தமிழகத்தில் இந்த 15 மாவட்டங்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு : ஆய்வு மையம் எச்சரிக்கை !!

தமிழகத்தில் இந்த 15 மாவட்டங்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு : ஆய்வு மையம் எச்சரிக்கை !!

தமிழகத்தில் நிலவிவரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக இந்த 15 மாவட்டங்களுக்கு மிக கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இன்று காலை முதலே பரவலாக மழை பெய்து வரும் நிலையில், இந்த 15 மாவட்டங்களுக்கு மிக கனமழை பெய்யக்கூடும் என்ற ஆய்வு மையம் முன்னெச்சரிக்கை செய்துள்ளது. தமிழகத்தில் வேலூர், திருவள்ளூர் ,ராணிப்பேட்டை ,காஞ்சிபுரம் ,செங்கல்பட்டு, தேனி ,விழுப்புரம் ,திருச்சி ,கடலூர் ,கள்ளக்குறிச்சி ,புதுக்கோட்டை ,கரூர் ,திண்டுக்கல் … Read more

நகைக்கடை ஊழியர் செய்த மாபெரும் திருட்டு : சிசிடிவி கேமரா மூலம் கையும் களவுமாக சிக்கிய ஊழியர் !!

நகைக்கடை ஊழியர் செய்த மாபெரும் திருட்டு : சிசிடிவி கேமரா மூலம் கையும் களவுமாக சிக்கிய ஊழியர் !!

உதகமண்டலத்தில் (ஊட்டி) இயங்கி வரும் பிரபல நகைக்கடை ஒன்றில் சுமார் 30 லட்சத்துக்கும் அதிகமான தங்க நகைகளை எடுத்துக்கொண்டு, அதற்கு பதிலாக போலி நகைகளை வைத்து ஏமாற்றியதன் காரணமாக நகைக்கடை ஊழியர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஊட்டியில் இயங்கி வரும் செம்மனூர் நகைக்கடை ஒன்றில் சிறப்பு திட்டத்தின் கீழ் பொதுமக்கள் தங்களது பழைய நகைகளைக் கொடுத்துவிட்டு அதற்கு பதிலாக புதிய நகைகளை வாங்கிச் செல்லும் ஆஃபர் ஒன்றை வெளியிட்டது. இந்நிலையில் மேலாளர் தலைமையில் நடத்தப்பட்ட  மாதாத்திர … Read more

ஊழலில் சிக்கிய சுற்றுச்சூழல் அதிகாரி :!! லஞ்ச ஒழிப்புத் துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் பணம் தங்கம் வெள்ளி பறிமுதல் !!

ஊழலில் சிக்கிய சுற்றுச்சூழல் அதிகாரி :!! லஞ்ச ஒழிப்புத் துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் பணம் தங்கம் வெள்ளி பறிமுதல் !!

சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகாரி வீட்டில் நடத்தப்பட்ட திடீர் சோதனையில் கணக்கில் வராத 3.25 கோடி பணம் மற்றும் கிலோ கணக்கில் தங்கம், வெள்ளி பறிமுதல் செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் காந்திநகரில் உள்ள தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய சுற்றுச்சூழல் இணை முதன்மை பொறியாளராக பணியாற்றி வரும் பன்னீர்செல்வம் என்பவர்  கட்டுப்பாட்டில் திருவண்ணாமலை, விழுப்புரம், ஓசூர், தர்மபுரி,வாணியம்பாடி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய பணியில் இடுப்பட்டுள்ளார் . அங்கு அமையும் தொழிற்சாலைகளுக்கு அனுமதி … Read more

ரேஷன் கடைகளில் புதிய மாற்றம் !!

ரேஷன் கடைகளில் புதிய மாற்றம் !!

கரூர் மாவட்டத்தில் இணைய தொழில்நுட்ப கோளாறு காரணமாக ரேஷன் கடைகளில் பொருட்க்கள் வழங்கப்படும் நேரம் தற்காலிகமாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. ரேஷன் கடைகள் காலை 9 மணி முதல் பிற்பகல் 1 மணி வரையிலும், பிற்பகல் 2 மணி முதல் 6 மணி வரையிலும் செயல்பட்டு வந்த நிலையில், தற்போது 10:30 மணி முதல் பிற்பகல் 2:30 மணி வரை பொருட்கள் வழங்க இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. ரேஷன் கடைகளில் உள்ள தொழில்நுட்ப கருவின் இணைய இணைப்பு சரிவர இயங்காத … Read more

தமிழகத்துக்கு தண்ணீர் நிறுத்தியதால் ஆந்திர விவசாயிகள் எதிர்ப்பு !!

தமிழகத்துக்கு தண்ணீர் நிறுத்தியதால் ஆந்திர விவசாயிகள் எதிர்ப்பு !!

வேலூர் மாவட்டம், ஆந்திர மாநில எல்லை பகுதியான சித்தூர் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில், கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையின் காரணமாக அங்குள்ள அணை நிரம்பி வழிகிறது. தமிழ்நாடு, ஆந்திர எல்லைப்பகுதியான சித்தூர் பகுதி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் பெய்து வரும் கனமழையின் காரணமாக சித்தூர் அருகே கட்டப்பட்டுள்ள அணை நிரம்பி வழிந்தது.நேற்று அதிகாலை முதலே திருவலம் அருகே பொண்ணையாற்றின் பகுதியில் இருக்கையை தொட்டபடி தண்ணீர் இருந்தது. இதனால் 10 ஆயிரம் விவசாயிகள் … Read more

திருவனந்தபுரம் நங்கை அம்மன் பல்லாக்கு இன்று புறப்பாடு !!

