வங்கிகளால் திட்டமிட்டு நடத்தப்படும் சமூக நீதி சூறையாடல்! கண்டிக்கும் மருத்துவர் ராமதாஸ்

Dr Ramadoss-News4 Tamil Latest Political News Today

திட்டமிட்டே வங்கி அதிகாரிகள் தேர்வில் இடஒதுக்கீடு பிரிவினருக்கான எண்ணிக்கையை குறைத்த வங்கி மீது நடவடிக்கை தேவை என பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கண்டித்துள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது. இந்தியா முழுவதும் பொதுத்துறை வங்கிகளுக்கு அதிகாரிகளை தேர்ந்தெடுப்பதற்கான ஆள்தேர்வு அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் உயர்சாதி ஏழைகளுக்கான இட ஒதுக்கீடும், அதற்கான இடங்களும் முழுமையாக வழங்கப்பட்டுள்ள நிலையில், பிற இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கான இடங்களில் 8.71%, அதாவது 116 இடங்கள் குறைக்கப்பட்டுள்ளன. இந்த சமூக … Read more

கலெக்டருக்கு டிரைவராக கார் ஓட்ட ஆசை! மருத்துவர் ராமதாஸ் வெளியிட்ட மலரும் நினைவுகள்

Dr Ramadoss-News4 Tamil Online Tamil News

கலெக்டருக்கு டிரைவராக கார் ஓட்ட ஆசைப்படுவதாக மருத்துவர் ராமதாஸ் தனக்கு நேர்ந்த நெகிழ்ச்சியான சம்பவம் ஒன்றை மலரும் நினைவுகளாக முகநூலில் பகிர்ந்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள முகநூல் பதிவில் கூறியுள்ளதாவது. குடிமைப் பணித் தேர்வில் வெற்றி பெற்று ஐ.ஏ.எஸ் அதிகாரியாக உள்ள கடலூர் மாவட்டம் மருங்கூர் கிராமத்தைச் சேர்ந்த இராமநாதனின் மகள் ஐஸ்வர்யாவுக்கு இன்று காலை தொலைபேசியில் வாழ்த்துக் கூறியபோது ஒரு இனிமையான மலரும் நினைவுகள்…. மருங்கூர் இராமநாதனின் மகன் இராம்பிரசாத். அவரும் குடிமைப்பணித் தேர்வில் வெற்றி … Read more

ஊரடங்கை சமாளிக்க தமிழக அரசு இதை செய்தாக வேண்டும்! மருத்துவர் கூறிய ஆலோசனை

ஊரடங்கை சமாளிக்க தமிழக அரசு இதை செய்தாக வேண்டும்! மருத்துவர் கூறிய ஆலோசனை

கொரோனா பாதிப்பு காரணமாக பிறப்பிக்கப்பட்டுள்ள இந்த ஊரடங்கு காலத்தை நிர்வகிக்க போதுமான காவலர்கள் இல்லை என்பதால் ஏற்கனவே காவலர் தேர்வில் வெற்றி பெற்று நியமனம் பெறாதோருக்கு பணி வழங்க வேண்டும் என பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் ஆலோசனை தெரிவித்துள்ளார். இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது. தமிழ்நாடு காவல்துறையில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவலர் பணியிடங்கள் காலியாக உள்ளன. கொரோனா பரவல் அதிகமுள்ள காலத்தில், காவலர் தேர்வுகளை நடத்த முடியாது என்பதால், புதிய வாய்ப்புகளை … Read more

இனியும் தாமதம், அலட்சியம் கூடாது!எச்சரிக்கும் மரு.ராமதாஸ்

Dr.Ramadoss

ஆன்லைன் சூதாட்டங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அறிக்கை விடுத்துள்ளார்.அந்த அறிக்கையில், ஆன்லைன் சூதாட்டங்களுக்கு அடிமையாகி, பணம், நிம்மதி உள்ளிட்ட அனைத்தையும் இழந்து தற்கொலை செய்து கொள்ளும் இளைஞர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பாட்டாளி மக்கள் கட்சி பலமுறை வலியுறுத்தியும், உயர்நீதிமன்றம் ஆணையிட்டும் கூட ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்ய மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்காதது வேதனையளிக்கிறது. சென்னை அண்ணாநகரை அடுத்த டி.பி.சத்திரம் பகுதியைச் சேர்ந்த … Read more

35 ஆண்டுகளாக இழந்த உரிமையை மீட்க மத்திய அரசுக்கு மருத்துவர் ராமதாஸ் கடிதம்

Dr Ramadoss

கடந்த 35 ஆண்டுகளாக இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் இழந்த உரிமையை மீட்க மத்திய அரசுக்கு பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கடிதம் எழுதியுள்ளார். இது குறித்து அவருடைய முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது. மருத்துவப் படிப்பு அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் ஓபிசிக்கு உடனடியாக இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்! பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு மருத்துவர் அய்யா கடிதம் மருத்துவக் கல்விக்கான அகில இந்திய தொகுப்பு இடங்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்கத் தடையில்லை … Read more

சட்டமன்ற தேர்தலுக்காக வளைக்க பார்க்கும் திமுக! வளைந்து கொடுக்குமா பாமக!

