சிலிண்டர் விபத்து ஏற்பட்டால் இன்சூரன்ஸ் பாலிசி உண்டு.. உங்களுக்கு தெரியுமா? எப்படி உரிமைகோர்வது?..

சிலிண்டர் விபத்து ஏற்பட்டால் இன்சூரன்ஸ் பாலிசி உண்டு.. உங்களுக்கு தெரியுமா? எப்படி உரிமைகோர்வது?..

நாம் தினமும் சமையல் செய்ய பயன்படுத்தும் எல்.பி.ஜி கேஸ் சிலிண்டருக்கு காப்பீடு உண்டு என்பது நம்மில் பலருக்குத் தெரியாத ஒன்று.நகரத்தில் இருக்கும் மக்களாவது அவ்வப்போது இணையத்தில் படித்து எல்.பி.ஜி கான காப்பீடுகளைப் பற்றி அறிந்து வைத்திருக்கிறார்கள். ஆனால் கிராமப்புறங்களில் வசிக்கும் பெரும்பாலான மக்களுக்கு இப்படி ஒன்று இருப்பதே தெரிவதில்லை.

ஒரு LPGசிலிண்டர் வாங்கி அது தீர்ந்து இன்னொரு சிலிண்டர் நம் வீட்டு வாசலில் வந்து இறங்கும் அந்த நேரம் வரை அதை பயன்படுத்தும் ஒவ்வொரு வாடிக்கையாளரின் பெயரிலும் காப்பீட்டுத் தொகையும் அதனுடன் வந்து சேர்கின்றது.சிலிண்டர் விபத்து நேர்ந்து அதன் காரணமாக உயிரிழப்புகள் நேர்ந்தால் சட்டப்படி அந்த குடும்பம் ரூ.50 லட்சம் வரை சம்பந்தப்பட்ட நிறுவனத்திலிருந்து காப்பீட்டுத் தொகை பெற முடியும்.

ஒரு நபருக்கு ரூ.10 லட்சம் வரையும் இழப்பீட்டைப் பெறலாம். ஒருவேளை விபத்தால் மரணம் ஏற்பட்டால் இறந்த ஒவ்வொரு நபருக்கும் தலா ரூ.5 லட்சம் காப்பீட்டுத் திட்டத்திலிருந்து வழங்கப்படும்.மேலும் மருத்துவக் காப்பீடாக ஒரு விபத்துக்கு ரூ.15 லட்சம் வரை பெற முடியும்.கேஸ் சிலிண்டருக்கான இன்ஷூரன்ஸை சிலிண்டர் வைத்திருப்பவர்கள் எடுக்கத் தேவையில்லை. அதை சிலிண்டர் டிஸ்ட்ரிபியூட்டரே எடுத்து விடுவார்.அரசு விதிமுறையின் படி கேஸ் சிலிண்டர் விநியோகம் செய்பவர்கள் தங்கள் கொடுக்கும் காஸ் இணைப்புக்கு கட்டாயம் இன்ஷூரன்ஸ் எடுக்க வேண்டும்.

இந்த பாலிசியின்படி இந்தக் காப்பீட்டுத் திட்டத்தில் பிரீமியம் தொகையை வாடிக்கையாளர்களிடமிருந்துஎண்ணெய் நிறுவனங்கள் பெறக்கூடாது. பிரீமியம் செலவுகள் அனைத்தும் நிறுவனத்தையே சேரும்.இதனைத்தொடர்ந்து
எப்படி க்ளெய்ம் செய்வது என்று பார்ப்போம்.
நீங்கள் இணைப்பு வைத்திருக்கும் எண்ணெய் நிறுவனம் எடுத்திருக்கும் இன்ஷூரன்ஸ் விநியோகஸ்தர் எடுத்திருக்கும் இன்ஷூரன்ஸ் என இரண்டு இன்ஷூரன்ஸ் இருக்கும். இதில் சிலிண்டரில் விபத்து ஏதும் ஏற்பட்டால் அதை உடனடியாக விநியோகஸ்தருக்குத் தெரிவிக்க வேண்டும்.

