மனநலம் பாதித்தவர்களுக்கு கொரோனா தடுப்பூசி – சென்னை உயர்நீதி மன்றம்
மாநில மனநல கொள்கையை அமல்படுத்த வேண்டும் எனவும், தெருவில் சுற்றி திரியும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி முகாம் அமைக்க வேண்டும் எனவும், சீர் என்னும் தொண்டு நிறுவனம் சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்திருந்தது. தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி பி.டி.ஆதிகேசவலு ஆகியோரின் முன்பு நேற்று இந்த மனுவின் மீதான வழக்கு விசாரணை நடந்தது. அப்போது தமிழக அரசின் சார்பில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில், தமிழகம் முழுவதும் இதுவரை 396 மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் மீட்கப்பட்டுள்ளனர் என கூறப்பட்டது. … Read more