கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வெல்லும் வாய்ப்பை இழந்த முக்கிய வீரர்

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் கிராண்ட்ஸ்லாம் போட்டி நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நோவக் ஜோகோவிச் மற்றும் ஸ்பெயின் வீரர் பாப்லோ காரெனோவும் மோதினர். ஆட்டம் தொடக்கம் முதலே ஜோகோவிச் தடுமாற்றத்துடன் விளையாடினார். இதனால் முதல் செட்டில் புள்ளிகளை இழக்க நேர்ந்தது. 5-6 என பின்தங்கிய நிலையில் இருந்ததால், ஆத்திரம் அடைந்த ஜோகோவிச் பந்தை தரையில் பின்னோக்கி வேகமாக அடித்தார். இதில் அந்த பந்து அங்கிருந்த பெண் லைன் அம்பயர் கழுத்தில் பட்டு அவர் காயமடைந்தார். … Read more

தோல்வியே சந்திக்காத வீரர் தொடர்ச்சியாக இத்தனை வெற்றியா?

‘கிராண்ட்ஸ்லாம்’ போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நேற்று முன்தினம் தொடங்கியது. இந்திய நேரப்படி நேற்று அதிகாலை நடந்த ஆண்கள் ஒற்றையர் முதலாவது சுற்று ஆட்டம் ஒன்றில் ‘நம்பர் ஒன்’ வீரர் நோவக் ஜோகோவிச் (செர்பியா) 6-1, 6-4, 6-1 என்ற நேர் செட்டில் டாமிர் ஜூம்ஹரை (போஸ்னியா) பந்தாடினார். இந்த ஆண்டில் தோல்வியே சந்திக்காத ஜோகோவிச் தொடர்ச்சியாக ருசித்த 24-வது வெற்றி இதுவாகும். ஜோகோவிச் அடுத்து கைல் எட்மன்டை (இங்கிலாந்து) சந்திக்கிறார். … Read more

சாம்பியன் பட்டம் வென்ற ஜோகோவிச்

சின்சினாட்டி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்றது. ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த இறுதி ஆட்டத்தில் உலகின் ‘நம்பர் ஒன்’ வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச், கனடாவை சேர்ந்த மிலோஸ் ராவ்னிக்கை எதிர்கொண்டார். இதில் முதல் செட்டை 1-6 என ராவ்னிக் கைப்பற்றினார். அதன்பின் அதிரடியாக ஆடிய ஜோகோவிச் அடுத்த 2 செட்களையும் கைப்பற்றி அசத்தினார். இறுதியில், ஜோகோவிச் 1-6, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் ராவ்னிக்கை வீழ்த்தியதுடன், சாம்பியன் பட்டத்தையும் கைப்பற்றி அசத்தினார்.