனுப்பிய பணியாளர்களுக்கு இன்று சம்பளம் கொடுப்பதற்காக ரூ4.20 லட்சத்தை எடுத்துக் கொண்டு அதிகாலை 5 மணியளவில் ஒரத்தநாட்டுக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அவர் செல்லும் வழியான பாப்பாநாட்டில் தனியார் பள்ளி அருகில் இருக்கும் சாலையில் உளுந்தை காய வைப்பதற்காக நேற்று இரவே கொட்டி குவியலாக வைத்திருந்தனர். அதிகாலை என்பதால் அந்த குவியல் அலெக்சாண்டருக்கு தெரியாததால், அதில் மோதி கீழே விழுந்து மயக்கமடைந்தார்.

இதனைப் பார்த்தவர்கள் உடனடியாக ஆம்புலன்ஸிற்கு தகவல் தெரிவித்தனர். இதனைத்தொடர்ந்து ஆம்புலன்ஸ் பணியாளர்கள் வந்து அலெக்சாண்டரை ஆம்புலன்சில் ஏற்றினர். அப்போது அலெக்சாண்டரிடம் ரூ.4 லட்சத்து 20 ஆயிரத்து 309 ரொக்கம் இருந்தது. ஆம்புலன்ஸ் டிரைவர் கர்ணன்(30) மற்றும் டெக்னீஷியன் தவக்குமார்(32) ஆகியோர் அப்பணத்தை பத்திரமாக எடுத்து வைத்தனர்.

உடனடியாக அலெக்சாண்டரை சிகிச்சைக்காக பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவருக்கு அங்கு தீவிரமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதன் பின்னர் அலெக்சாண்டரின் தந்தை செல்வராஜை தொடர்பு கொண்டு இதுபற்றி தகவல் தெரிவித்தனர். மருத்துவமனைக்கு விரைந்து வந்த அவரின் தந்தையிடம் ரொக்க பணத்தை ஆம்புலன்ஸ் பணியாளர்கள் ஒப்படைத்தனர். ஆம்புலன்ஸ் டிரைவர் கர்ணன் மற்றும் டெக்னீஷியன் தவக்குமார் ஆகியோரின் இச்செயலை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

Read more