வெந்ததைத் தின்றுவிட்டு வாயில் வந்ததை பேசுபவர்கள்! அண்ணாமலைக்கு பதிலடி கொடுத்த சேகர்பாபு!

வெந்ததைத் தின்றுவிட்டு வாயில் வந்ததை பேசுபவர்கள்! அண்ணாமலைக்கு பதிலடி கொடுத்த சேகர்பாபு!

சென்னை நுங்கம்பாக்கத்தில் 18 தூதரக அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பங்குபெறும் கால்பந்து போட்டி ஆரம்பமானது. அதனை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆரம்பித்து வைத்தார். லண்டன் கொரியா, ரஷ்யா உள்ளிட்ட 8 நாடுகளை சேர்ந்த தூதரக அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் இதில் பங்கேற்றதாக தெரிகிறது. இதனைத் தொடர்ந்து பத்திரிக்கையாளர்களை சந்தித்த தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தமிழ்நாட்டில் தலைமைப் பொறுப்பை ஏற்றிருக்கும் காவல் துறையின் தலைவர் சைலேந்திரபாபு பல்வேறு வகையில் எடுத்துக்காட்டாக செயல்பட்டுக் … Read more

கவர்னரிடம் புகார் மனுவை வழங்கிய பாஜக! நடவடிக்கை எடுக்கப்படுமா?

கவர்னரிடம் புகார் மனுவை வழங்கிய பாஜக! நடவடிக்கை எடுக்கப்படுமா?

தமிழக அரசை விமர்சனம் செய்து சமூகவலைதளத்தில் கருத்துப்பதிவிட்டதாக தெரிவித்து பாஜக நிர்வாகிகள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். இதனை கண்டிக்கும் விதத்தில் சென்னை தியாகராய நகரில் இருக்கின்ற பாஜக அலுவலகமான கமலாலயத்தில் கட்சியின் தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகப் பிரிவு சார்பாக மவுன போராட்டம் நடைபெற்றது. அந்தப் பிரிவின் தலைவர் நிர்மல்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த மௌன போராட்டத்தில் பாஜகவின் துணைத் தலைவர் எம் எம் ராஜா, வி பி துரைசாமி, சென்னை மண்டல தேர்தல் … Read more

வேளாண் சட்டத்தை எதிர்ப்பது மு.க.ஸ்டாலின் குடும்பம் மட்டுமே! விமான நிலையத்தில் கூறிய அண்ணாமலை?

only-mk-stalins-family-opposes-agricultural-law-annamalai-at-the-airport

சென்னை வேளாண் சட்டத்திற்கு எதிராக ஒரு விவசாயி கூட போராடவில்லை என்றும், முதலமைச்சர் ஸ்டாலின் குடும்பம் மட்டுமே அதனை எதிர்த்து வருவதாக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மதுரை விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களிடம் பேசியது என்னவென்றால் :- தமிழகத்தில் மத்திய அரசு கொண்டு வந்த விவசாய சட்டத்திற்கு எதிராக ஒரு விவசாயி கூட போராட்டம் நடத்தவில்லை. ஒரே ஒரு குடும்பம் தான், அதுவும் கோபாலபுரத்தில் உள்ள குடும்பம்தான் போராட்டம் நடத்தியது என கூறியுள்ளார். … Read more

ஜூலை 18 தமிழ்நாடு நாள்-பாஜக தலைவர் அண்ணாமலை எதிர்ப்பு.!!

ஜூலை 18 தமிழ்நாடு நாள்-பாஜக தலைவர் அண்ணாமலை எதிர்ப்பு.!!

நேற்று, தமிழ்நாட்டிற்கு தமிழ்நாடு என்று அண்ணா பெயர் சூட்டிய ஜூலை-18 ஆம் தேதியை தமிழ்நாடு நாளாக கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். மேலும், தமிழ்நாடு நாள் கொண்டாடுவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை அரசாணை மூலம் விரைவில் வெளியிடப்படும் என்றும் தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்திருந்தார். இதற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மேலும், தமிழ்நாடு தனித்து உருவான நவம்பர் 1 ஆம் தேதி தான் ‘தமிழ்நாடு நாள்’ ஆக கொண்டாடப்பட வேண்டும். … Read more

இந்த செயல் மிகுந்த மன வேதனையை அளிக்கிறது தயவுசெய்து இதை செய்யுங்கள்! மாநில அரசுக்கு கோரிக்கை வைத்த பாஜக தலைமை!

இந்த செயல் மிகுந்த மன வேதனையை அளிக்கிறது தயவுசெய்து இதை செய்யுங்கள்! மாநில அரசுக்கு கோரிக்கை வைத்த பாஜக தலைமை!

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் பகுதியில் நடைபெற்ற பட்டாசு கடை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு முதலமைச்சர் ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்ததுடன் உயிரிழந்தவர்களுக்கு சுமார் ஐந்து லட்சம் ரூபாய் நிவாரண தொகை வழங்கி இருக்கிறார். அதோடு அந்த விபத்தில் காயமடைந்து சிகிச்சையில் இருப்பவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் நிவாரண உதவி வழங்கப்படும் என்று அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின். அத்துடன் கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அவர்கள் மாவட்டத்தில் விதிகளை மீறி வைக்கப்பட்டிருக்கும் பட்டாசு கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என்று … Read more

மின்துறை அமைச்சர் மீது அதிரடி குற்றச்சாட்டை வைத்த அண்ணாமலை!

