இது நல்ல ஐடியாவாக இருக்கே..! பெண் என்றால் ரூ.1 லட்சம் டெபாசிட்

0
60

பெண் குழந்தை பிறந்தால் ரூ.1 லட்சம் டெபாசிட், பெண்களுக்கு இலவச ஓட்டு உரிமம் வழங்கப்படும் என இல்லதரசிகளுக்கு குஷ்பு அளித்த வாக்குகள் வைரலாகி வருகிறது.

தமிழக சட்டமன்ற தேர்தல் நாள் நெருங்கி வரும் சூழலில் தாங்கள் வெற்றி பெற்றால் தொகுதிக்கு என்னவெல்லாம் செய்வேன் என்ற வாக்குறுதிகளை பட்டியலிட்டுச் சொல்லி வேட்பாளர்கள் வாக்கு சேகரித்து வருகின்றனர். துண்டறிக்கைகளை மட்டும் வெளியிட்டு வாக்கு வேட்டை நடத்தி வரும் வேட்பாளர்கள் மத்தியில், எதையுமே சற்றே வித்தியாசமாக சிந்திக்கும் குஷ்பு தன் தொகுதிக்கு என்றே பிரத்யேகமான வாக்குறுதிகள் அடங்கிய மினி தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

அதிமுக கூட்டணியில் பாஜக சார்பில் சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிடும் குஷ்புவிற்கு பெண்களின் ஆதரவு நாளுக்கு நாள் கூடிக்கொண்டே செல்கிறது. வாக்காளர்களிடம் இன்முகத்துடன் ‘வாக்களியுங்கள் உங்கள் சகோதரிக்கு’ என இருகரம் கூப்பி வாக்கு சேகரித்து வரும் குஷ்புவுடன் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை செல்ஃபி எடுத்து மகிழ்கின்றனர். பிரச்சாரத்தில் ஈடுபட்ட சில நாட்களிலேயே தன் மீது அன்பை பொழிய ஆரம்பித்த மக்களுக்காக சற்று வித்யாசமான வாக்குறுதிகளை அள்ளிக்கொடுத்துள்ளார் குஷ்பு.

குஷ்புவின் தேர்தல் வாக்குறுதிக்ள் வாக்குறுதிகள்:

புற்று நோயாளிகள், இருதயநோயாளிகள் நலன் கருதி பாரதப் பிரதமரின் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு லட்சம் மருத்துவ காப்பிட்டு வசதி வழங்கப்படும்

ஆயிரம் விளக்குத் தொகுதில் உள்ள பூங்காக்கள் முறையாக பராமரிக்கப்படும் புதிய பூங்காக்கள் அமைக்கப்படும்

மாற்றுத்திறனாளிகளுக்கு உடனடியாக உதவித்தொகை வழங்கப்படும், திருநங்கைகள் வாழ்க்கை சிறக்க நிதி உதவி செய்யப்படும்

வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களில் பிறக்கும் பெண் குழந்தையின் பெயரில் லட்சம் வைப்பு நிதி ஏற்படுத்தப்படும்

18 முதல் 23 வயது வரை உள்ள இளம் பெண்களுக்கு வாகன ஓட்டுநர் உரிமம் இலவசமாக வழங்கப்படும்

8-ம் வகுப்பு 9-ம் வகுப்பு படிக்கும் மாணவ மாணவியர்களுக்கு இலவசமாக டேப்லெட்” வழங்கப்படும்

குறைந்த விலையில் மருந்தகம் மத்திய அரசின் திட்டமாக ஒவ்வொரு வார்டிலும் ஏற்படுத்தப்படும்

24 மணிநேரமும் சட்டமன்ற உறுப்பினரை தொடர்பு கொள்ள தொடர்பு எண் வழங்கப்படும்

பெண்கள், தங்கள் பிரச்சனைகளை குறைகளை கூற பெண்கள் குழு ஒவ்வொரு வார்டுக்கும் தொடங்கப்படும்

ரேஷன் கடைகளில் வழங்கப்படும் பொருட்கள் அனைத்தும் வீடுதேடி வந்துவிடும்

ப்ளஸ் 2 (+2) படிக்கும் மாணவ மாணவிகளுக்கு மேற்படிப்பு படிக்க பயிற்சி மையம் அமைக்கப்படும்

I.A.S படிக்கும் மாணவ மாணவிகளுக்கு பயிற்சி மையம் தொடங்கப்படும்

கர்ப்பிணி பெண்களை மருத்துமனைக்கு அழைத்து செல்ல ஒவ்வொரு வார்டிற்கும் ஆம்புலன்ஸ் வழங்கப்படும்

நடைபாதைகளில் கடை வைத்திருக்கும் அனைவருக்கும் முத்ரா வங்கி கடன் கிடைக்க உதவி செய்யப்படும்.

இவ்வாறு தனது வாக்குறுதிகளை குஷ்பு அள்ளித்தெளித்துள்ளார்

author avatar
CineDesk