பேட்மிட்டன் சாம்பியன்ஷிப் கோப்பையை வெல்லும் இந்திய வீரர்!

பேட்மிட்டன் சாம்பியன்ஷிப் கோப்பையை வெல்லும் இந்திய வீரர்!! சர்வதேச பேட்மிட்டன் போட்டியில் இந்திய வீரர் பிரியான்ஷு இறுதிப் போட்டிக்கு முன்னேறி கோப்பையை வெல்லும் வாய்ப்பை பெற்றுள்ளார். ஆர்லீன்ஸ் மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி பிரான்ஸ் நாட்டில் நடந்து வருகிறது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் பிரியான்ஷீ ரஜாவத் என்ற இளம் வீரர் போட்டியில் கலந்து கொண்டு ஆரம்ப முதலிலேயே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். தகுதிச்சுற்று ஆட்டத்திலும் சரி காலிறுதி போட்டிலும் சரி அதிரடியாக … Read more

வெற்றிகரமான தோல்வியுடன் தாயகம் திரும்பிய இந்திய ஜோடி

மகளிர் ஒற்றையர் பிரிவு பைனலில் உலக வீராங்கனையும், உலக சாம்பியனுமான அகானே யமாகுச்சி (ஜப்பான்) 21-15, 21-15 என்ற செட் கணக்கில் ஆன் செயாங்கை தென்கொரியா வீராங்கனையை  தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார். முன்னதாக நேற்று முன்தினம் இரவு நடந்த பெண்கள் இரட்டையர் அரையிறுதி ஆட்டத்தில் இந்தியாவின் திரிஷா ஜாலி-காயத்ரி கோபிசந்த் ஜோடி 17-21, 16-21 என்ற செட் கணக்கில் ஜாங் ஷு சியாங் மற்றும் ஜெங் யூ சீனா வீராங்கனை  ஜோடியிடம் தோல்வியடைந்தது. இருப்பினும் … Read more

விளையாடு வீரரை பாராட்டிய பிரதமர் மோடி, ராகுல் காந்தி…. ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் ஆடவர் ஒற்றையர் பிரிவு பைனலில் தரவரிசையில் 11வது இடத்தில் உள்ள இந்தியாவின் லக்ஷ்யா சென், நம்பர் ஒன் வீரரும் ஒலிம்பிக் சாம்பியனுமான விக்டர் ஆக்செல்சனை (டென்மார்க்) எதிர்கொண்டார். தொடக்கம் முதலே முழு ஆதிக்கம் செலுத்திய ஆக்சல்சென், லக்சயா சென்னையை 21-10, 21-15 என்ற செட் கணக்கில் வீழ்த்தி தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார். லக்‌ஷயா சென் வெள்ளிப் பதக்கம் வென்றார். இந்நிலையில், லக்ஷ்யா சென் வெள்ளிப் பதக்கம் வென்றது குறித்து பிரதமர் மோடி … Read more

தனது ரசிகர்களுக்கு உற்சாகமான செய்தியை கூறிய பி.வி.சிந்து

டென்மார்க்கில் அடுத்த மாதம்  நடைபெற இருக்கும் தாமஸ் மற்றும் உபேர் கோப்பை பேட்மிண்டன் போட்டியில் பி.வி.சிந்து அவர்கள் தனது சொந்த பணியின் காரணமாக கலந்து கொள்ளமாட்டார் என அவருடைய தந்தை சமீபத்தில் தெரிவித்து இருந்தார். இதனால் அவருடைய ரசிகர்கள் மிகுந்த கவலையில் இருந்தனர் ஆனால் தற்போது தங்களின் வேண்டுகோளை ஏற்று இந்த போட்டியில் விளையாட சிந்து சம்மதம் தெரிவித்து இருப்பதாக இந்திய பேட்மிண்டன் சங்க தலைவர் ஹிமந்த பிஸ்வா சர்மா நேற்று டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.    

தாமஸ் மற்றும் உபேர் கோப்பைக்கான பேட்மிண்டனிலிருந்து விலகிய முக்கிய வீராங்கனை

டென்மார்க்கில் நாளை முதல் தாமஸ் மற்றும் உபேர் கோப்பைக்கான பேட்மிண்டன் தொடங்குகிறது.  இப்போட்டியில் இருந்து நடப்பு உலக சாம்பியன் பி.வி.சிந்து விலகி உள்ளார். தனிப்பட்ட காரணங்களுக்காக இப்போட்டியில் இருந்து விலகியதாக அவரது தந்தை பி.வி.ரமணா கூறி உள்ளார். ‘ஐதராபாத்தில் அக்டோபர் முதல் வாரத்தில் எங்களுக்கு முக்கியமான வேலை உள்ளது. பூஜைகள் செய்ய வேண்டியிருப்பதால், இதில் சிந்து கட்டாயம் பங்கேற்க வேண்டி உள்ளது. எனவே, அவர் தாமஸ், உபேர் கோப்பை போட்டியில் இருந்து விலகினார்’ என்று ரமணா  மேலும் தெரிவித்தார். … Read more

பயிற்சியை தொடங்கிய வீராங்கனைகள்

தெலுங்கானாவில் ஸ்டேடியங்களை திறந்து விளையாட மாநில அரசு அனுமதி அளித்ததை தொடர்ந்து இந்திய பேட்மிண்டன் வீரர், வீராங்கனைகளுக்கான தேசிய பயிற்சி முகாம் ஐதராபாத்தில் நேற்று தொடங்கியது. சிந்து, ஆலோசனைப்படி மட்டையை சுழட்டினார். தேசிய பயிற்சியாளர் கோபிசந்தும் சிந்துவுக்கு ஆலோசனைகளை வழங்கினார். இதே போல் சாய் பிரனீத், சிக்கி ரெட்டி ஆகியோரும் பயிற்சியை தொடங்கினர். கொரோனா தடுப்பு பாதுகாப்பு வழிகாட்டுதலின்படி பயிற்சி பகுதி முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டிருந்தது. வெளியாட்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.

டென்மார்க்கில் நடக்கும் தாமஸ் பேட்மிண்டன்

16 அணிகள் பங்கேற்கும் ஆண்களுக்கான தாமஸ் மற்றும் பெண்களுக்கான  உபேர் போட்டிகள் ஏற்கனவே இரண்டு முறை தள்ளிவைக்கப்பட்டதால் தற்போது டென்மார்க்கில் அக்டோபர் 3-ந் தேதி முதல் 11-ந் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டிக்கான அட்டவணை நேற்று குலுக்கல் மூலம் முடிவு செய்யப்பட்டது. இந்த போட்டியில் இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகள் எளிதான பிரிவில் இடம் பிடித்துள்ளன. லீக் ஆட்டங்கள் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் ‘நாக்-அவுட்’ சுற்றுக்கு முன்னேறும். … Read more