நிலச்சரிவில் உயிரிழந்தவர்களுக்கு ரூ. 2 லட்சம் நிவாரணம்! பிரதமர் அறிவிப்பு!!

நிலச்சரிவில் உயிரிழந்தவர்களுக்கு ரூ. 2 லட்சம் நிவாரணம்! பிரதமர் அறிவிப்பு!!

கேரள மாநிலம் இடுக்கியில் பெய்துவரும் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ. 2 லட்சம் நிவாரணத்தை பிரதமர் மோடி அறிவித்துள்ளார். கேரளாவில் கடந்த சில நாட்களாக தொடரும் கனமழையால் இடுக்கி, மலப்புரம் உள்ளிட்ட மாவட்டங்கள் தற்போது வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. இத்தனை பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ள இந்த மழை ஆக.10ம் தேதி வரை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இடுக்கி மாவட்டத்தில் உள்ள மூணார் பகுதியில் இன்று பெய்த கன மழைக்கு பெரிய அளவில் நிலச்சரிவு … Read more

கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் உட்பட 9 பேர் பலி

கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் உட்பட 9 பேர் பலி

நேப்பாளத்தில் பருவமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக வெள்ளமும் நிலச்சரிவு ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் நள்ளிரவு நேரத்தில் பெய்த கன மழை காரணமாக நரஹரிநாத் கிராமத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 9 பேர் இறந்துள்ளனர். 9 பேரில் 7 பேர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். மேலும் 58 பேரைக் காணவில்லை என்றும் 87 பேர் காயமுற்றனர் என்றும் தெரிவிக்கப்பட்டது. கடந்த மூன்று மாதங்களில் அங்கு வெள்ளத்திற்கும் நிலச்சரிவுக்கும் 160 பேர் பலியானதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

கனமழையால் ரெட் அலார்ட் எச்சரிக்கை

கனமழையால் ரெட் அலார்ட் எச்சரிக்கை

கேரளாவில் இன்று பல்வேறு இடங்களில் கனமழை பெய்ததை காண முடிந்தது. மிக மிக கனமழை பெய்யும் என்பதால், அதிகாரிகள் தேவையான முன்னேற்பாடுகள் செய்ய வேண்டும் என்பதை ரெட் அலார்ட் எச்சரிக்கை குறிக்கிறது.  அதேபோல், ஆரஞ்சு அலார்ட் எச்சரிக்கை  என்றால்,  மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது ஆகையால் அதிகாரிகள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று நிர்வாக ரீதியாக விடப்படும் அறிவுறுத்தல் ஆகும். ஆலப்புழா, கோட்டயம், எர்ணாகுளம், திரிசூர் ஆகிய மாவட்டங்களுக்கு நாளை மஞ்சள் அலார்ட் எச்சரிக்கையை இந்திய வானிலை … Read more