மின்துறை அமைச்சர் மீது அதிரடி குற்றச்சாட்டை வைத்த அண்ணாமலை!

மின்துறையில் முறைகேடுகள் நடந்திருப்பதாகவும் அதற்கு தன்னிடம் ஆதாரம் இருப்பதாகவும், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியிருந்தார். இந்த சூழ்நிலையில், பத்திரிக்கையாளர்களை சந்தித்த மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி மின்துறையில் முறைகேடுகள் நிறைந்த இருப்பதாகத் தெரிவிக்கும் அண்ணாமலை தன்னிடம் இருக்கக்கூடிய ஆதாரங்களை 24 மணி நேரத்தில் பொதுவெளியில் வெளியிட வேண்டும். அப்படி அவரிடம் எந்த விதமான ஆதாரமும் இல்லை என்றால் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தெரிவித்தார், தன்னுடைய இருப்பை காட்டிக் கொள்ள வேண்டும் என்பதற்காக இது போன்ற செய்திகளை … Read more

கல்யாணராமன் கைது விவகாரம்! தமிழக அரசை மிரட்டிய பாஜக தலைமை!

கல்யாணராமன் கைது விவகாரம்! தமிழக அரசை மிரட்டிய பாஜக தலைமை!

சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்த தமிழக பாஜகவின் தலைவர் அண்ணாமலை தமிழக காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு இருக்கின்ற கல்யாணராமன் அவர்களை ஜாமினில் எடுப்பதற்காக வழக்கறிஞர்கள் போனபோது கடந்த 2018ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கை என இன்று புதிதாக 5 முதல் தகவல் அறிக்கையை நீதிபதியிடம் காவல்துறையினர் கொடுத்திருக்கிறார்கள். இந்த முதல் தகவல் அறிக்கையின் கீழ் கல்யாண ராமனை இன்னும் கைது செய்யாமல் உள்ளோம், என காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்யாணராமன் கைது செய்து இருப்பதை … Read more

தமிழக பாஜக தலைவர் உட்பட 700 நிர்வாகிகள் மீது வழக்கு பதிவு.!!

தமிழக பாஜக தலைவர் உட்பட 700 நிர்வாகிகள் மீது வழக்கு பதிவு.!!

நேற்று கோவில்களை திறக்க போராட்டம் நடத்திய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, உட்பட 700 நிர்வாகிகள் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். சென்னை மண்ணடி காளிகாம்பாள் கோயில் முன் போராட்டம் நடத்திய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது தொற்றுநோய் தடுப்பு சட்டம் உட்பட 5 பிரிவுகளின் கீழ் சுமார் 700 நிர்வாகிகள் மீது சென்னை கடற்கரை போலீசார் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல், கோவையில் போராட்டம் நடத்திய கோவை … Read more

இன்று தமிழகம் முழுவதும் திருக்கோயில்களை திறக்கக்கோரி பாஜக சார்பில் போராட்டம்.!!

இன்று தமிழகம் முழுவதும் திருக்கோயில்களை திறக்கக்கோரி பாஜக சார்பில் போராட்டம்.!!

தமிழகம் முழுவதும் பாஜக சார்பில் இன்று அனைத்து நாட்களிலும் திருக்கோயில்களை திறக்கக்கோரி போராட்டம் நடைபெற உள்ளதாக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கோவையில் செய்தியாளர்களை சந்தித்த பொழுது,” தமிழகத்தில் அனைத்து தியேட்டர்களையும் திறக்க அனுமதி வழங்கப் பட்டிருக்கும் நிலையில் கோவில்களை மட்டும் அவர்கள் எதற்காக மூடி வைக்க வேண்டும் தமிழக அரசானது வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு கிழமைகளில் திருக்கோயில்களை மூடுவதற்கு ஆணையிட்டுள்ளது. மேலும், கோவில்களில் ஏற்படும் கூட்டத்தை வாரத்தின் … Read more

அதை செய்ய நாங்கள் தயார்! மறைமுகமாக மாநில அரசை கேள்வி எழுப்பிய அண்ணாமலை!

அதை செய்ய நாங்கள் தயார்! மறைமுகமாக மாநில அரசை கேள்வி எழுப்பிய அண்ணாமலை!

தமிழகத்தில் பெட்ரோல் டீசல் விலை நூறு ரூபாயை கடந்துசெல்ல சென்று கொண்டிருக்கிறது.இதனால் வாகன ஓட்டிகள் பொதுமக்கள் என்று அனைவரும் கடும் அவதிக்கு ஆளாகி இருக்கிறார்கள். இந்த நிலையில், திமுக ஆட்சிக்கு வந்த பிறகு பெட்ரோல் விலை 3 ரூபாய் குறைக்கப்படும் என்று ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரத்தில் அறிவித்ததன் அடிப்படையில் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் பெட்ரோல் விலை 3 ரூபாய் குறைக்கப்பட்டது. ஆனால் மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசல் விலையை குறைக்க முற்படவில்லை என மாநில அரசு … Read more