இந்திய ஆக்கி அணி வீரர்களுக்கு கொரோனா

இந்திய ஆக்கி அணி வீரர்களுக்கு கொரோனா

இந்திய ஆக்கி அணி வீரர்களுக்கான பயிற்சி முகாம் ஒரு மாத இடைவெளிக்கு பிறகு வருகிற 20-ந்தேதி பெங்களூருவில் உள்ள ‘சாய்’ பயிற்சி மையத்தில் மீண்டும் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக வீரர்கள் அனைவரும் பெங்களூருக்கு வந்துள்ளனர். கொரோனா தடுப்பு பாதுகாப்பு விதிமுறைகளின்படி பயிற்சி முகாம் தொடங்குவதற்கு முன்னதாக வீரர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டன. இதில் இந்திய அணியின் கேப்டன் மன்பிரீத் சிங் மற்றும் சுரேந்தர் குமார், ஜஸ்கரன் சிங், வருண்குமார், கிரிஷன் பஹதூர் பதாக் ஆகியோர் கொரோனா … Read more

பயிற்சியை தொடங்கிய வீராங்கனைகள்

பயிற்சியை தொடங்கிய வீராங்கனைகள்

தெலுங்கானாவில் ஸ்டேடியங்களை திறந்து விளையாட மாநில அரசு அனுமதி அளித்ததை தொடர்ந்து இந்திய பேட்மிண்டன் வீரர், வீராங்கனைகளுக்கான தேசிய பயிற்சி முகாம் ஐதராபாத்தில் நேற்று தொடங்கியது. சிந்து, ஆலோசனைப்படி மட்டையை சுழட்டினார். தேசிய பயிற்சியாளர் கோபிசந்தும் சிந்துவுக்கு ஆலோசனைகளை வழங்கினார். இதே போல் சாய் பிரனீத், சிக்கி ரெட்டி ஆகியோரும் பயிற்சியை தொடங்கினர். கொரோனா தடுப்பு பாதுகாப்பு வழிகாட்டுதலின்படி பயிற்சி பகுதி முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டிருந்தது. வெளியாட்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.

காயத்தில் இருந்து மீண்ட முர்ரே

காயத்தில் இருந்து மீண்ட முர்ரே

‘கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி ஆகஸ்ட் 31-ந்தேதி நியூயார்க் நகரில் நடக்கிறது. இந்த போட்டியில் தகுதி சுற்று இன்றி இங்கிலாந்து வீரர் ஆன்டி முர்ரே, பெல்ஜியம் வீராங்கனை கிம் கிலிஸ்டர்ஸ் ஆகியோருக்கு ‘வைல்டு கார்டு’ சலுகை வழங்கப்பட்டு உள்ளது.  நேரடியாக பிரதான சுற்றில் பங்கேற்பதற்கு வசதியாக முன்னாள் சாம்பியன்கள் முர்ரே நீண்டநாள் காயத்தில் இருந்து மீண்டு வந்துள்ளார். மூன்று குழந்தைகளின் தாயாரான 37 வயதான கிலிஸ்டர்ஸ் ஓய்வு முடிவில் இருந்து விடுபட்டு இந்த … Read more

வேகப்பந்து வீச்சாளராக வரவேண்டும் – கே.எல். ராகுல்

வேகப்பந்து வீச்சாளராக வரவேண்டும் - கே.எல். ராகுல்

இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா.  இந்தி நடிகையும், மாடல் அழகியுமான செர்பியா நாட்டை சேர்ந்த நடாசா ஸ்டான்கோவிச்சை காதலித்து திருமணம் செய்து கொண்டார். கடந்த ஜூலை 30ந்தேதி குஜராத் மாநிலம் வதோதராவில் உள்ள ஆஸ்பத்திரியில் ஆண் குழந்தை பிறந்தது. பல வீரர்கள் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர். ஹர்திக்கின் சகவீரரான கே.எல். ராகுல், ‘வேகப்பந்து வீச்சாளராக வரவேண்டும் என அவனிடம் கூறுங்கள்’  என பதிவிட்டிருந்தார்.

அமெரிக்கர்கள் இறக்கும் அபாயம்

அமெரிக்கர்கள் இறக்கும் அபாயம்

உலகின் வேறெந்த நாட்டையும் விட அந்த நாடு அதிகளவு பாதிப்பை கொரோனா வைரஸ் என்ற கண்ணுக்கு தெரியாத எதிரி அமெரிக்காவை பாடாய்ப்படுத்துகிறது.  நேற்று மதிய நிலவரப்படி அங்கு கொரோனா பாதித்து இறந்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 60 ஆயிரத்து 104 என்று அமெரிக்காவின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக கொரோனா தரவு மையம் தகவல் சொல்கிறது. வெள்ளை மாளிகையின் எபோலா வைரஸ் தடுப்பு நிபுணராக இருந்த ராப் கிளெயின் கருத்து தெரிவித்துள்ளார். பூமியில் மிக மோசமான இறப்பு எண்ணிக்கையை அமெரிக்கா … Read more

ஒரே நாளில் மேட்டூர் அணை நீர்மட்டம் 5 அடி உயர்வு!

