ஆபரேஷன் கங்கா! இந்திய விமானப் படையின் முதல் விமானம் 200 இந்தியர்களுடன் டெல்லி வந்து சேர்ந்தது!

உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே போர் மிகவும் தீவிரமாக நடைபெற்று வருகின்ற சூழ்நிலையில், சில நாட்களுக்கு முன்னர் ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே பெலாரஸ் நாட்டில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அந்த பேச்சுவார்த்தையில் தீர்வு எதுவும் எட்டப்படாத சூழ்நிலையில், போர் தீவிரமடைந்து வருகிறது. இதற்கிடையில் உக்ரைனின் பல முக்கிய நகரங்களை கைப்பற்றியிருக்கிறது ரஷ்யா. அதோடு பல முக்கிய நகரங்களில் ரஷ்யப் படைகள் தீவிர தாக்குதல் தொடுத்து வருகின்றன. இந்த சூழ்நிலையில், உக்ரைனிலிருக்கும் இந்தியர்களை மேற்கு மிதமாக ஆபரேஷன் கங்கா … Read more

தயவுசெய்து எங்களையும் காப்பாற்றுங்கள்! உக்ரைனின் ரஷ்ய நாட்டு எல்லையில் பரிதவிக்கும் தமிழக மாணவர்களின் வேண்டுகோள் செவிசாய்க்குமா மத்திய அரசு?

உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே நடைபெற்றுவரும் உக்கிரமான போருக்கு நடுவே இந்தியா உக்ரைனில் வாழும் தன்னுடைய நாட்டு மக்களை பத்திரமாக மீட்டு வருகிறது. இதுவரையில் ஆப்ரேஷன் கங்கா என்ற பெயரில் பல்வேறு கட்டங்களாக விமானங்களை அனுப்பி உக்ரைனின் அண்டை நாடுகளின் உதவியுடன் இந்திய மக்களை மத்திய அரசு மீட்டு வருகிறது. இந்தநிலையில், உக்ரைனிலிருக்கும் அமெரிக்கர்கள், பாகிஸ்தானியர்கள், உள்ளிட்ட குடிமக்களை அந்த நாடுகள் முற்றிலுமாக கைவிட்ட நிலையில், இந்திய அரசு மட்டும் தன்னுடைய நாட்டு மக்களை அங்கிருந்து மீட்பதில் … Read more

மத்திய அமைச்சரிடம் கேள்வி எழுப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்! ஓப்பனாக பதில் சொன்ன அமைச்சர்!

நாடாளுமன்ற மாநிலங்களவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது ஒரு உறுப்பினர் அனைத்து அரசு நிறுவனங்களிலும் ஊழியர்கள் பணி நேரத்தை 8 மணி நேரத்திலிருந்து 12 மணி நேரமாக உயர்த்தும் பணியில் மத்திய அரசு ஈடுபட்டிருக்கிறதா என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த மத்திய பணியாளர் நலத்துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் அதுபோன்ற திட்டம் எதுவும் அரசிடமில்லை என்று பதிலளித்தார். மாநிலங்களவை கேள்வி நேரத்தில் மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் முரளிதரன் தெரிவித்ததாவது, இந்திய தூதரகங்கள் வழங்கிய தகவலினடிப்படையில் … Read more

தமிழகத்தில் புதிய திட்டம் தொடக்கம்! நாடாளுமன்றத்தில் வெளியான சூப்பர் அறிவிப்பு!

நாடாளுமன்ற மக்களவையில் நேற்று இயற்கை எரிவாயு குறித்த கேள்வி ஒன்றுக்கு பதில் வழங்கிய மத்திய பெட்ரோலியத் துறை இணை அமைச்சர் ராமேஸ்வர் எழுத்துப்பூர்வமாக பதில் வழங்கினார். அதில் சிஎன்சி என்றழைக்கப்படும் அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயு நிலையங்களை பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு ஒழுங்குமுறை வாரியத்தால் அங்கீகரிக்கப்பட்ட மாநகரை எரிவாயு விநியோக அமைப்புகளை நிறுவி வருகின்றன என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில், நாடு முழுவதும் 8181 இயற்கை எரிவாயு நிலையங்கள் நிறுவுவதற்கு திட்டமிடப்பட்டிருக்கிறது. இதில் சென்ற டிசம்பர் மாதம் … Read more

10 ரூபாய் நாணயங்கள் செல்லுமா செல்லாதா? மத்திய அரசு அதிரடி பதில்!

ரிசர்வ் வாங்கி வெளியிட்ட 10 ரூபாய் நாணயங்கள் செல்லுமா/ செல்லாதா? என்று பொதுமக்களுக்கு விளக்கமளித்து வருகின்றது. 10 ரூபாய் நாணயங்களை வியாபாரிகள் பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்கள் கூட வாங்குவதில்லை என்ற குற்றச்சாட்டு பல காலமாகவே இருந்து வருகிறது. 10 ரூபாய் நாணயங்களை ரிசர்வ் வாங்கி தடை செய்து விட்டது என்ற வதந்தியும் 10 ரூபாய் நாணயங்களை போல போலி நாணயங்கள் சந்தையில் உலா வருகின்றன என்ற செய்தியும் தான் பொது மக்களை குழப்பத்தில் ஆழ்த்தியிருக்கிறது. இது … Read more

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் சுமுகமாக நடைபெறுமா? மத்திய அரசின் முயற்சி!