திருவனந்தபுரம் நங்கை அம்மன் பல்லாக்கு இன்று புறப்பாடு !!

வருடம் ஒருமுறை நடக்கும் நவராத்திரி திருவிழாவையொட்டி, கன்னியாகுமரியிருந்து நங்கை அம்மன் ஊர்வலமாக திருவனந்தபுரத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. திருவனந்தபுரம் நவராத்திரி திருவிழா ஆண்டுதோறும் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகின்றது. இவ்விழாவிற்கு கன்னியாகுமரியிருந்து நங்கை அம்மன் வேளிமலை முருகன் மற்றும் தேவாரக்கட்டு சரஸ்வதி அம்மன் உள்ளிட்ட சாமி சிலைகள் திருவனந்தபுரத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, விழா முடிந்ததும் மீண்டும் அங்கிருந்து கொண்டுவரப்படும். வருட வருடம் நடைபெறும் இத்திருவிழாவில், இந்த ஆண்டு ஆண்டும் திருவனந்தபுரத்தில் நவராத்திரி விழா வரும் 17-ஆம் தேதி தொடங்கயுள்ளது. … Read more

நீட் தேர்வு முடிவுகளுக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் மனு !!

நீட் தேர்வு முடிவுகளுக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் மனு !!

மதுரை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நீட் தேர்வு முடிவுகள் வெளியிட தடை கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நீட் தேர்வானது திட்டமிட்டபடி கடந்த மாதம் 13-ஆம் தேதி நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து நீட் தேர்வு முடிவுகளை வரும் 16-ஆம் தேதி வெளியிடப்படும் என்று மத்திய அமைச்சர் ரமேஷ் போக்ரியால் தெரிவித்துள்ளார். இந்நிலையில் நீட் தேர்வு முடிவுகளை வெளியிடுவதற்கு தடைகோரி மதுரை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்காக 7.5% உள் ஒதுக்கீடு … Read more

இடுக்கி அணை நிரம்பி வருவதனைத் தொடர்ந்து எர்ணாகுளம் பகுதிக்கு வெள்ள அபாய எச்சரிக்கை !!

இடுக்கி அணை நிரம்பி வருவதனைத் தொடர்ந்து எர்ணாகுளம் பகுதிக்கு வெள்ள அபாய எச்சரிக்கை !!

கேரளாவில் உள்ள மிகப்பெரிய அணையான இடுக்கி அணை வேகமாக நிரம்பி வருவதால், எர்ணாகுளத்தில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கேரளா மாநிலத்தில் பெய்து வரும் தொடர் கனமழையின் காரணமாக ஆலப்புழா, எர்ணாகுளம், இடுக்கி, கொட்டயம் ,திருச்சூர், பாலக்காடு ,கோழிக்கோடு, வயநாடு ,மலப்புரம் ,காசர்கோடு ஆகிய 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டது. தொடர் கனமழையின் காரணமாக கேரளாவின் மிகப்பெரிய அணையான இடுக்கி அணைக்கு நீர்வரத்து அதிகமாக வருகிறது. இதனால் நீர்மட்டம் 2391.04 அடியை எட்டியதைதொடர்ந்து எர்ணாகுளத்துக்கு நீர் … Read more

கிடப்பில் கிடந்த டி.என்.பி.எஸ்.சி தேர்வு முறைகேடு குறித்து நடவடிக்கை !!

கிடப்பில் கிடந்த டி.என்.பி.எஸ்.சி தேர்வு முறைகேடு குறித்து நடவடிக்கை !!

டி.என்.பி.எஸ்.சி தேர்வு முறைகேடு குறித்து சிபிசிஐடி காவல்துறையினர் நடவடிக்கையால், மேலும் 6 பேர் கைது செய்துள்ளனர். முக்கியமாக கருதப்படும் டிஎன்பிஎஸ்சி தேர்வு வழக்கானது கிடப்பில் உள்ளதாக புகார் எழுந்த நிலையில், தற்பொழுது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த 2019-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்ற டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வில் முறைகேடு நடந்திருப்பதாக கீழக்கரை மற்றும் ராமேஸ்வரம் மையங்களில் தேர்வு எழுதிய நூற்றுக்கும் மேற்பட்ட நபர்களில் 40-க்கும் அதிகமானோர் முன்னிலை பெற்றனர். இதனால் சந்தேகமடைந்த நிலையில், முறைகேடு நடந்திருப்பதாக … Read more

சாலையோரம் கிடந்த தங்க நாணயங்கள் !! மக்கள் திரண்டதினால் பரபரப்பு !!

சாலையோரம் கிடந்த தங்க நாணயங்கள் !! மக்கள் திரண்டதினால் பரபரப்பு !!

ஓசூர் அருகே சாலையோரம் குவிந்து கிடந்த தங்க நாணயத்தை சேகரிப்பதற்காக பொதுமக்கள் திரண்டதால் , அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே பாகலூர் காவல் குடியிருப்பில் , கர்நாடக மாநிலம் சர்ஜபுரம் செல்லும் சாலை அமைந்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமையன்று சாலையோரம் திடீரென்று சென்றபோது தங்க நாணயங்களை, யாரோ வீசி சென்றிருப்பதாக தகவல் பரவியது. இதனால் அவ்விடத்திற்கு 200 -க்கும் மேற்பட்ட பொதுமக்கள் திரண்டு சேகரிக்கத் தொடங்கினார். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது. … Read more