வேளாண் சட்டத்தை எதிர்ப்பது மு.க.ஸ்டாலின் குடும்பம் மட்டுமே! விமான நிலையத்தில் கூறிய அண்ணாமலை?

0
88
only-mk-stalins-family-opposes-agricultural-law-annamalai-at-the-airport
only-mk-stalins-family-opposes-agricultural-law-annamalai-at-the-airport

சென்னை வேளாண் சட்டத்திற்கு எதிராக ஒரு விவசாயி கூட போராடவில்லை என்றும், முதலமைச்சர் ஸ்டாலின் குடும்பம் மட்டுமே அதனை எதிர்த்து வருவதாக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மதுரை விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களிடம் பேசியது என்னவென்றால் :- தமிழகத்தில் மத்திய அரசு கொண்டு வந்த விவசாய சட்டத்திற்கு எதிராக ஒரு விவசாயி கூட போராட்டம் நடத்தவில்லை. ஒரே ஒரு குடும்பம் தான், அதுவும் கோபாலபுரத்தில் உள்ள குடும்பம்தான் போராட்டம் நடத்தியது என கூறியுள்ளார்.

நடைபெற இருக்கக்கூடிய உத்தரப் பிரதேசம்,கோவா,பஞ்சாப், உத்தரகாண்ட், மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களில் 4 மாநிலங்களில் மட்டும் பாஜக ஆட்சி செய்து வருகிறது.

பஞ்சாபில் பல கட்சிகளுடன் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இருந்தபோதிலும் பஞ்சாபில் 149 இடங்களில் பாஜக தனித்து போட்டியிடுகிறது. பாஜகவுக்கு வெற்றி வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

தற்போது நடந்து முடிந்த இடைத்தேர்தலில் பாஜகவுக்கு தோல்வி ஒன்றும் ஏற்படவில்லை. பாஜகவுக்கு வெற்றி சூழ்நிலை தான் வந்தது. அதை தவறாக பரப்பப்பட்டு வருகிறது.

ஸ்டாலின் சென்னை மேயராக இருந்திருக்கின்றார். அப்போதும் மழை பெய்து சென்னை மழைநீரில் தத்தளித்தது. தற்போது முதல்வராக இருந்தும் அதே நிலையில் தான் இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் பருவமழை காலத்தில் சென்னையில் நீர் நிரம்பி வழிகிறது.

அதை சரி செய்ய என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறார்..? காவிரி பிரச்சினையில் மேகதாது அணைக்கு எதிராக போராட்டம் நடத்திய தமிழகத்தில் ஒரே கட்சி பாஜக. எனக் கூறினார்.

இந்த பேட்டியின் போது பாஜக நிர்வாகிகள் டாக்டர் சரவணன், மாவட்டத் தலைவர் சீனிவாசன் உடன் இருந்தனர்.

author avatar
Parthipan K