DMK and PMK Alliance

நாடு முழுவதும் கொரோனா தொற்று பிரச்சனை அதிகரித்த வண்ணமே உள்ளது. எல்லா அரசியல் கட்சிகளின் கவனமும் கடந்த சில மாதங்களாக இது பற்றியே இருந்தது.ஆனால் அதே நேரத்தில் தமிழகத்தில் அடுத்து வரவுள்ள சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டும் தற்போது ஒவ்வொரு அரசியல் கட்சியும் செயல்பட ஆரம்பித்துள்ளன. தற்போதைய சூழலில் ஆளும் அதிமுக தரப்பில் முக்கிய கூட்டணி கட்சியாக பாமக,தேமுதிக மற்றும் பாஜக உள்ளன. ஆனால் சில நேரங்களில் அதிமுக கூட்டணி கட்சிகளின் செயல்பாடுகளை பார்க்கும் போது கடந்த … Read more

OBC இட ஒதுக்கீடு 3 மாதங்களில் மத்திய அரசு செயல்படுத்த வேண்டும் என மருத்துவர் ராமதாஸ் கோரிக்கை

OBC இட ஒதுக்கீடு 3 மாதங்களில் மத்திய அரசு செயல்படுத்த வேண்டும் என மருத்துவர் ராமதாஸ் கோரிக்கை

OBC இட ஒதுக்கீடு 3 மாதங்களில் மத்திய அரசு செயல்படுத்த வேண்டும் மருத்துவர் இராமதாசு கோரிக்கை விடுத்துள்ளார். OBC இட ஒதிக்கீடு தொடர்பாக பாமக,அதிமுக,திமுக உள்ளிட்ட தமிழக கட்சிகள் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து.இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் அகில இந்திய ஒதுக்கீட்டில் OBC க்கு 50% இடஒதுக்கீடு தர மத்திய அரசு சட்டம் இயற்றலாம், சட்டரீதியாக எந்தவொரு தடைகளும் இல்லை உச்சநீதிமன்றம் தான் முடிவெடுக்க வேண்டும் என்ற இந்திய மருத்துவ கவுன்சிலின் வாதத்தை … Read more

மரக்கன்றுகளை நட்டு மருத்துவர் ராமதாஸ் பிறந்த நாளை கொண்டாடிய பாமகவினர்

Dr Ramadoss-News4 Tamil Online Tamil News

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அவர்களின் 81 வது பிறந்த நாள் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சியின் துணை அமைப்பான பசுமைத்தாயகம் நாளை முன்னிட்டு சுற்றுச்சூழல் நலன் கருதி இந்த வருடம் கட்சியின் பொறுப்பாளர் மற்றும் தொண்டர்கள் சார்பில் அவரவர்கள் தங்கள் பகுதியில்,வீட்டில் மரக்கன்றுகளை நட்டு மற்ற மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக திகழ்ந்து வருகிறார்கள். இதுபற்றி கட்சியின் பொறுப்பாளர்கள் கூறுகையில் ஒவ்வொரு வருடமும் ஜீலை 25 ல் மரக்கன்றுகள் நடுதல், இரத்ததானம் வழங்குதல்,பள்ளிக் குழந்தைகளுக்கு கல்வி … Read more

அன்புமணி ராமதாஸ் முதல்வர் வேட்பாளர்! மருத்துவர் ராமதாஸ் எழுதிய அதிரடி கடிதம்

PMK Leader Dr Ramadoss Issues Notice to DMK RS Bharathi-News4 Tamil Latest Political News in Tamil

தமிழ்நாட்டின் திறமையான ஆட்சியாளரை ஊடகங்கள் அடையாளம் காட்ட   வேண்டும் என்றும் பாமகவின் இளைஞர் அணி தலைவரும்,மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் முதல்வர் வேட்பாளர் என்று ஊடகங்கள் முன்மொழிய வேண்டும் என்றும் ஊடகத்துறையினருக்கு பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கடிதம் எழுதியுள்ளார். இது குறித்து அவர் எழுதியுள்ள  கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது, “தமிழ்நாட்டில் அனைத்துத் துறைகளிலும் தொலைநோக்குப் பார்வை கொண்ட முற்போக்குத் திட்டங்களை செயல்படுத்தி தமிழகத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல வேண்டும் என்றும், அதற்கு தகுதியான முதலமைச்சர் … Read more

தமிழக அரசிற்கு மருத்துவர் ராமதாஸ் பாராட்டு!

Dr Ramadoss-News4 Tamil Online Tamil News

தமிழ்நாட்டில் நேற்று 113 ஆய்வகங்கள் மூலம் 62,112 கொரோனா சோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இது புதிய உச்சம் ஆகும்.இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இந்த அளவுக்கு அதிகமாக சோதனைகள் செய்யப்படவில்லை என்று தனது டுவிட்டர் பக்கத்தில் மரு.இராமதாஸ் பாராட்டு தெரிவித்துள்ளார். மேலும் அவர், தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 6472 ஆக அதிகரித்துள்ளது. அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் அரசு செய்கிறது. விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. மிக அதிக அளவில் சோதனை செய்து நோய்ப்பரவலையும் தடுத்தாலும், கொரோனாவால் பாதிக்கப்பட்ட சென்னை, மும்பை, … Read more