உலகிற்கு முதலில் அறிவித்தது சீனாதான்?

உலகிற்கு முதலில் அறிவித்தது சீனாதான்?

 உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் 200 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி மனித இனத்துக்கே பெரிய ஆபத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த கொடிய வைரஸால் உலக நாடுகள் அனைத்தும் இயல்பு நிலைக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றன. மேலும் இந்த வைரசுக்கு மருந்து கண்டுபிடிக்க உலக நாடுகள் அனைத்தும் தீவிர முயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ பேசும்போது கிருமிப் பரவல் தோன்றியதை அரசியலாக்குவதோ, அதன் தொடர்பில் களங்கம் கற்பிப்பதோ கூடாது. … Read more

கொரோனா பாதிப்பால் நாடாளுமன்றம் மூடப்படும்

கொரோனா பாதிப்பால் நாடாளுமன்றம் மூடப்படும்

தென்கொரியாவில் புதிதாக 441 பேருக்குக் கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மார்ச் தொடக்கத்தில் அங்குப் பெரிய அளவில் கிருமிப்பரவல் ஏற்பட்டது. அதன்பிறகு, இவ்வளவு அதிகமானோருக்க நோய்த்தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருப்பது இதுவே முதன்முறை. தென்கொரியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 18,700 ஐக் கடந்துள்ளது. கிருமித்தொற்றுக்கு ஆளாவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. செய்தியாளர் ஒருவருக்கு நோய்த்தொற்று உறுதிப்படுத்தப்பட்டதால், இன்று தென்கொரிய நாடாளுமன்றம் மூடப்படும். கிருமிப்பரவலை முறியடிக்கும் நடவடிக்கைகள் தொடர்பில் நடைபெற்ற நாடாளுமன்ற அவசரக் கூட்டத்தில் அதுபற்றி முடிவெடுக்கப்பட்டது. தலைவரும் அதிகாரிகள் சிலரும் பங்கேற்ற, தென் … Read more

நோய்ப்பரவலை உலக சுகாதார நிறுவனம் முறையாகக் கையாளவில்லை

நோய்ப்பரவலை உலக சுகாதார நிறுவனம் முறையாகக் கையாளவில்லை

கொரோனா நோய்ப்பரவலை நிறுவனம் கையாண்ட விதம் பற்றிய குறைகூறலுக்கு அனைத்துலகச் சுகாதார நெருக்கடிநிலையை அறிவிப்பதன் தொடர்பிலான விதிமுறைகளை மாற்றியமைப்பது குறித்து உலகச் சுகாதார நிறுவனம் ஆலோசித்து வருகிறது. இவ்வாண்டு ஜனவரி 30ஆம் தேதி, கொரோனா கிருமிப்பரவல் தொடர்பில் பொதுச் சுகாதார அவசரநிலையை உலகச் சுகாதார நிறுவனம் அறிவித்தது. அப்போது, சீனாவில் நூற்றுக்கும் குறைவான மக்கள் நோயால் பாதிக்கப்பட்டிருந்தனர் சீனாவுக்கு வெளியே நோயால் எவரும் உயிர் இழக்கவில்லை. எனினும், நோய்ப்பரவலை நிறுவனம் முறையாகக் கையாளவில்லை எனும் குற்றச்சாட்டு நிலவுகிறது. … Read more

ஆஸ்திரேலியாவில் புதிய கிருமித்தொற்றுச் சம்பவமா?

ஆஸ்திரேலியாவில் புதிய கிருமித்தொற்றுச் சம்பவமா?

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில், 11 புதிய கிருமித்தொற்றுச் சம்பவங்கள் பதிவானதைத் தொடர்ந்து மேலும் பலர் பாதிக்கப்பட்டிருக்கலாம் எனும் அச்சம் எழுந்துள்ளது.  குவீன்ஸ்லந்து மாநிலத்தில் உள்ள சீர்த்திருத்த நிலையம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. அங்கு பணிபுரியும் ஊழியர் ஒருவருக்குக் கிருமி தொற்றியதைத் தொடர்ந்து அந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. விக்டோரியா மாநிலத்தில் நேற்று 113 சம்பவங்கள் உறுதிசெய்யப்பட்டன. கடந்த மாதத் தொடக்கத்தில் இருந்து அங்கு பதிவாகிய ஆகக் குறைவான எண்ணிக்கை அது. நோய்ப்பரவல் தணியத் தொடங்கியிருப்பதை அது குறிக்கலாம் எனக் கூறிய மாநில … Read more

நியூஸிலாந்தின் விமான நிறுவனங்களுக்கு இத்தனை மில்லியன் டாலர் நஷ்டமா?

நியூஸிலாந்தின் விமான நிறுவனங்களுக்கு இத்தனை மில்லியன் டாலர் நஷ்டமா?

கொரோனா கிருமித்தொற்றைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக விமானப் போக்குவரத்தில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன; அதனால் விமான நிறுவனங்கள் பெரும் நஷ்டத்தை சந்தித்து உள்ளன.  நியூஸிலாந்தின் Air New Zealand விமான நிறுவனத்திற்குச் சுமார் 300 மில்லியன் டாலர் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. உலக நாடுகளின் பல எல்லைகள் இன்னமும் மூடப்பட்டுள்ளன. Air New Zealand-இன் லாபம் இவ்வாண்டின் முதல் காலாண்டில் 74 விழுக்காடு சரிந்துள்ளது. இந்த நெருக்கடி நிலையிலிருந்து மீள்வதற்குச் சில செலவுக் குறைப்பு நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளதாக நிறுவனம் கூறியது. Air … Read more

இத்தனை மில்லியன் பேருக்கு இணையம் வழி கல்வி வசதி இல்லையா?

