சென்னை அணியில் முதல் இரண்டு போட்டியில் பங்கேற்காத வெளிநாட்டு வீரர்கள்

சென்னை அணியில் முதல் இரண்டு போட்டியில் பங்கேற்காத வெளிநாட்டு வீரர்கள்

இந்த வருடம் ஐ.பி.எல். போட்டி இந்தியாவில் நடத்த முடியாது சூழ்நிலை எற்பட்டுள்ளதால் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்றப்பட்டது. இதற்காக எட்டு அணி வீரர்களும் துபாய்க்கு சென்று விட்டனர். இந்த நிலையில்  போட்டியின் தொடக்க ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் – நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. சி.எஸ்.கே. அணியில் உள்ள வேகப்பந்து வீரர் ஹசில்வுட்,  ஆல்-ரவுண்டர் சாம் கர்ரன்  ஆகியோர் முதல் 2 ஆட்டத்தில் விளையாட மாட்டார்கள். இருவரும் ஆஸ்திரேலியா – இங்கிலாந்து ஒருநாள் தொடர் … Read more

தனியார் கம்பனியால் கடத்தப்பட்ட பல லட்சம் மதிப்புள்ள லேப்-டாப்கள்

தனியார் கம்பனியால் கடத்தப்பட்ட பல லட்சம் மதிப்புள்ள லேப்-டாப்கள்

சார்ஜா தொழிற்பேட்டை பகுதியில் அதிக அளவில் தனியார் தொழில்நுட்ப நிறுவனத்தின் சார்பில் சேமிப்பு கிடங்கு உள்ளது. அங்கு லேப்-டாப்களை காணவில்லை என போலீசாருக்கு புகார் வந்தது. இதனை அடுத்து குற்றப்புலனாய்வு துறை அதிகாரிகள் அந்த பகுதியில் சோதனை மற்றும் கண்காணிப்பில் ஈடுபட்டனர். இதில் அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டு இருந்தது. மேலும், அந்த வீடியோ பதிவுகள் அடங்கிய டிஜிட்டல் கருவியையும் காணவில்லை. அங்கு கைரேகை உள்ளிட்ட எந்த ஒரு தடயமும் போலீசாருக்கு கிடைக்கவில்லை. இந்த நிலையில் … Read more

உலகின் மிகப்பெரிய சரக்கு கப்பல் இந்த நாட்டிற்கு வந்ததா?

உலகின் மிகப்பெரிய சரக்கு கப்பல் இந்த நாட்டிற்கு வந்ததா?

உலகின் மிகப்பெரிய சரக்கு கப்பலான ‘ஹெச்.எம்.எம்.டான்ஸ்க்’, துபாய் துறைமுகத்தின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள லண்டன் கேட்வே முனையத்தில் இருந்து இந்த துறைமுகத்திற்கு தற்போது வருகை புரிந்துள்ளது. தென்கொரிய நாட்டில் தயாரிக்கப்பட்ட இந்த கப்பல் பனாமா நாட்டில் பதிவு செய்யப்பட்டு அந்த நாட்டின் கொடி பறக்க விடப்பட்டுள்ளது. இந்த கப்பல் 1,312 அடி நீளமும், 200 அடி அகலமும் கொண்டதாகும். அதாவது 4 கால்பந்து மைதானங்களின் அளவுடைய கப்பல் இதுவாகும். இந்த ஆண்டு கட்டுமான பணிகள் நிறைவடைந்து கடந்த ஜூன் … Read more

நம்பர் ஒன் டென்னிஸ் வீராங்கனை திடிரென விலகல்

நம்பர் ஒன் டென்னிஸ் வீராங்கனை திடிரென விலகல்

உலகின் ‘நம்பர் ஒன்’ டென்னிஸ் வீராங்கனையான  ஆஷ்லி பார்ட்டி (ஆஸ்திரேலியா) கொரோனா பயத்தால் அமெரிக்க ஓபனில் பங்கேற்கவில்லை என்று தெரிவித்துள்ளார். இந்த நிலையில் வருகிற 27-ந்தேதி பாரீஸ் நகரில் தொடங்கும் ‘கிராண்ட்ஸ்லாம்’ போட்டிகளில் ஒன்றான பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் இருந்தும் கொரோனா பயத்தால் ஆஷ்லி பார்ட்டி விலகியிருக்கிறார். 24 வயதான ஆஷ்லி கடந்த ஆண்டு பிரெஞ்ச் ஓபனை வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

உச்சத்தை எட்டிய சீன – ஆஸ்திரேலிய மோதல்

உச்சத்தை எட்டிய சீன - ஆஸ்திரேலிய மோதல்

ஆஸ்திரேலியா-சீனா இடையே கொரோனா வைரஸ் தொடங்கி பல விவகாரங்களில் பிரச்னை நீடித்து வருகிறது.  சீனாவின் அரசு ஊடகமான சிஜிடிஎன் செய்தி தொலைக்காட்சி நிறுவனத்தில் ஷேங் லி என்ற பெண் செய்தித்தொகுப்பாளராக செயல்பட்டுவந்தார். இவர் ஆஸ்திரேலியாவை சேர்ந்தவர். இவர் தொகுத்து வழங்கும் செய்தியை கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் வேறு ஒருவர் தொகுத்து வழங்கி வந்தார். மேலும், ஷேங் லி எங்கு சென்றார் என்ற தகவல் வெளிவராமல் இருந்தது. கைது செய்யப்பட்ட ஷேங் லி-யை விடுதலை செய்யவேண்டும் என ஆஸ்திரேலியா தரப்பில் … Read more