இந்த விபத்தை நேரில் ஆய்வு செய்து அதை இன்ஷூரன்ஸ் நிறுவனத்துக்குத் தெரிவிப்பார்.காவல் துறைக்கு அந்த விபத்தைத் தெரிவிக்க வேண்டு.இன்ஷூரன்ஸ் அதிகாரி விபத்து நடந்த இடத்தை நேரில் ஆய்வு செய்து உங்களின் உரிமைகோரவும் தொகையை நிர்ணயிப்பார். இதில் சிலிண்டர் இணைப்பு பெற்றிருக்கும் முகவரி நபரின் பெயர் ஆகியவை சரியாக இருக்க வேண்டும்.

கேஸ் டிஸ்ட்ரிபியூட்டர் வரத் காலதாமதமானால் விபத்து ஏற்பட்டு பொருள்கள் சேதம் அடைந்ததற்கான ஆதாரத்தை நீங்கள் வைத்திருக்க வேண்டும். தரை சேதம் அடைந்திருந்தால் அதை கேஸ் டிஸ்ட்ரிபியூட்டர் வரும்வரை அப்படியே வைத்திருக்கலாம் அல்லது அதைச் சரி செய்ததற்கான ரசீதை வைத்திருக்க வேண்டும்.
சிலிண்டர் இன்ஷூரன்ஸைப் பொறுத்தவரை இவ்வளவு தொகைக்குதான் உரிமைகோரவும் என எந்தவிதமான வரைமுறையும் கிடையாது.விபத்தின் தன்மையைப் பொறுத்தும் அதன் பாதிப்பைப் பொறுத்தும் உரிமைகோரவும் தொகை வித்தியாசப்படும்.

ஒரே ஒரு முறை பாலிசி எடுத்தால் போதும்! மாதம் வருமானம் வரும் எப்படி தெரியுமா?

காப்பீடு என்பது எதிர்காலத்திற்கான ஒரு பாதுகாப்பு ஏதாவது அசம்பாவிதம் நடைபெறும்போது அல்லது தீவிரமான உடல்நல பாதிப்பு அல்லது விபத்து உண்டாகும் பொழுது அதற்குரிய காப்பீடு இருந்தால் பொருளாதார அல்லது நிதி நெருக்கடியை மிகவும் எளிதாக எதிர்கொள்ள முடியும். ஒரு குடும்பத்தில் வருமானம் ஈட்டுபவர் திடீரென்று இறந்து விட்டால் அவருடைய குடும்பத்தின் எதிர்காலம் என்னவாகும் என்ற நிலை ஏற்பட்டுவிடும். அந்த சமயத்தில் ஆயுள் காப்பீடு இருந்தால் அதிலிருந்து கிடைக்கும் கணிசமான தொகை குடும்பத்திற்கு பொருளாதார தேவைகளை பூர்த்தி செய்வதற்கு … Read more

வாகன ஓட்டிகளின் ஆவணங்களை இனி சரிபார்ப்பு இல்லை ! டிஜிபி உத்தரவுக்காக காத்திருக்கும் மக்கள்!

Motorists' documents are no longer verified! People waiting for DGP order!

வாகன ஓட்டிகளின் ஆவணங்களை இனி சரிபார்ப்பு இல்லை ! டிஜிபி உத்தரவுக்காக காத்திருக்கும் மக்கள்! போக்குவரத்துத்துறை போலீசார் வாகன ஓட்டிகளை நிறுத்தி ஆவணங்களை சரிபார்ப்பது வழக்கம். வாகன ஓட்டிகளுடன் லைசென்ஸ், ஆர்சி புக் ,இன்சூரன்ஸ் முதல் அனைத்து ஆவணங்களை சரியான முறையில் அளிக்குமாறு கேட்கிறார்கள். இதில் வாகன ஓட்டிகள் சரியான ஆவணத்தை வைத்திருக்க வில்லை என்றால் அபராதம் கட்டணம் வசூலிக்கப்படும். இதனால் வாகன ஓட்டிகள் ஆவணம் சரிபார்க்கும் என்ற பெயரில் வாகன ஓட்டிகளை நிறுத்தி பணம் வசூலிக்க … Read more

மக்களே இன்சூரன்ஸ் விஷயத்தில் தலையே போனாலும் இதை மட்டும் செய்யாதீங்க!

