”சிதம்பர ரகசியம் போல் என்னிடமும் ஒரு ரகசியம் உள்ளது” – ட்விஸ்ட் வைத்த குஷ்பு

அனல் பறக்கும் தேர்தல் களத்தில் சிதம்பரம் ரகசியம் போல் தன்னிடமும் ஒரு ரகசியம் இருப்பதாக கூறி அனைவரது கவனத்தையும் நடிகை குஷ்பு திசைத்திருப்பியுள்ளார். நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் ஆயிரம் விளக்கு தொகுதியில் அதிமுக கூட்டணியில் நடிகை குஷ்பு போட்டியிடுகிறார். வேட்பாளராக தன்னை அறிவித்த நாளில் இருந்து வீதி வீதியாக செல்லும் குஷ்பு தனக்கான வாக்குகளை சேகரித்து வருகிறார். செல்லும் வழியில் சிறுவர்களுடனும், பெண்களுடனும் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க செல்பி எடுத்தப்படி வாக்கு சேகரிக்கும் குஷ்பு டீ … Read more

பரபரப்பான அரசியல் சூழலில் திடீர் யாகம் நடத்திய சசிகலா- முக்காடு போட்டு பிரார்த்தனை

ராகு சன்னதியில் நாக தோஷம் நீங்க ஹோமம் வளர்த்து பூஜை செய்த சசிகலா தமிழக மக்கள் நலமுடன் வாழவும் நாகூர் தர்காவில் வழிபட்டதாக கூறினார். சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்த சசிகலா, ஜனவரி மாத இறுதியில் தண்டனைக்காலம் முடிந்து வெளியே வந்தார். தமிழகம் வரும் வழியில் பேசிய சசிகலா, தான் அரசியலில் பங்கேற்க உள்ளதாகவும் விரைவில் மக்களை சந்திப்பேன் எனவும் சூளுரைத்தார். இதனால் சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் … Read more

நேருக்கு நேர் விவாதிக்க தயாரா..? – ஆண்டவருக்கே சவால்

கோவையில் பாஜக சார்பில் போட்டியிடும் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்ட மத்திய அமைச்சர் கமல்ஹாசனுக்கு சவால் ஒன்றை விடுத்துள்ளார். தமிழக தேர்தல் களம் நாளுக்கு நாள் சூடுப்பிடிக்க தொடங்கியுள்ள நிலையில் களத்தில் நிற்கும் வேட்பாளர்களுக்கு ஆதரவாக நட்சத்திரங்களும் அரசியல் தலைவர்களும் வாக்கு சேகரித்து வருகின்றனர். அந்த வகையில் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனை ஆதரித்து மத்திய ஜவுளித்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார். கோவை தெற்கு பகுதி … Read more

அமைச்சரின் மகளா இவர்..? -ஜெயலலிதாவையே மிஞ்சுடுவார் போலிருக்கே..!

தேர்தலில் வியப்பூட்டும் பல நிகழ்வுகள் நடந்தாலும் அமைச்சர் ஒருவரின் மகள் மழை குரலில் தனது தந்தைக்காக அடுக்கடுக்கான வசனங்கள் பேசி வாக்கு சேகரித்தது பார்ப்போரை ரசிக்க வைத்தது. ஜெயலலிதா, கருணாநிதி மறைவுக்கு பிறகு தமிழக அரசியலில் பல்வேறு திருப்பங்கள் ஏற்பட்டுள்ளன. ஆளும் அரசுக்கு மத்திய அரசுடன் கூட்டணி அமைக்க, 10 ஆண்டுகளாக ஆட்சியில் இல்லாத எதிர்கட்சி இந்த தேர்தலில் வெற்றிப்பெற்றே ஆக வேண்டுமென்ற குறிக்கோளுடன் வியூகம் அமைத்து தேர்தலை எதிர்கொள்கிறது. ஜெயலலிதாவுக்கு பிறகு ஆட்சியை தக்க வைத்து … Read more

”ஓட்டுப்போட்டால் தினமும் ஒருலிட்டர் புதுச்சேரி பிராந்தி வழங்குவேன்” -இது வேற லெவல் தேர்தல்..!

எனக்கு ஓட்டுப்போட்டால் 18 வயது நிரம்பிய அனைவருக்கும் தினமும் ஒரு லிட்டர் பாண்டிச்சேரி பிராந்தி வழங்குவேன் என சுயேட்சை வேட்பாளர் ஒருவர் பேசி அனைவரையும் அதிர்ச்சி கொடுத்தார். நாளுக்கு நாள் தமிழக தேர்தல் களத்தில் நகைப்புக்கும், வியப்புக்கும் பஞ்சமில்லாத வகையில் வாக்காளர்களின் பிரச்சாரம் அமைகிறது. நேற்று முன் தினம் தனக்கு ஓட்டு போட்டால் நிலாவுக்கே சுற்றுலா அழைத்து செல்வேன் என சுயேட்சை வேட்பாளர் ஒருவர் வாக்குறுதி அளித்து வாக்கு சேகரிக்க, அவருக்கு டஃப் கொடுக்கும் விதமாக அந்தியூரில் … Read more