இரண்டு கோடியை நெருங்கி வரும் மீண்டு வந்தவர்களின் எண்ணிக்கை

இரண்டு கோடியை நெருங்கி வரும் மீண்டு வந்தவர்களின் எண்ணிக்கை

சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் உருவான கொரோனா வைரஸ்  உலக நாடுகளுக்கே பெரிய தலைவலியாக இருந்து வருகிறது. இந்த கொடிய வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் இறுதிகட்டத்தை விஞ்ஞானிகள் எட்டியுள்ளனர்.  தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கும் இறுதி கட்ட முயற்சிகள் நடந்து  வந்தாலும் மருத்துவத் துறையினரின் சிறப்பான சேவையால் வைரஸ் பாதிப்பில் இருந்து பலர் மீண்டு வந்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 1 கோடியே 98 லட்சத்தை … Read more

ஐ.பி.எல் தொடர் மட்டுமே முக்கியமானது இல்லை

ஐ.பி.எல் தொடர் மட்டுமே முக்கியமானது இல்லை

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் சுவர் என அழைக்கப்படும் வீரர் ராகுல் டிராவிட். அதேபோல தற்போது இந்திய டெஸ்ட் அணியில்  முக்கியமான வீரராக வலம் வரும் 32 வயதான புஜாரா, ஒரு நாள் மற்றும் 20 ஓவர் போட்டிகளில் தொடர்ந்து நிராகரிக்கப்பட்டு வருகிறார்.  ஐ.பி.எல். ஏலத்தில் விலைபோகாத அவர் நேற்று அளித்த ஒரு பேட்டியில், ‘ஐ.பி.எல். ஏலம் வியூகங்களும், தந்திரமும் நிறைந்தது என்பதை அறிவேன். உலகத்தரம் வாய்ந்த தென்னாபிரிக்கா வீரரான அம்லா கூட விலை ஏலம்  போகவில்லை. … Read more

ஆல் ரவுண்டர் மார்ஸின் நிதான ஆட்டத்தால் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா அணி

ஆல் ரவுண்டர் மார்ஸின் நிதான ஆட்டத்தால் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா அணி

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பெரிய ஆபத்தை உண்டாக்கி வந்த நிலையில் அனைத்து துறைகளும் முடக்கப்பட்டு வந்தன. அந்த வகையில் விளையாட்டு துறையும் கடுமையாக பாதிக்கப்பட்டன.  கடந்த மார்ச் மாதத்தில் இருந்து எந்த வித போட்டியும் நடைபெறவில்லை. கடந்த ஜூலை மாதத்தில் இருந்து இங்கிலாந்தில் ரசிகர்கள் இன்றி போட்டிகள் நடத்தப்பட்டு வந்தன. இங்கிலாந்து – வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இங்கிலாந்து – பாகிஸ்தான் தொடர் ஏற்கனவே முடிந்த நிலையில் தற்போது இங்கிலாந்து ஆஸ்திரேலியா அணியுடன் விளையாடி வருகிறது. … Read more

வரலாறு காணாத அளவில் ஏற்பட்ட காட்டுத்தீ

வரலாறு காணாத அளவில் ஏற்பட்ட காட்டுத்தீ

அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாநிலத்தில் 33-ஆண்டுகள் காணாத அளவில் சேதம் ஏற்பட்டுள்ளதாகத் தீயணைப்புத்துறையினர் கூறியுள்ளனர். கலிஃபோர்னியாவில்,காட்டுத் தீச் சம்பவங்கள் வழக்கமாக நேரும் காலம் முடிவடைய இன்னும் 2 மாதங்கள் உள்ள வேளையில் இத்தகவல் வெளியாகியுள்ளது. இவ்வாண்டு ஏற்பட்ட காட்டுத் தீயால், குறைந்தது 7 பேர் இறந்தனர்.  4,100க்கும் அதிகமான தீயணைப்பாளர்கள், 24 வெவ்வேறு தீச் சம்பவங்களில் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். தொடரும் காட்டுத் தீச்சம்பவங்கள் 2 மில்லியன் ஏக்கருக்கும் அதிகமான நிலத்தை அழித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அது சுமார் 1.5 மில்லியன் … Read more

கொரோனா காலத்திலும் நெகிழ செய்த பூ வியாபாரிகள்

கொரோனா காலத்திலும் நெகிழ செய்த பூ வியாபாரிகள்

அமெரிக்காவின் விஸ்கான்சின் மாநிலத்தில் அமைந்துள்ள தாம்சன்  ஸ்டிராபெர்ரி பண்ணையில் வழக்கமாக, பழவகைகளும் பரங்கிக்காய்களும் வளர்க்கப்படும். வித்தியாசமாக, பண்ணையில் உள்ள 22 ஏக்கர் நிலத்தில் முழுக்க முழுக்க சூரியகாந்திச் செடிகள் நட்டு வைக்கப்பட்டுள்ளன! பூக்களைப் பார்க்க, சுற்றுவட்டாரத்தில் வாழும் குடும்பங்கள் திரண்டு வருகின்றன. பார்வையாளர்கள் பாதுகாப்பு இடைவெளியைக் கடைப்பிடிக்கும் வகையில் பூக்களிடையே இடைவெளி இருப்பதும் உறுதிசெய்யப்பட்டுள்ளது! பூக்கள் 15-க்கும் மேற்பட்ட திடல்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. பருவம் கடந்துகொண்டிருந்தது. ஆனால் கிருமித்தொற்று மறைவதாகத் தெரியவில்லை. பூக்களைப் பார்த்தாவது மக்களின் முகங்களில் சிரிப்பு … Read more