பொதுமக்களில் பலரும் ஓடிஓடி உழைத்தாலும் அந்த பணத்தை எப்படி சேமிப்பது என்று தெரியாமல் விழித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் விவரமறிந்தவர்கள் தாங்கள் ஒரு ரூபாய் சம்பாதித்தாலும் கூட அதனை மிகவும் சுலபமாக ஸ்மார்ட்டான முறையில் பெருக்கிக் கொள்வதற்கான வழி முறையை தேடிக் கொள்கிறார்கள். அந்த வகையில் பலர் நிதி திட்டத்திலும், வங்கி காப்பீட்டுத் திட்டத்திலும், தங்களுடைய பணத்தை பாதுகாப்பாக வைத்து விடுகிறார்கள். அந்த வகையில், எந்த ஒரு நிதிதிட்டத்திற்கும் முதல் நடவடிக்கை போதுமான காப்பீட்டு தொகையை முடிவு செய்வதாகும். … Read more

விவசாயிகளுக்கு ஏற்படும் பயிர்களின் நஷ்டத்தை தவிர்க்க இதை செய்வது கட்டாயம்! தகவல் சொன்ன கலெக்டர்!

It is imperative to do this to avoid crop loss to farmers! Collector who told the information!

விவசாயிகளுக்கு ஏற்படும் பயிர்களின் நஷ்டத்தை தவிர்க்க இதை செய்வது கட்டாயம்! தகவல் சொன்ன கலெக்டர்! இயற்கை சீற்றங்களினால் விவசாயிகள்தான் பெருமளவு பாதிப்பை அடைகிறார்கள். ஏனெனில் சில இடங்களில் அப்போதுதான் நாம் விதை விதைத்திருப்போம். சில இடங்களில் நாம் அறுவடை செய்யும் தருவாயில் இருப்போம். ஆனால் எதிர்பாராதவிதமாக கன மழையோ அல்லது சூறாவளி காற்றோ ஏற்படும் போது நமக்கு பயிர்கள் அனைத்தும் சேதம் அடைந்து லாபமே இல்லாமல் நஷ்டத்தில் போகிறது. நாம் பொதுவாக கைபேசி, டிவி, வாகனங்கள் போன்றவற்றிற்கு … Read more

இருசக்கர வாகனங்களில் இதை அகற்றினால் இது அவசியம்! உயர் நீதிமன்றம் அதிரடி!

This is a must have, for any Affiliate, promoting any program. High Court Action!

இருசக்கர வாகனங்களில் இதை அகற்றினால் இது அவசியம்! உயர் நீதிமன்றம் அதிரடி! பல இரு சக்கர ஓட்டுனர்கள் அழகிற்காக தங்களது வண்டிகளில் உள்ள சைடு கண்ணாடி அதான் ரியர் வியு கண்ணாடிகளை கழட்டி பத்திரமாக வைத்துவிட்டு வண்டியை மட்டும் ஓட்டுகின்றனர். இது பல சமயங்களில் அவர்களுக்கு பேராபத்தை விளைவிக்கின்றது. பின்னாடி வரும் வாகனங்கள் தெரியாமல் வளைவுகளில் முந்தும் போது எதிர்பாராத விதமாக விபத்துகளை சந்திக்கின்றனர். இருசக்கர வாகனங்களில் ரியர் வியூ கண்ணாடிகளை மாற்றுவதன் மூலமாக விபத்துக்கள் ஏற்படுகிறது … Read more