டிரம்ப் மீண்டும் பதவிக்கு வந்தால் என்னவெல்லாம் நடக்குமோ

அமெரிக்காவின் மேற்குக் கரையோரம் கொழுந்துவிட்டு எரியும் காட்டுத்தீ மெக்ஸிகோஎல்லை வரை பரவியுள்ளது. குளிர்பருவம் தொடங்கிவிட்டதால், விரைவில் நிலைமை சீராகும் என்று அதிபர் டோனல்ட் டிரம்ப் கூறினார். ஆனால், விஞ்ஞானரீதியாக அதற்கு வாய்ப்பில்லை என்று இயற்கை ஆர்வலர்கள் கூறுகின்றனர். பருவநிலை மாற்றத்தைவிட, காடுகளை நிர்வாகம் செய்வதில் ஏற்பட்டுள்ள குளறுபடிகளே, தீக்கான காரணம் என்று டிரம்ப் நம்புகிறார். அதிபர் தேர்தல் வேட்பாளர் ஜோ பைடன் டிரம்ப்பின் கருத்துகளைச் சாடியுள்ளார். பருவநிலை மாற்றத்தைக் காரணமாக ஏற்றுக்கொள்ள மறுக்கும் டிரம்ப் மீண்டும் பதவிக்குவந்தால், … Read more

சீனாவுக்கு ஆப்பு வைத்த டிரம்ப் நிர்வாகம்

அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே தொடர்ந்து மோதல் நீடித்து வருகிறது. இந்த மோதல் கொரோனா வைரசுக்கு பின் உச்சத்தை தொட்டுள்ளது.  இந்த மோதலுக்கு பின் ஹூஸ்டனில் செயல்பட்டு வந்த சீன தூதரகம் மூடப்பட்டது. இந்த நடவடிக்கைக்கு பழிவாங்கும் விதமாக ஷெங்டூ நகரில் செயல்பட்டுவந்த அமெரிக்க தூதரகத்தை உடனடியாக மூடும்படி சீனா உத்தரவிட்டது. இதையடுத்து ஷெங்டூ தூதரகம் மூடப்பட்டது. இந்த விவகாரங்கள் இரு நாட்டிற்கும் இடையேயான விரிசலை மேலும் அதிகரித்துள்ளது. இதற்கிடையில், சீன நாட்டை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் அமெரிக்காவில் தங்கி கல்வி பயின்று … Read more

டிரம்ப்புக்கு கிடைக்க போகும் அந்த பெருமை

2021ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசுக்கு  அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இஸ்ரேல், ஐக்கிய அரபு அமீரகம் இடையே அமைதிப் பேச்சுவார்த்தைக்கு உதவிய வகையில் இவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும் என்று நார்வே நாடாளுமன்றம்  நோபல் பரிசு கமிட்டியிடம் பரிந்துரை செய்துள்ளது. அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவுக்கு 2009 ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டு இருந்தது. சர்வதேச அரசியல் ராஜதந்திரம் மற்றும் மக்களுக்கு இடையே ஒற்றுமையை ஏற்படுத்திய … Read more

டிரம்பால் மட்டுமே அமெரிக்காவை காப்பற்ற முடியும்

அமெரிக்காவில் இரட்டை கோபுர கட்டிடம் மற்றும் ராணுவ தலைமையகமான பென்டகன் மீது மோதி வெடிக்கச் செய்தனர். உலகையே உலுக்கிய இந்த தாக்குதலில் 3 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொன்று குவிக்கப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஒசாமா பின்லேடனை 10 ஆண்டுகளுக்குப் பின்னர் பாகிஸ்தானில் அமெரிக்க படையினர் சுட்டுக் கொன்றனர். இந்தநிலையில் டிரம்பால் மட்டுமே இரட்டை கோபுர தாக்குதல் போன்ற மற்றொரு பயங்கரவாத தாக்குதல் நடக்காமல் தடுக்க முடியும் என்று ஒசாமா பின்லேடனின் மருமகள் நூர் பின் லேடின் … Read more

நான் இந்தியாவை அதிகம் நேசிக்கும் நபராக உள்ளேன்

அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் பதவியேற்றதற்குப் பிறகு இந்தியாவுடனான அமெரிக்காவின் நட்புறவு நல்ல முறையில் முன்னேற்றம் அடைந்துள்ளது. ஜனாதிபதி டிரம்ப் பிரதமர் நரேந்திர மோடியின் சிறந்த நண்பராக விளங்கி வருகிறார். அதேபோல் ஜனாதிபதி டிரம்ப் குடும்பத்தினரும் இந்தியாவுடன் நட்பு பாராட்டி வருகின்றனர். டிரம்ப் பதவியேற்றதற்குப் பிறகு அவரது குடும்பத்தில் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட முதல் நபர் அவரது மகள் இவாங்கா டிரம்ப் ஆவார். இந்தநிலையில் தானும், தனது மகளும், மகனும் இந்தியாவை அதிகம் நேசிப்பதாக ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்துள்ளார். வெள்ளை … Read more

எந்த விதத்திலும் இனி டிரம்பை நம்புவது அவசியமில்லை

அமெரிக்காவில் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசியை அதிபர் தேர்தலுக்கு முன்பாக பயன்பாட்டுக்கு கொண்டு வந்துவிட வேண்டும் என்பதில் அதிபர் டிரம்ப் தீவிரமாக உள்ளார். சமீபத்தில் டிரம்ப் கூறும் போது, ‘அமெரிக்கா உருவாக்கியுள்ள கொரோனா தடுப்பூசி இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது’ என்று தெரிவித்தார். மேலும் தடுப்பூசி வினியோகத்துக்கு நவம்பர் 1-ந்தேதி முதல் தயாராக இருக்கும்படி மாகாணங்களுக்கு உத்தரவிடப்பட்டிருக்கிறது. இதற்கிடையே 3-ம் கட்ட சோதனைக்கு முன்பே தடுப்பூசிக்கு அவசரகால பயன்பாடு அடிப்படையில் அங்கீகாரம் அளிக்க வாய்ப்பு உள்ளது என்றும், அமெரிக்க உணவு மற்றும் … Read more