இது நல்ல ஐடியாவாக இருக்கே..! பெண் என்றால் ரூ.1 லட்சம் டெபாசிட்

பெண் குழந்தை பிறந்தால் ரூ.1 லட்சம் டெபாசிட், பெண்களுக்கு இலவச ஓட்டு உரிமம் வழங்கப்படும் என இல்லதரசிகளுக்கு குஷ்பு அளித்த வாக்குகள் வைரலாகி வருகிறது. தமிழக சட்டமன்ற தேர்தல் நாள் நெருங்கி வரும் சூழலில் தாங்கள் வெற்றி பெற்றால் தொகுதிக்கு என்னவெல்லாம் செய்வேன் என்ற வாக்குறுதிகளை பட்டியலிட்டுச் சொல்லி வேட்பாளர்கள் வாக்கு சேகரித்து வருகின்றனர். துண்டறிக்கைகளை மட்டும் வெளியிட்டு வாக்கு வேட்டை நடத்தி வரும் வேட்பாளர்கள் மத்தியில், எதையுமே சற்றே வித்தியாசமாக சிந்திக்கும் குஷ்பு தன் தொகுதிக்கு … Read more

ஒரு சிங்கம் எம்.எல்.ஏ.வாக வந்தால் எப்படி இருக்கும்..?- அனல்பறக்கும் பிரச்சாரத்தில் நமீதா..!

ஒரு சிங்கம் எம்.எல்.ஏ.வாக வந்தால் எப்படி இருக்கும்..? அதனால் நீங்கள் அனைவரும் சிங்கமான போலீசாக பணியாற்றிய அண்ணாமலைக்கு வாக்களியுங்கள் என்று நடிகை நமீதா வாக்கு சேகரித்தார். தமிழகத்தில் ஏப்ரல் 6ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதை ஒட்டி வாக்கு சேகரிப்பு நாளுக்கு நாள் பரப்பரப்படைந்து வருகிறது. கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் வேட்பாளர்களும், அவர்களுக்கு ஆதரவாக திரைப்பிரபலங்களும் வாக்கு சேகரித்து வருகின்றனர். இந்த தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜக போட்டியிடுகிறது. பாஜகவில் முக்கிய இடங்களில் நடிகை குஷ்பு, அண்ணாமலை … Read more

”ஓட்டுப்போட்டால் நிலாவுக்கே சுற்றுலா அழைத்து செல்வேன்” – இது லிஸ்ட்லையே இல்லையே..!

தாங்கள் வெற்றிப்பெற்றால் இலவசமாக அதை செய்வோம், இதை செய்வோம் என்று பிரதான கட்சிகள் வாக்குறுதிகளை அள்ளி வீச மதுரை வேட்பாளர் ஒருவர் நிலவுக்கு சுற்றுலா அழைத்து செல்வோம் என்று உலகமே வியக்கும் வகையில் அதிரடி வாக்குறுதிகளை அளித்து அனைவரையும் பிரமிக்க வைத்தார். மதுரை அனுப்பானடி பகுதியை சேர்ந்த துலாம் சரவணன் என்பவர் தனியார் தொலைக்காட்சியில் வேலைபார்த்து வரும் நிலையில் மதுரை தெற்குத் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடுகிறார். இவருக்கு குப்பைத் தொட்டி சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது. … Read more

மதுப்பிரியர்களுக்கு அதிர்ச்சி – 3 நாட்களுக்கு விடுமுறையாம்..!

சட்டமன்ற தேர்தலை ஒட்டி தமிழகத்தில் 3 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் மாதம் 6ம் தேதி தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. தேர்தல் நாட்கள் நெருங்கி வர அரசியல் கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையே தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் மாநில தேர்தல் ஆணையம் பாதுகாப்பு பணிகளை பலப்படுத்தி வருகிறது. தேர்தல் நேரங்களில் வாக்குச்சாவடிகளுக்கு பாதுகாப்பு அளிக்கவும், வாக்குப்பெட்டி உள்ள அறைக்கு முழு பாதுகாப்பு அளிக்கவும், தேர்தல் … Read more

”பெண்களின் இடுப்பு 8 போல் வளைவு நெளிவுடன் இருந்ததாம்” – தேர்தல் பிரச்சாரத்தில் சர்ச்சையாக பேசிய பிரபலம்

தமிழக பெண்களின் இடுப்பு எட்டு போன்று வளைவு நெளிவாக இருந்ததாகவும், வெளிநாட்டு பாலை குடித்ததால் அவர்கள் பேரல் போன்று ஊதி விட்டதாகவும் குதர்க்கமாக பேசி திண்டுக்கல் ஐ.லியோனி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார். பட்டிமன்ற பேச்சுகளின் போது சுவாரசியத்தை ஏற்படுத்துவதற்காக பெண்களையும், பிறரையும் கிண்டல் செய்து பேசும் சுபாவம் கொண்ட ஐ.லியோனி மேசைப்பேச்சுகளில் எதிர்கட்சியினரை ஆபாசமாகவும், தரைக்குறைவாகவும் விமர்சிப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளார். ஏற்கெனவே ஐ.லியோனியின் பேச்சுக்கள் சர்ச்சையை ஏற்பத்தினாலும் அது பெரிதாக பேசப்படவில்லை. ஆனால், பரபரப்பான இந்த சூழலில் தேர்தல் … Read more