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் 2 கட்டங்களாக நடைபெற இருக்கிறது, ஜனவரி மாதம் 31ஆம் தேதி முதல் பிப்ரவரி மாதம் 11ஆம் தேதி வரை முதல் கட்டமாகவும், மார்ச் மாதம் 14ம் தேதி முதல் மாதம் 8ஆம் தேதி வரையில் இரண்டாவது கட்டமாகவும், நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறும் என்று மத்திய அரசு கூறியிருக்கிறது. இதற்கு நடுவில் நாடாளுமன்றக் கூட்டத்தொடர் ஆரம்பிக்கும் போதெல்லாம் வழக்கமாக நடைபெறும் அலுவல் ஆன அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. எதிர்வரும் 30ஆம் … Read more

மோடியை தவறாக சித்தரித்த விவகாரம்! பிரபல தொலைகாட்சிக்கு மத்திய அரசிடம் இருந்து பறந்த நோட்டீஸ்!

ஜீ தமிழ் தொலைக்காட்சி தமிழகத்தில் பிரபலமான ஒரு தொலைக்காட்சி நிறுவனம் இந்த தொலைக்காட்சியில் பிரதமர் நரேந்திர மோடியை கேலிசெய்து ஜூனியர் சூப்பர் ஸ்டார்ஸ் சீசன் 4 என்ற நிகழ்ச்சியில் காட்சிகள் அமைக்கப்பட்டதாக தமிழக பாஜக கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதன் அடுத்தகட்ட நடவடிக்கையாக மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை இணை அமைச்சர் முருகன் உத்தரவின் அடிப்படையில் அவருடைய அமைச்சரவையில் இருந்து அந்த தொலைக்காட்சிக்கு நேற்று எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பப்பட்டு இருக்கிறது. அந்த நிறுவனத்தின் நொய்டாவில் இருக்கின்ற … Read more

அதுக்கு நாங்க காரணமில்ல! விளக்கம் தந்த மத்திய அரசு!

தலைநகர் புதுடெல்லியில் எதிர்வரும் 20ஆம் தேதி நடைபெறவிருக்கின்ற குடியரசு தினவிழா நிகழ்ச்சியில் செல்லும் வாகன பேரணியில் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, மேற்கு வங்கம், உள்ளிட்ட மாநிலங்களில் வாகனங்களுக்கு அனுமதி இல்லை என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த விவகாரம் தேசிய அளவில் பரபரப்பை உண்டாக்கி இருக்கிறது. இதற்கு அதிருப்தி தெரிவித்து தமிழகம், கேரளா, மேற்கு வங்கம், உள்ளிட்ட மாநில முதலமைச்சர்கள் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதினார்கள். அதோடு மாநிலங்களில் இருக்கின்ற அரசியல் கட்சி தலைவர்களும் மத்திய அரசுக்கு … Read more

சிறுவர்களுக்கான தடுப்பூசி! மத்திய அமைச்சர்கள் பாராட்டு!

கொரோனா மற்றும் ஒமைக்ரான் பரவல் அதிகரிப்பு காரணமாக, நாட்டில் கடந்த மூன்றாம் தேதி முதல் 15 முதல் 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. தடுப்பு ஊசி செலுத்தி கொள்வதில் பெரியவர்களை விட சிறுவர்கள் ஆர்வமாக இருப்பதை புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன என்று தெரிவிக்கப்படுகிறது. இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் தன்னுடைய வலைத்தளத்தில் தெரிவித்திருப்பதாவது, தடுப்பூசி செலுத்தி கொள்வதில் இளம் இந்தியர்களிடையே அபார உற்சாகம் இருக்கிறது. 15 முதல் 18 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்த தொடங்கி … Read more

தமிழக மீனவர்கள் கைது விவகாரம்! உடனடியாக களத்தில் இறங்கிய இந்திய தூதரக அதிகாரிகள்!

இலங்கை கடற்படையால் இந்திய மீனவர்கள் கைது செய்யப்படுவது காலங்காலமாக வாடிக்கையாகிவிட்டது. இதுதொடர்பாக தமிழக அரசு எத்தனை முறை மத்திய அரசிடம் முறையிட்டாலும், பெரிய அளவில் மத்திய அரசு தமிழக மீனவர்கள் தொடர்பாக கண்டுகொள்வதில்லை. தமிழக மீனவர்கள் வாழ்வாதாரம் தேடி கடலுக்குள் சென்று தங்களுடைய உயிரையும் துச்சமென மதித்து மீன் பிடிக்கச் சென்றால் அங்கே இலங்கை கடற்படையினரின் அட்டூழியங்களுக்கு அளவே இல்லாமல் போய்விடும். இந்தநிலையில், இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்களை விடுவிக்க இலங்கை அரசுடன் … Read more