இத்தனை மில்லியன் பேருக்கு இணையம் வழி கல்வி வசதி இல்லையா?

உலகில் சுமார் 463 மில்லியன் பிள்ளைகளுக்கு இணையம் வழி கல்வி பெறும் வசதியில்லை என்று ஐக்கிய நாட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது. அவர்களில் 147 மில்லியன் பிள்ளைகள் தெற்காசியாவைச் சேர்ந்தவர்கள். கொரோனா நோய்த்தொற்று காரணமாக உலக நாடுகள் பலவற்றில் பள்ளிகள் மூடப்பட்டன. அதனால் மாணவர்கள் இணையம் வழி கல்வி பெற மாற்றுவழி தயார்ப்படுத்தப்பட்டது. இருப்பினும் மூன்றில் ஒரு பங்கு மாணவர்களுக்கு இணைய வசதி அல்லது சாதனங்கள் இல்லாமல் படிப்பில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 463 மில்லியன் பிள்ளைகள் படிப்பில் பின்தங்கியதால் … Read more

பாகிஸ்தான் அணியை பற்றி இப்படி கூறினாரா முன்னாள் வீரர்?

பாகிஸ்தான் அணியை பற்றி இப்படி கூறினாரா முன்னாள் வீரர்?

இங்கிலாந்து அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான  மோன்டி பனேசர் பாகிஸ்தான் அணியை பொறுத்தவரை பேட்டிங்கை விட பவுலிங்கே சிறந்து விளங்கும் என்று கூறினார். ஆடுகளம் ஸ்விங் மற்றும் சீமிங் ஆகியவற்றிற்கு ஒத்துழைக்கவில்லை என்றால், பேட்ஸ்மேன்களை தவறு செய்ய வைத்து விக்கெட்டுகளை எப்படி வீழ்த்த வேண்டும் என்பது பந்து வீச்சாளர்களுக்கு தெரியவில்லை. இதுபோன்ற பிரச்சினையில் ஜேம்ஸ் ஆண்டர்சன் மற்றும் ஸ்டூவர்ட் பிராட் ஆகியவரிடம் இருந்து நாம் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும். பாகிஸ்தான் அணியின் பலமே அவர்களுடைய பந்து … Read more

விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட வீரருக்கு கொரோனாவா?

விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட வீரருக்கு கொரோனாவா?

ஜனாதிபதி மாளிகையில் நடக்கும் தேசிய விளையாட்டு விருது வழங்கும் விழா நாளை நடக்கிறது. கொரோனா அச்சுறுத்தலால் முதல் முறையாக வீடியோ கான்பரன்ஸ் மூலம் நடத்தப்படும் இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை இந்திய விளையாட்டு ஆணையம் (சாய்) செய்து வருகிறது. விருது பெறுபவர்கள் பல்வேறு மாநிலங்களில் உள்ள ‘சாய்’ மையங்கள் வாயிலாக விருது விழாவில் பங்கேற்க இருக்கிறார்கள். இந்த நிலையில் அர்ஜூனா விருதுக்கு தேர்வு செய்யப்பட்டு இருக்கும் பேட்மிண்டன் இரட்டையர் பிரிவு வீரர் சாத்விக் சாய்ராஜ் ரங்கி ரெட்டி கொரோனா … Read more

தொடக்க வீரரான அஜிங்யா ரஹானே நிலைமை என்ன?

தொடக்க வீரரான அஜிங்யா ரஹானே நிலைமை என்ன?

இந்தியாவில் தற்போது கொரோனா வைரஸ் அதிகரித்து வருவதால் இந்த வருடம் ஐ.பி.எல் தொடரை இங்கு நடத்த முடியாது அதனால் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்றப்பட்டது. இந்த முறை வீரர்களும் வெவ்வேறு அணியில் மாறியுள்ளனர். அந்த வகையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக ஆடிய 32 வயதான அஜிங்யா ரஹானே, இந்த சீசனில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியுடன் இணைந்துள்ளார். ராஜஸ்தான் அணியில் ரஹானே தொடக்க வீரராக இறங்கினார். ஆனால் டெல்லி அணியில் தொடக்க வரிசை இடத்துக்கு ஷிகர் தவான், பிரித்வி … Read more

சர்வதேச அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்திய ஒப்பந்தம்

சர்வதேச அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்திய ஒப்பந்தம்

ஈரான் தன் நாட்டின் அணுசக்தி பொருட்கள், அணுசக்தி தொடர்பான நடவடிக்கைகள் குறித்த எந்த கேள்விக்கும் பதில் அளிக்கவில்லை என்றும், அணுசக்தி தளங்களை பார்வையிட அனுமதிப்பது இல்லை என்றும் ஐ.ஏ.இ.ஏ. என்று அழைக்கப்படுகிற சர்வதேச அணுசக்தி முகமை குற்றம் சுமத்தி வந்தது. இதையொட்டி இருவரும் கூட்டறிக்கை ஒன்றை நேற்று முன்தினம் வெளியிட்டனர். அந்த அறிக்கையில், “நல்ல நம்பிக்கையுடன் சர்வதேச அணுசக்தி முகமை குறிப்பிட்டுள்ள பாதுகாப்பு நடைமுறைப்படுத்தல் சிக்கல்களை தீர்ப்பதில் ஒரு உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக ஈரான் தானாக … Read more