ஒரே நாளில் மேட்டூர் அணை நீர்மட்டம் 5 அடி உயர்வு!

ஒரே நாளில் மேட்டூர் அணை நீர்மட்டம் 5 அடி உயர்வு! தொடர் மழையின் காரணத்தால் மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 45,000 கன அடி நீர் வருகிறது. காவிரி நீர்ப்பிடிப்புகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக அதிக மழை பெய்து வருவதால் கர்நாடக அணைகள் நிரம்பும் நிலையில் உள்ளது. கபினி அணை, கிருஷ்ணராஜ ஆகிய அணைகளுக்கு வரும் நீர் திறந்து விடப்படுகிறது. கர்நாடகா அணைகளில் இருந்து சுமார் வினாடிக்கு 60 ஆயிரம் கன அடி நீர் மேட்டூர் அணைக்கு வருகின்றது. … Read more

வெளிப்படையான விசாரணை நடத்தப்பட வேண்டும்

வெளிப்படையான விசாரணை நடத்தப்பட வேண்டும்

லெபனான் நாட்டின் தலைநகர் பெய்ரூட்டில் உலகையே உலுக்கிய இந்த வெடி விபத்தில் 100 பேர் பலியானதாகவும் 4,000 பேர் படுகாயம் அடைந்ததாகவும் முதல் கட்ட தகவல்கள் தெரிவித்தன. நேற்றைய நிலவரப்படி பலி எண்ணிக்கை 149 ஆக அதிகரித்திருக்கிறது. பெய்ரூட் வெடி விபத்து தொடர்பாக சுதந்திரமான மற்றும் வெளிப்படையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் லெபனான் அரசுக்கு அழைப்பு விடுத்துள்ளது. ஆணையத்தின் செய்தி தொடர்பாளர் ரூபர்ட் கொல்வில்  பெய்ரூட் வெடிவிபத்தில் பாதிக்கப்பட்டவர்களின் குரல்கள் கேட்கப்பட … Read more

45 நாளில் நடைமுறைக்கு வரும் – டிரம்ப்

45 நாளில் நடைமுறைக்கு வரும் - டிரம்ப்

டிரம்ப் அமெரிக்காவில் டிக்-டாக் செயலிக்கு தடை விதிக்க முடிவு செய்திருப்பதாக கூறினார்.மைக்ரோசாப்ட் நிறுவனமும் இதனை உறுதி செய்தது.இந்த நிலையில் டிக்-டாக் செயலிக்கு தடை விதிக்கும் நிர்வாக உத்தரவில் ஜனாதிபதி டிரம்ப் நேற்று கையெழுத்திட்டார். இந்த தடை உத்தரவு 45 நாளில் நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தடை உத்தரவு நடைமுறைக்கு வந்தவுடன் அமெரிக்காவை சேர்ந்த எந்த நிறுவனமும் டிக்-டாக்கின் தாய் நிறுவனமான பைட்டான்சுடன் எவ்வித பரிவர்த்தனைகளையும் செய்ய முடியாது என்று கூறினார்.

நான் ஒன்றும் ரோபோ கிடையாது

நான் ஒன்றும் ரோபோ கிடையாது

இங்கிலாந்து – பாகிஸ்தான் இடையிலான முதல் டெஸ்ட் மான்செஸ்டரில் நடைபெற்று வருகிறது. இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜாஃப்ரா ஆர்சர் திடீர் பவுன்சராகவும், அதிவேகமாகவும் பந்து வீசக்கூடியவர். ஆனால் மான்செஸ்டரில் அவரின் தீப்பொறி பந்து வீச்சை காண இயலவில்லை. 59 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட் வீழ்த்திய ஜாஃப்ரா ஆர்சர் கூறுகையில் ‘‘நாங்கள் நினைத்த மாதிரி ஆட்டம் சென்றதாக நினைக்கவில்லை. எங்களுடைய ஏராளமான பந்துகள் பேட்டில் பட்டு எட்ஜ் ஆகியது. ஒவ்வொரு நாளும் மணிக்க 90 மைல் வேகத்தில் பந்து வீச … Read more

அமெரிக்கா இரங்கல்

அமெரிக்கா இரங்கல்

கேரள விமான விபத்து குறித்து அமெரிக்கா இரங்கல் தெரிவித்துள்ளது. கேரள மாநிலம் கோழிக்கோடுக்கு துபாயில் இருந்து வந்த ஏர் இந்தியாவின் ஐ.எக்ஸ்.-1344 விமானம் தரையிறங்கும்போது விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 17 பேர் உயிரிழந்ததாகவும் 173 பேர்  படுகாயம் அடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது இந்த விபத்து குறித்து மிகவும் வருந்துவதாகவும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர்களுக்காவும், நண்பர்களுக்காகவும் நாங்கள் மிகவும் துயரப்படுகிறோம் தெரிவித்துள்ளது.