திமுகவின் கனவிற்கு ஆப்பு வைத்த ஆடிட்டர் குருமூர்த்தி! அதிர்ச்சியில் திமுக!

திமுகவின் கனவிற்கு ஆப்பு வைத்த ஆடிட்டர் குருமூர்த்தி! அதிர்ச்சியில் திமுக!

ரஜினி தனியாக அரசியல் கட்சி ஆரம்பிப்பது என்ற முடிவில் இருந்து பின்வாங்கி இருக்கின்ற நிலையில், ஆடிட்டர் குருமூர்த்தி இன்னொரு அரசியல் வியூகத்துடன், 2021 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலுக்கு ரெடியாகி வருவதாக, தகவல் வெளியாகி இருக்கின்றது. இப்போதுள்ள சூழ்நிலையில், தமிழக அரசியல் களத்தில் அதனை தீர்மானம் செய்யக்கூடிய மிக முக்கிய நபர்களில் ஒருவராக இருப்பவர் துக்ளக் பத்திரிகையின் ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்த்தி, ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னால் இவர் நினைத்தபடி தான் அரசியல் அமைந்தது என்பது குறிப்பிடத்தக்க ஒன்று. … Read more

திமுக மீது வழக்கு தொடுத்த அதிமுக! அடுத்தது என்ன!

திமுக மீது வழக்கு தொடுத்த அதிமுக! அடுத்தது என்ன!

திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களை விமர்சிக்கும் விதமாக பட்ட பட்ட சுவரொட்டிகளை கிழித்த திமுகவினர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கின்றது. சேலம் மாவட்டம் ஓமலூரில் திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களை விமர்சிக்கும் விதமாக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருக்கிறது. இதனைத்தொடர்ந்து, அங்கே வந்த திமுக கட்சியினர் அந்த சுவரொட்டிகளை அகற்றினர். இதுபற்றி ஓமலூர் காவல்துறையில் புகார் கொடுக்கப்பட்டது. அந்த புகாரில் அதிமுக சாதனைகளை சுவரொட்டிகளை அச்சடித்து ஒட்டிய நிலையில், அதனை திமுகவினர் ஒரு காழ்ப்புணர்ச்சியின் காரணமாக அகற்றி உள்ளனர். எனவும், … Read more

தமிழக வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு காலமானார்

தமிழக வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு காலமானார்

தமிழக வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு அவர்களுக்கு மூச்சு திணறல் காரணமாக கடந்த மாதம் 13ஆம் தேதி அன்று அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  அவருக்கு உடலில் வேறு சில பிரச்சனைகளும் இருந்துள்ளது. அதன்பிறகு அவருக்கு கொரோனா தொற்று நோய் இருப்பது கண்டறியப்பட்டு, மருத்துவர்களால் உறுதி செய்யப்பட்டுள்ளது. உயர் சிகிச்சைக்காக காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. உடலில் சில முக்கிய உறுப்புகள் செயல்படுவதற்கு சிக்கல் ஏற்பட்டுள்ள நிலையில், அவரின் உடல் நிலை மிகவும் … Read more

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது – மேலும் சில தளர்வுகள் அறிவிப்பு!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது - மேலும் சில தளர்வுகள் அறிவிப்பு!

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா இந்தியாவிலும் பரவியதால் முழு ஊரடங்கு முறை பின்பற்றப்பட்டு வந்தது. அதன் பிறகு செப்டம்பர் மாதம் முதல் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டு இருந்தன. தற்போது நவம்பர் மாதம் 30ஆம் தேதி வரையிலும் இந்த ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அத்துடன் மேலும் சில தளர்வுகளையும் அறிவித்து இருக்கிறது. அது என்னவென்றால் 9ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பள்ளிகள் அனைத்தும் 16ஆம் தேதியன்று திறக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  … Read more

நீட் தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு மீண்டும் பயிற்சி – அமைச்சர் செங்கோட்டையன் தகவல்!

நீட் தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு மீண்டும் பயிற்சி - அமைச்சர் செங்கோட்டையன் தகவல்!

பன்னிரண்டாம் வகுப்பு  படித்தபிறகு, நீட் தேர்வு எழுதி, அதில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ். போன்ற இளநிலை மருத்துவ படிப்புகள் படிக்க அனுமதி அளிக்கப்படும். அவ்வாறு நீட் தேர்வு எழுதிய மாணவர்கள் பலர் வெற்றி பெற்றுள்ளனர். தமிழகத்தில் நீட் தேர்வு எழுதி தோல்வி பெற்ற மாணவர்களுக்கு மீண்டும் ஆன்லைன் மூலம் நீட் தேர்விற்கான பயிற்சிகள் அளிக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். அதனால் அரசு பள்ளி மாணவர்கள் எந்த விதத்தயக்கமும் இன்றி மீண்டும் நீட் தேர்வை … Read more

தீபாவளிக்கும் அதிமுக பரிசு வழங்குமா? – மக்கள் எதிர்பார்க்கிறார்களா?

தீபாவளிக்கும் அதிமுக பரிசு வழங்குமா? - மக்கள் எதிர்பார்க்கிறார்களா?

கொரோனா என்ற தொற்றுநோய் உலக நாடுகளையே அச்சுறுத்தி வருகிறது. நம் இந்திய நாட்டிலும் இந்த நோய்க்கு பலர் பலியாகியுள்ளனர். இந்த நிலையில் சில முக்கிய தளர்வுகள் மட்டுமே கொண்டுவரப்பட்டுள்ளது.  இன்னும் இயல்பு வாழ்க்கைக்கு பொதுமக்கள் முழுமையாக திரும்பவில்லை. தற்போது வருகின்ற பண்டிகை காலத்தையொட்டி சில அத்தியாவசிய தளர்வுகள் கொண்டுவரப்பட்டுள்ளது. அதை தொடர்ந்து இந்த தீபாவளிப் பண்டிகைக்கும் தமிழக அரசு ஏதும் பரிசு வழங்கும் என்று மக்கள் எதிர்பார்ப்பதாக வலைதளங்களில் வதந்தி பரவி வருகிறது. அவ்வாறு வருகின்ற செய்தியும் … Read more

அரசு பள்ளி மாணவர்களுக்கான மருத்துவ படிப்பில் 7.5% இடஒதுக்கீடு என்பது சட்டமானது – ஆளுநர் பன்வாரிலால் புரோகித்!

அரசு பள்ளி மாணவர்களுக்கான மருத்துவ படிப்பில் 7.5% இடஒதுக்கீடு என்பது சட்டமானது - ஆளுநர் பன்வாரிலால் புரோகித்!

அரசு பள்ளி மாணவர்களுக்கான மருத்துவ படிப்பில் 7.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்குவது குறித்து பல தரப்பில் கருத்துகள் பேசப்பட்டது என்பது அனைவரும் அறிந்ததே. நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களின் பட்டியல் அண்மையில் வெளியிடப்பட்டது.  மதுரை உயர் நீதிமன்றம் நடப்பாண்டிலேயே உள் ஒதுக்கீடு வழங்குவது குறித்து பல கேள்விகளை முன்வைத்து இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அரசு பள்ளி மாணவர்களுக்கான மருத்துவ படிப்புகளில் அதாவது எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ். உள்பட அனைத்து இளநிலை … Read more

நடப்பாண்டிலேயே 7.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கப்படும் – முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேட்டி!

நடப்பாண்டிலேயே 7.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கப்படும் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேட்டி!

ராமநாதபுரம் மாவட்டத்திற்கு வருகை தந்திருந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் செய்தியாளர்களை சந்தித்த போது கூறியதாவது : “அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5 சதவீத உள் ஒதுக்கீடு நடப்பு ஆண்டிலேயே வழங்கப்படும்” என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். அரசு பள்ளி மாணவர்களுக்கான இட ஒதுக்கீடு குறித்து பல விவாதங்கள் நடத்தப்பட்டது. இறுதியில் அனைத்து கட்சி சார்பிலும் அதற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். ஆனால் இந்த மனு ஆளுநர் பரிசீலனைக்கு வைக்கப்பட்டிருந்தது. தற்போது ஆளுநர் இந்த உள் ஒதுக்கீடு … Read more

முத்துராமலிங்க தேவரின் ஜெயந்தி விழாவில் முதலமைச்சரும் துணை முதலமைச்சரும் பங்கேற்றனர்!

முத்துராமலிங்க தேவரின் ஜெயந்தி விழாவில் முதலமைச்சரும் துணை முதலமைச்சரும் பங்கேற்றனர்!

இன்று பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 113 ஆம் ஆண்டு ஜெயந்தி விழா மற்றும் 58 ஆம் ஆண்டு குருபூஜை விழா இன்று நடைபெறுகிறது. இந்த விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களும் பங்கேற்றனர். பசும்பொன்னில் இருக்கும் முத்துராமலிங்க தேவரின் திரு உருவச் சிலைக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தியுள்ளார். துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதையடுத்து பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் … Read more

சிகிச்சையில் இருக்கும் அமைச்சருக்கு – கண்ணீர் அஞ்சலி என்ற போஸ்டரை வெளியிட்டதால் பரபரப்பு!

சிகிச்சையில் இருக்கும் அமைச்சருக்கு - கண்ணீர் அஞ்சலி என்ற போஸ்டரை வெளியிட்டதால் பரபரப்பு!

தமிழக வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு அவர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டதால், அவர் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களாக அவரின் உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை என்றும் உறுப்புகள் செயல்படுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது என்றும் அவருக்கு அடிக்கடி மூச்சுத் திணறல் ஏற்படுகிறது என்றும் அந்த மருத்துவமனை மருத்துவர்கள் ஏற்கனவே அறிவித்துள்ளனர். தற்போது அமைச்சர் தீவிர சிகிச்சையில் இருக்கின்ற நிலையில், நெல்லையைச் சேர்ந்த தால் சரவணன் என்பவர், அவரின் … Read more